நொறுக்ஸ் - June 21, 2012
மனப்பாடம். அமெரிக்காவில் இதை கேள்விப்பட்டே இராத சஹானா, இங்கே தினமும் ஆங்கிலக் கவிதைகள், அறிவியல் கருத்துகள் அப்படி இப்படின்னு பல விஷயங்களை மனப்பாடம் செய்யற நிலைமைக்கு வந்துட்டாங்க.
அடிக்கடி நடக்கும் வகுப்புத் தேர்வைப் பற்றி அவர் சொல்லும் ஒரு குறை என்னன்னா - விடைகள் எழுதும்போது, புத்தகத்தில் இருக்கும் அதே வார்த்தைகளை, அப்படியே பயன்படுத்தினால்தான் சரியான மதிப்பெண் கிடைக்குது. கொஞ்சம் முன்னே பின்னேயோ, சொந்தமாக அதே பொருள் தரக்கூடிய வேறு வார்த்தைகளை போட்டு எழுதினால் தப்பு'ன்னு சொல்லி மதிப்பெண்களை குறைச்சிடறாங்க. இது என்ன நியாயம்?
கரெக்ட். இது என்ன நியாயம்? பதில் என்னிடத்திலும் இல்லை. இன்னொரு முறை திட்டி, ஒழுங்கா மனப்பாடம் பண்ணுன்னு சொல்லியாச்சு.
***
#365Process பற்றி கேள்விப்பட்டிருக்கலாம். டிவிட்டரில் சரமாரியா வர்ற விளம்பரங்களை பொறுத்துக் கொள்ளும் நண்பர்களுக்கு நன்றி. பொறுத்துக் கொள்ளாமல் ம்யூட் செய்தவர்களுக்கும் நன்றி. (ம்யூட்'னா என்னன்னு கேக்கறவங்களுக்கு, அதெல்லாம் ஒண்ணுமில்லே. மறந்துடுங்க!).
ஆரம்பிச்சி 115 நாட்கள் ஆயிடுச்சு. இப்போ ஓடும் தொடர்கள்: CMMi, 6Sigma, ITIL & BS7799. கூடிய விரைவில் 6Sigmaவிற்கு தேவையான புள்ளியியலைப் பற்றி எளிய அறிமுகப் பதிவுகளும் வரும். சுட்டி : http://365process.blogspot.com
***
குறுக்குவழிகளை கண்டுபிடிப்பதில் தேசிகள் கில்லாடிகள்னு சும்மாவா சொன்னாங்க. இதோ இன்னொரு உதாரணம்.
ஊரிலிருந்து திரும்பும்போது என் காரை விற்கணும்னு முடிவாச்சு. ஒரு தேசி வந்தாரு. தென்னிந்தியர். எல்லாம் முடிவாயிடுச்சு. ஒரு ஏற்பாடு செஞ்சிக்குவோமான்னு கேட்டாரு. என் காசை கொடுத்துடு, அப்புறம் எதுவேணா செஞ்சிக்கோன்னு சொன்னா, ஒரே அடம். சரி என்னய்யா அதுன்னா, காரை எனக்கு 'பரிசா' (Gift option) தர்ற மாதிரி தந்துடு. நான் தொகையை ரொக்கமா கொடுத்துடறேன் - அப்படின்னாரு.
அதனால் என்னய்யா ஆகும்னா, ரெஜிஸ்ட்ரேஷன் செலவு எனக்கு மிச்சமாகும், உனக்கும் பணம் உடனடியா கிடைச்சிடும்னாரு. நான் இந்த மாதிரி மேட்டரை கேள்விப்பட்டதேயில்லை, என்ன பிரச்னை வருமோ எனக்குத் தெரியாது, ஊருக்கு போற சமயத்துலே ஏதாவது வம்பில் மாட்டிக்க விரும்பலைன்னு சொன்னா, மறுபடி கெஞ்சல். அதெல்லாம் முடியவே முடியாதுன்னு சொல்லி, ஒழுங்கா ரெஜிஸ்ட்ரேஷன் செய்து வெச்சி, பணத்தை இரண்டு / மூன்று தவணையில் தர்றேன்னு சொன்னதால் நான் ஊருக்கும் வந்துட்டேன்.
அடுத்த பிரச்னை, பணத்தை என் வங்கிக் கணக்கில் போடுவது. அதற்கும் இணையத்தில் பரிமாற்றம் செய்தா ஒருசில டாலர்கள் செலவாகுமாம். அதை மிச்சப்படுத்தணும். சரி, ஒரு காசோலையை தபாலில் அனுப்புய்யா, மேட்டர் முடிஞ்சிடும்னா, காசோலையை காசு கொடுத்து வாங்கறேன், அதை செலவழிக்க மாட்டேன்றாப்பல. ஒரு நடை போய் என் கணக்கில் நீயே காசு போடுய்யான்னா, அவர் இருக்கும் ஊரிலிருந்து கொஞ்ச தூரம் போகணும் என் வங்கிக்கு, அதுவும் முடியாதாம்.
இது வேலைக்காகாதுன்னு, என் இன்னொரு நண்பரை அவர் அலுவலகத்திற்கு போய் காசு வாங்கி வந்து, அவருடைய காசோலையை என் வங்கிக் கணக்கில் போடச் செய்து... ஸ்ஸ்ஸ்ஸப்ப்ப்ப்பா... முடியலைடா.
***
அமெரிக்காவில் இருந்தவரை, இங்கிருந்து வந்து போகும்போது அல்லது தபாலில் தமிழ்ப் புத்தகங்களை வரவழைப்பேன். தபாலுக்கு டப்பு ஜாஸ்தியாயிடும். தவிர, புத்தகங்கள் சீக்கிரம் படிச்சி முடிச்சிட்டா அப்புறம் போர் அடிக்கும். அதனாலேயே, கொஞ்சம் கொஞ்சமா படிச்சி நாள் கடத்துவேன். இப்போதான் இங்கேயே வந்தாச்சேன்னு வாங்கி படிக்கலாம்னு ஒரு முடிவுக்கு வந்தாச்சு.
குட்மார்னிங் டு குட்நைட் எல்லாத்தையும் டிவிட்டரில் சொல்வதால், இப்படி படிக்கும் புத்தகங்களைப் பற்றியும் நம் அரும்பெரும் கருத்துகளை கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு இயம்பலேன்னா அவங்க கஷ்டப்படுவாங்க.
அதனால், http://sathyatv426.posterous.com ஒரு பக்கம் உருவாக்கிட்டேன். ஒரு சின்ன டிவிட்லாங்கர் அளவுக்குத்தான் பதிவுகள் இருக்கும்.
லிங்க்களை வழக்கம்போல் டிவிட்டரில் தர்றேன். இப்போதைக்கு முதல் புத்தக கருத்து : http://sathyatv426.posterous.com/139837098
***
7 comments:
நொறுக்ஸ் நல்லா இருக்கு.
நல்லாருக்கு சத்யா..ஃப்ரெஷ்ஷா ஊருக்கு திரும்பிருக்கீங்க..அந்த அனுபவங்கள நிறைய எழுதுங்க :)
டீச்சர்கிட்டப் பேசிப்பார்த்தீங்களா..கொஞ்சம் மாத்தி எழுதினா கொஞ்ச நாளாச்சும் மார்க் குறைக்காதீங்கன்னு..
( பட் ரிஸ்க் தான் )
//சொந்தமாக அதே பொருள் தரக்கூடிய வேறு வார்த்தைகளை போட்டு எழுதினால் தப்பு'ன்னு சொல்லி மதிப்பெண்களை குறைச்சிடறாங்க. இது என்ன நியாயம்?//
அதுதானே! சொந்தமா யோசிக்கவே விட மாட்டாங்க போல! கேக்கவே அசிங்கமா இருக்கு!
நம்ம ஆளுங்களோட அல்பதனத்திற்கு ஓர் அளவே இல்லை. எனக்குத் தெரிந்த ஒருவர் பழைய கார் வாங்குவதற்காக இன்னொரு தேசியிடம் அட்வான்ஸ் கொடுத்திருந்தார். இவருக்கு திடீரென்று நாடு திரும்ப வேண்டிய நிலமை ஏற்பட்டது. அந்த தேசியிடம் எவ்வளவு கேட்டும் அட்வான்ஸ் பணத்தை திரும்ப பெற முடியாமல் நாடு திரும்பினார்.
ம்ம்ம்
Post a Comment