Wednesday, December 28, 2011

கடைசியில் என்னையும் அரசியல்வாதி ஆக்கிட்டாங்க!



பலமான டிஸ்கி & எச்சரிக்கை:


சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு தகராறைக் குறித்து எழுதும் சுயவிளக்கப் பதிவு இது. சிரிப்பதற்கு விஷயம் ஒண்ணும் இருக்காது. இதை படிக்கலேன்னாலும் ஒண்ணும் ஆயிடாது. நல்ல மூடில் இருக்கிறவங்க, நல்ல பதிவு எதிர்பார்த்து வந்தவங்க நேரத்தை வீணடிக்க நான் விரும்பவில்லை. தயவு செய்து இந்த பதிவை படிக்காமல் மூடிவிடவும். நன்றி.


இந்த மாதிரி இன்னொரு பதிவும் வராது. அதனால் பயந்து 'unfollow' செய்துடாதீங்க.


***


ஒரு நண்பர் ஒரு நாள் டிவிட்டரில் யாரையோ திட்டிக்கிட்டே இருந்தாரு. திட்டினார்னா பத்து நிமிஷம், இருபது நிமிஷம் இல்லே - நாள் முழுக்க பல ட்வீட்கள் போட்டு திட்டிக்கிட்டே இருந்தாரு. இந்த திட்டல் எதுக்கு / யாருக்குன்னு யாருக்கும் தெரியாததால், TLல் இருந்த பலர் அந்த திட்டுகளை RT செய்தும், அவரை ஏற்றி விட்டுக் கொண்டும் இருந்தனர். நானும் புரியாமல் பார்த்துக் கொண்டிருக்க, அந்த திட்டுகள் அனைத்தும் எனக்குதான் விழுந்ததுன்னு மாலையில் புரிந்தது.

சரிதான், மனுஷனை இவ்வளவு டென்சன் செய்ததற்கு மன்னிப்பு கேட்டுக் கொண்டு, அவரை டிவிட்டரில் ப்ளாக் / அன்பாலோ செய்துவிட்டேன். அதோடு பிரச்னை தீர்ந்ததென்று நினைத்தேன். அது எவ்வளவு தப்புன்னு பிறகு புரிந்தது.

என்ன தப்புன்னு யோசிக்கிறீங்களா - அவர் நாள் முழுக்க என்னை திட்டியது தப்பில்லையாம். அதை நான் பப்ளிக்கா சொல்லிட்டு, அவரை ப்ளாக் செய்ததுதான் தப்பாம். அதாவது அந்த திட்டுகளை நான் கண்டுக்காமே இருந்திருக்கணுமாம். இப்போ நான் மன்னிப்பு கேட்டுவிட்டதால், அவரை அனைவரும் கேள்வி கேக்குறாங்களாம். அது அவருக்கு கஷ்டமா இருக்காம். சாமி, முடியல என்னாலே.

இருங்க. இன்னும் முடியல(!). இன்னொரு நண்பர் இது விஷயமா பஞ்சாயத்து செய்ய வந்தபோது சொன்னது - உங்களை திட்டிட்டோமேன்னு அவர் ரொம்ப வருத்தப்படறாரு. என்ன பண்றதுன்னு தெரியல.

எப்படி எப்படி? திட்டறது என்னை. வருத்தப்படறது அடுத்தவன்கிட்டேயா? நல்லா இருக்குல்லே நியாயம்? இத கேட்டா இன்னும் கதை வளருது.

உங்ககிட்டே மன்னிப்பு கேட்க வந்தா, நீங்க டக்குன்னு மூஞ்சி திருப்பிக்கிட்டு போயிடறீங்களாம். அப்புறம் அவரால் எப்படி பேச முடியும்?. இந்த இடத்தில் நிஜமாவே என்னால் முடியல. பாஸ். இந்த நடிப்பையெல்லாம் நாங்க தங்கப்ப-தக்கம் படத்திலேயே பாத்துட்டோம். தொலைபேசி, கைப்பேசி, மின்னஞ்சல் - இதிலெல்லாம்கூட பேசலாம்னு தெரியுமா? தெரியாதா?.

இப்படி கோபமாவே இருந்தா, உலகத்தில் நட்பு எப்படி மலரும்? அமைதி எப்படி பூக்கும்?. நீங்கதான் விட்டுக் கொடுத்து அட்ஜஸ்ட் செய்து போகணும். - இந்த அறிவுரை எனக்கு.

யப்பா சாமி. நாள் முழுக்க திட்டு வாங்கினவன் நான். அதுக்கு பிறகு எல்லா தப்பும் என் மேலேதானா?. சரி. ஒரே ஒரு தீர்வுதான் இதுக்கு.

தினமும் காலையில் எழுந்து என் தலையை தடவி பாத்துக்கறேன். என்னிக்கு என் தலையில் வடியறது ரத்தம் கிடையாது - தக்காளி சட்னின்னு தோணுதோ, அன்னிக்கு நானே வந்து 'திட்டு வாங்கினதுக்கு' மன்னிப்பு கேட்குறேன்.

எப்பூடி?

***

பல மாதங்களாக draftல் இருந்த பதிவை போட்டாச்சு. நிம்மதி ஆச்சு. இனி அடுத்த பதிவு புது வருடத்தில்.

அனைவருக்கும் இனிய இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் 2012.

***



6 comments:

Thamira December 28, 2011 at 11:29 AM  

பல மாதங்களாக draftல் இருந்த பதிவை போட்டாச்சு.//

சுத்தம். போயா யோவ்..

உன்னியப்போயி ஒருத்தன், அதுவும் நாள்பூரா திட்டியிருக்கான்னா அவன் எவ்ளோ பெரிய அப்பாடக்கரா இருப்பான்னு யோசிச்சிகினே இருக்கேன். முடியல.. :-))))))))

முத்துலெட்சுமி/muthuletchumi December 29, 2011 at 10:36 PM  

எதுக்கு திட்டினார்ன்னு கடசிவரை சொல்லவே இல்லையே நீங்க..:))

சின்னப் பையன் December 30, 2011 at 4:30 PM  

அக்கா -> ஹிஹி. நட்பை 'கட்' பண்ணனும்னு முடிவெடுத்துட்டா, 'ம்' சொன்னாக்கூட குற்றம்தான். :-)

Unknown December 31, 2011 at 11:58 AM  

புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்

Sathish January 5, 2012 at 6:11 AM  

Sir, புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். உங்க Blog முதல் முறையாக படிக்கிறேன். கண்டிப்பா Follow பண்ண போகிறேன்.
நானும் கோதவில குதிக்கறதா முடிவு செஞ்சு ஒரு Blog start பண்ணியிருக்கேன். உங்க feedback குடுங்க.
http://sathish-chennai.blogspot.com

chinnapiyan April 19, 2012 at 8:52 PM  

ரோசம், மானம் மரியாதையை எல்லாம் மனிதனின் பண்புகள். அதை வெளிக்காட்டாவிட்டால், இரத்தம் தக்காளி சட்னியாதான் தெரியவரும். நீங்கள் உங்கள் அளவில் கோபத்தை வெளிக்காட்டிவிட்டீர்கள். என்னை கேட்டால், அன்றே டி எல் ல் இன்னும் கொஞ்சம் சூடாக பதில் சொல்லியிருக்கலாம். ஆனால் இவைங்கேதான் @ மென்சன் போடாமதான் கீச்சுவாங்கே.அதிலிருந்தே தெரியுது அவைங்கே கோழைகள்னு. நான் சந்தேகப்படுவது "மாயா"வைத்தான். சரியா?

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP