எப்படி இருக்கீங்க? எப்படி இருந்துச்சு உங்க நாளு?
என்னோட நாள் எப்படி இருக்கும்னு யாராலும் சொல்லமுடியாது. ஒரு நாள் பயங்கர பிஸியா இருக்கும். சில நாட்கள் ஒரு (வாடிக்கையாளர்) அழைப்பும் இருக்காது. அட, ஒரே நாள்லேயே காலையில் பிஸியா இருப்பேன். மாலையில் ஒண்ணுமே இருக்காது. ஆனா, எனக்கு இந்த வேலை சரியா பிடிச்சிருக்கு. ச்சின்ன வயசிலிருந்தே மார்க்கெடிங்தான் எனக்கு பிடிக்கும். அதே போல் இந்த வேலைக்கு வந்துட்டேன்.
மேற்கண்ட பாராவை படிச்சிட்டீங்களா? இது யார் சொன்னது? சொல்றேன். தற்போது தங்கியிருக்கிற Guesthouseலே கூட இருக்கற ஒருவரை நேற்று மாலை ஒரே ஒரு கேள்வி கேட்டேன் - எப்படி இருந்துச்சு உங்க நாள்?. அவ்வளவுதான். அதுக்கு அந்த மனுசர் படபடவென பொரிஞ்சி தள்ளியதுதான் அது. டேய், நான் என்ன கேட்டேன்? உன் நாள் எப்படி இருந்துச்சு? அதுக்கு என்ன சொல்லணும்? நல்லா இருந்துச்சு, நல்லா இல்லே - அவ்வளவுதானே? ஏன் நீ தேவையில்லாமே பேசிட்டே போறே? - இதெல்லாம் நான் மனசுக்குள்ளே கேட்டது.
இதை விடுங்க. தலைப்பில் இருக்கும் முதல் கேள்வியைப் பாருங்க. “எப்படி இருக்கீங்க?”. இதுக்கு மக்கள் சொல்லும் பதில்கள் இருக்கே.
காலை வேளையில் பல வேலைகளை செய்வதற்காக சுறுசுறுப்பாக ஆபீஸ் வந்து ஒருவரைப் பார்த்து இந்த கேள்வியைக் கேட்டா, அதுக்கு அவர் சொல்லும் பதில் - "ஏதோ போகுது. ஒண்ணும் சரியில்லே". அவ்வளவுதான். அவரு மூட்அவுட்டாக இருப்பது மட்டுமல்லாமல், நம்மையும் switchoff செய்துட்டு போய்விடுவார்.
அடுத்து இன்னொருத்தர். அவர் ஏதோ ஒரு யோசனையில் வந்திருப்பார். கேள்வி கேட்டவுடன், “அட அதை விடுப்பா. இந்த பிரச்னைக்கு ஒரு பதில் சொல்லு”ன்னு ஏதோ ஒரு விஷயத்தை தேவையில்லாமல் நம் தலையில் ஏற்றிவிட்டு போய்விடுவார். எனக்குத் தேவையா இது?
அடுத்தவர். "Fine". இதுதான் பதில். அஷ்டே. all silent. ஏன்யா, நீ என்னை திருப்பி கேட்கமாட்டியா?. சரி விடு. நாளைக்கு பார்க்கலாம்.
இனி அடுத்து வருபவர்தான் நிஜமாகவே டாப். இது ஐந்து வருடம் நான் வேலை பார்த்த என் அமெரிக்க பாஸ். காலை வந்தவுடன், ”குட்மார்னிங் ஸ்டீவ்,
எப்படியிருக்கீங்க”ன்னு கேட்டவுடன், சிரித்தபடியே பலமாக “Wonderful. Excellent. Cannot complain for such an awesome day" அப்படி இப்படியென்று உற்சாகத்துடன்
அவர் சொல்லும் பதில் இருக்கிறதே, தூக்கக் கலக்கத்துடன் ஆபீஸ் சென்று, அடுத்த வாரயிறுதி எப்போ வரும்னு சோம்பேறித்தனமாக காலண்டரை பார்க்கும் எனக்கு (மற்றும் பலருக்கு) செமையா ஊக்கத்தைக் கொடுக்கும். அந்த முழு நாள் இல்லேன்னாலும், கொஞ்ச நேரத்துக்காவது அவரது உற்சாகம் என்னிடம் வந்திருக்கும். வேலை பரபரவென நகரும். இதெல்லாம் அடுத்து ஒரு தேசியை பார்க்கிற வரைதான். அப்புறம் புஸ்ஸ்ஸ்....
அதற்குப் பிறகு, என்னை யார் கேட்டாலும் நானும், ”சூப்பர். அருமையா இருக்கேன். ஒரு பிரச்னையும் இல்லே”ன்னு உற்சாகமா சொல்ல ஆரம்பிச்சேன்.
அப்புறம், இதே கேள்வியை காலையில் வீட்டில் தூங்கி எழுந்ததும் சஹானாவிடம் கேட்க ஆரம்பித்தேன். “செல்லம். குட் மார்னிங். ஹௌ ஆர் யூ?”. நான் இவ்ளோ நேரம் உன்கூடதானேப்பா தூங்கிக்கிட்டிருந்தேன்னு ஆரம்பத்தில் சொன்னவங்க, இப்போல்லாம் ‘சூப்பர், அப்பா’ என்று உற்சாகமாக எழுந்து வரவும் ஆரம்பித்திருக்கிறார்.
அவ்ளோதாம்பா பதிவு. இப்போ சொல்லுங்க. நீங்க எப்படி இருக்கீங்க?
***
7 comments:
நாளைக்கு சொல்றேன்!!!
அது சரி... நல்ல கேள்வி...
ப்ச்.. அதெயேன் கேக்குறீங்க... :-))))
ஹிஹி இப்பிடியே எல்லாருக்கும் பழக்கிடுங்க தல :P
:) நைஸ்
அஹ்ஹா வித்யாசமான பதிவு. சரியாக சொன்னீர்கள், நல்லா இருந்தது என்று சொல்லும்பொழுது மற்றவர்க்கும் அந்த ஊக்கம் தொற்றிக்கொள்ளும், சந்தேகமில்லை, அது சரி பாஸ் நீங்க எப்படி இருக்கீங்க?
என்த்த சொல்ல.... பேசஞ்சர் ரயில் மாதிரி வாழ்க்கை போகுதுங்க...:)
Post a Comment