Wednesday, August 29, 2012

தமிழ்நாடு எக்ஸ்பிரஸ்


சென்ற மாதம் தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் விபத்துக்குள்ளானபோது ( :-(((( ) அந்த வண்டியில் பயணம் செய்த நாட்கள் நினைவில் வந்தன. அப்போ எழுத ஆரம்பிச்சது இந்த பதிவு, இன்னிக்குதான் முடிஞ்சது. ஒரு பத்து roundtrip அடித்திருப்பேன் அதில். அந்த நினைவுகள் bullet pointsஆக இங்கே இந்த பதிவில்.

** மத்தியப் பிரதேசத்தில் பல மலைக்குகைகள் [tunnels] வரும். அவை ஒவ்வொன்றையும் எவ்வளவு நொடிகளில் வண்டி கடக்கிறது என்ற கணக்கெடுப்பு எடுப்பேன். ஆனால் ஒரு முறைகூட முத்த சத்தம் செய்துவிட்டு, பக்கத்தில் இருப்பவரை அறைந்ததில்லை.

** மறுநாள் மதியம் சம்பல் பள்ளத்தாக்கை கடக்கும்போது, கொள்ளைக்காரங்க வருவாங்க, கல் எடுத்து வண்டியில் வீசுவாங்கன்னு ஒரு வதந்தி கேள்விப்பட்டிருந்ததால், பயந்துகொண்டே பயணம் செய்திருக்கிறேன்.

** பயந்துகொண்டே சீட்டு விளையாடும் மக்கள், அதே பெட்டியில் ராணுவத்தினர் யாராவது பயணம் செய்தால், பயமே இல்லாமல் (அவர்களையும் சேர்த்துக்கொண்டு!) தைரியமாக சீட்டு விளையாடுவார்கள். நான் வெறும் வேடிக்கை.

** சரியான கோடை காலத்தில், இரண்டாம் வகுப்பில் போகும்போது வெயிலின் தாக்கம் தெரியாமலிருக்க (என்) தலையில் தண்ணீர் ஊற்றிய காலமும் உண்டு; 2ACயில் செம குளிரால் போர்வையால் போர்த்தியவாறே உலாத்திய காலமும் உண்டு.

** பயணச்சீட்டை இணைத்தால்தான் ஆபீஸில் reimbursement கிடைக்கும் என்பது தெரியாமல், அதை நிலையத்துக்கு வெளியில் நிற்கும் டிக்கெட் செக்கரிடம் கொடுத்துவிட்டு நிதித்துறையில் கெஞ்சிக் கிடந்தேன் சில நாட்கள்.

** வண்டியில் வருவதையெல்லாம் எனக்கும் வாங்கிக் கொடுத்து பேசிக்கொண்டே வரும் மாந்தர்களையும்; அனைத்தையும் மூடிமூடி சாப்பிட்டு எனக்கு வெறும் சிரிப்பை மட்டுமே வழங்கிய நண்பர்களையும் பார்த்த நாட்கள் அவை.

** (சென்னைக்கு வரும்போது) போபால், ஜான்சி போன்ற நிலையங்களில் செய்தித்தாள் விற்பவர்கள், தங்கள் விற்பனையை அதிகரிக்க - ’சென்னையில் குண்டுவெடிப்பு. 20 பேர் பலி’ என்று கூவிக்கொண்டே விற்பார்கள். இது பொய்த் தகவல் என்று அறியாதவர்கள் அந்த செய்தித்தாளை விலை கொடுத்து வாங்குவார்கள். அப்படியும் அந்த செய்தித்தாளாவது சரியாக இருக்குமா என்றால், இருக்காது. உள்ளே இருக்கும் பக்கங்களெல்லாம் பழைய (முந்தைய தின) தாள்களாக இருக்கும். ஓரிரு முறை அனுபவப்பட்ட பிறகே எனக்கு புரிந்தது இந்த விஷயம்.

** நாக்பூரில் ஆரஞ்சு வாங்கிட்டு வான்னு ஒவ்வொரு முறையும் வீட்டில் சொல்வதால் ஒரு சின்ன கூடை வாங்கி வருவேன். ஒவ்வொருமுறையும் அதில் அஞ்சு ஆறுதான் நல்லா இருக்கும்.

சென்னை - தில்லி இடையே இரண்டாம் வகுப்பில் போக ஆரம்பித்து, 3AC, 2AC, விமானம் என்று படிப்படியாக முன்னேறினாலும், ஆபீஸ் பிரச்னையோ, அடிக்கடி, ‘என்னங்க, என்னங்க’ பிரச்னையோ இல்லாமல் நாள் முழுக்க தூங்கியவாறு, வேளாவேளைக்கு வண்டியில் கொண்டு வருவதை சாப்பிட்டு, மறுநாள் ஹாயாக ஊர் போய் இறங்குவதை மறுபடி ஒரு முறையாவது செய்யணும். அட, ஆபீஸ் விஷயமா போகும்போது குடும்பத்தை கூட்டிப் போகமுடியாதுல்லா?

***

 

7 comments:

திண்டுக்கல் தனபாலன் August 29, 2012 at 3:45 AM  

பல தகவல்கள்... தொடருங்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

கும்மாச்சி August 29, 2012 at 11:43 AM  

அனுபவங்கள் இனிக்க இனிக்க எழுதியிருக்கீர்கள் வாழ்த்துகள்.

முத்துலெட்சுமி/muthuletchumi August 29, 2012 at 11:23 PM  

டிவிட்டர் மாதிரி மட்டும் பதிவு போட ஆரம்பிச்சிட்டீங்களா :)
அந்த பேப்பர் கூவி விக்கிறதை நான் பார்த்ததே இல்லை.. நாக்பூர்ல ஆரஞ்சுவிப்பாங்கன்னும் தெரியல..எங்களை எல்லாம் சோன்பப்டி தான் கேக்கறாங்க வாங்கிட்டுவரச்சொல்லி..

shanuk2305 September 16, 2012 at 2:01 AM  

2AC train travellling is a amazing one. en palya nanban ippozhudhu dindigulil car driveraga irukkiran . oru murai ennai vali anuppa vandhu 2AC pettiyai parthu viyandha podhu en nenjam ilaghiyadhu. avanai kudumpathudam oru murai adhil payanam seyya vaikka vendum enbadhu en ennam.

shanuk2305 September 16, 2012 at 2:02 AM  

2AC train travellling is a amazing one. en palya nanban ippozhudhu dindigulil car driveraga irukkiran . oru murai ennai vali anuppa vandhu 2AC pettiyai parthu viyandha podhu en nenjam ilaghiyadhu. avanai kudumpathudam oru murai adhil payanam seyya vaikka vendum enbadhu en ennam.

மணல்கயிறு விஜயசாரதி September 16, 2012 at 1:37 PM  

"நாக்பூரில் ஆரஞ்சு வாங்கிட்டு வான்னு ஒவ்வொரு முறையும் வீட்டில் சொல்வதால் ஒரு சின்ன கூடை வாங்கி வருவேன். ஒவ்வொருமுறையும் அதில் அஞ்சு ஆறுதான் நல்லா இருக்கும்."

எனக்கும் இந்த டி.என் எக்ஸ்ப்ரெஸ் மற்றும் ஜி.டி யில் நிறைய பயணம் செய்த அனுபவம் உண்டு...அட அந்த நாக்பூரில் எத்தனை பேர் என்னவோ தில்லி பயணமே அந்த ஆரஞ்சு வாங்குவதற்காக என்பது போல, வாங்கிவிட்டு நம் எதிரில் வந்து, கொடுத்தால் வாங்கவே மாட்டோம் என்றும் அறிந்து கொண்டு அஞ்சு ஆறு முறை நம்மளை உசுபேத்துவது பலே பலே...

நானும் உங்க இன்ஸ்பிரேஷன்ல ஒரு ப்ளாக் போடறேன்..டில்லி டகால்டினு

சித்ரவேல் - சித்திரன் November 15, 2012 at 3:31 AM  

சிறந்த பயண அனுபவம் .. எங்களையும் தூண்டிவிட்டது நண்பரே

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP