Saturday, December 24, 2011

சென்னை பள்ளிகள் - பாகம் 1

ஒவ்வொரு வருடமும் டிசம்பர் வந்துட்டா எங்க ப்ராஜெக்ட் நீட்டிக்கப்படும். அப்படி நீட்டிக்கப்படுவதில் ஒன்றும் பிரச்னை/சந்தேகம் இல்லையென்றாலும் ஒரு திக்திக்தான். ஆனா, அதே சமயத்தில் இன்னொரு கேள்வியும் வந்து நிற்கும். ஒரு சில வாரங்கள் விவாதங்களுக்குப் பிறகு, அடுத்த ஒரு வருடத்திற்கு ஒத்தி வைக்கப்படும். அது என்ன கேள்வி?"போதும் இந்த நாடு. நம்ம ஊருக்கே போயிடலாமா?". பின்னணியில் பாட்டு ஒலிக்கும் - 'சொர்க்கமே என்றாலும்.. அது நம்மூரைப் போல வருமா?"


நான் பெங்களூர், ஹைதை, குர்காவ்ன், நொய்டா இப்படி எல்லா ஊரிலிருந்தும் relocate செய்திருக்கேன். ஆனா அப்போல்லாம் நிலைமை வேறு. இப்ப மிக முக்கியமான பாயிண்ட் - சஹானாவின் பள்ளி. சரியா அவங்க சொல்ற நேரத்தில் போய் அப்ளிகேஷன் வாங்கணும். ஒரு நுழைவுத் தேர்வு. அப்புறம்தான் பள்ளியில் சேர்க்கை. கொடுமை என்னன்னா, இதெல்லாம் தொடர்ச்சியா நடக்கற விஷயங்களும் இல்லை. சில பள்ளிகளில் அப்ளிகேஷனுக்கும், பள்ளியில் சேர்க்கைக்கும் நடுவில் ஆறு மாத காலங்களும் ஆகும். அதுக்காக, இந்தியா போயிட்டு வந்து, திரும்ப பள்ளி துவங்கும்போது போகணும். இப்படியெல்லாம் நிறைய மக்கள் செய்திருக்காங்க. (இணையத்தில் தேடும்போது தெரிந்தது). அடங்கப்பா, நாமும் இதேதான் செய்வோமா என்று எண்ணி, ஆராய்ச்சியை துவக்கினோம். நிறைய ஆட்களிடமும் ஆலோசனை கேட்டோம். அவர்களின் கருத்துகளும், பள்ளிகளின் அராஜகங்களும் பகீர் ரகம்.


நிறைய பேருக்கு தெரிந்திருக்கலாம். இங்கு அமெரிக்காவில் அரசு பள்ளிகளில் - அந்தந்த ஏரியாவில் இருப்பவர்களை அந்தந்த பள்ளிகள் கட்டாயமாக சேர்த்துக் கொள்ள வேண்டும். தனியார் பள்ளிகளிலும் அவ்வளவு தள்ளுமுள்ளு இருக்காது. (தனியாரில் காசுதான் மிகமிக அதிகம்).


ஊருக்கு வர்றோம். பக்கத்தில் எந்த பள்ளி இப்போ நல்லாயிருக்குன்னு கேட்டா, ஒரே குரலில் அனைவரும் சொல்வது - அமெரிக்காவிலிருந்து வர்றே. நீ சாதாரண பள்ளியிலெல்லாம் சேர்க்கக் கூடாது. பத்மாசேஷாத்ரி / DAV இந்த மாதிரி இடத்தில்தான் சேர்க்கணும்.


ஏன்யா, அமெரிக்காவிலிருந்து வந்தா பெரிய கொம்பா? அதுக்காக, பெரிய பள்ளியில்தான் சேர்க்கனுமா? ஏன், லோக்கல் பள்ளியில் படித்தால் படித்தா படிப்பு வராதா? அல்லது அங்கே படிக்கறவங்க நல்லா படிக்கலியா? ஏன், இப்படி கொலவெறியோட சுத்தறீங்கன்னு கேட்டா, அதுக்கு பல்வேறு காரணங்களை அடுக்குறாங்க.


அமெரிக்கா வரும்போது நான் lower-middleclassதான். ஆறு வருடத்தில் சிவாஜி ரஜினி மாதிரியெல்லாம் அப்படி சம்பாதித்து விட முடியாதுடான்னா எவன் கேக்கறான்? சரி விட்டுத்தள்ளுங்க. பெரிய பள்ளிகளுக்கான பாயிண்ட்கள் இவைதான்.


நமக்கு சென்னை. நங்கநல்லூர்.


வீட்டு பக்கத்திலேயே (சின்னமலையில்) PSBB Millenium இருக்குன்னு சொல்லி ஒரு கிலி ஏத்தினாரு. பிறகு இணையத்தில் தேடித் பார்த்தால் - அந்த இடத்தில் இரண்டாம் வகுப்பு வரை மட்டும்தான். மூன்றாம் வகுப்புக்கு போரூர் போகணும். அது ரொம்ப தூரம்னு தெரிஞ்சுது. (சஹானா மூன்றாம் வகுப்பு சேரணும்.) நல்ல வேளைன்னு நினைச்சிக்கிட்டேன்.


ஆனா, அப்படியும் அடங்காமே திரியற மக்கள் நம்ம மக்கள்னு அப்புறம்தான் தெரிஞ்சுது. என்னடான்னா, நங்கநல்லூரில் இருக்கற ஒரு பய, PSBB போரூரில் பையனை சேர்க்கணும்னு, சொந்த வீட்டையே வித்துட்டு, போரூர்லே வீடு வாங்கி பள்ளிக்குப் பக்கத்தில் போயிட்டானாம். அடப்பாவிகளா, எங்கே என் வீட்டையும் வித்துடுன்னு சொல்வாங்களோன்னு நினைச்சேன். இதுவரை அப்படி யாரும் கேட்கலை.அடுத்து இன்னொருத்தர். உறவினர்தான். அவர் மாதச் சம்பளம் ரூ.இருபதாயிரம். அவர் தன் பையனை ஆதம்பாக்கம் DMVயில் சேர்த்திருக்கிறாராம். அங்கே வருடத்திற்கு ரூ.நாற்பதாயிரம் கட்டணமாம். இதெல்லாம் கொஞ்சம் ஓவராயில்லே. பள்ளிக்கே தன் இரண்டு மாத சம்பளத்தை கொடுத்துட்டா, அப்புறம் மத்ததெல்லாம் எப்படி நடக்கும்? கேட்டா, நல்ல கல்வி. பையன் வருங்காலம் நல்லா இருக்க வேணாமா?. அவர் முடிவை மாத்தறது நம்ம கையில் இல்லே. ஆனா இது ரொம்ப டூ மச்னு பார்த்தாலே தெரியுது. சரிதானே?இன்னொரு நல்ல செய்தி. பெரிய பள்ளிகளில் சேர்க்கை குழந்தைகளுக்கு (PreKG) மட்டும்தான். மூன்றாம் வகுப்புக்கெல்லாம் அனுமதி கிடையாதாம். இதுக்கு என்னடா காரணம்னா, சின்ன வயசுலேந்து அவர்களை நல்லா தயார் செய்கிறார்களாம். நடுவில் வர்றவங்க தகுதி எப்படி இருக்கும்னு தெரியாதாம். அடங்கொப்பா முடியல என்னாலே. ஆனா என்னைப் பொறுத்தவரை அது ஒரு நல்ல விஷயம். என்னை யாரும் அந்த பள்ளியில் சேர்க்கலைன்னு சொல்லமுடியாது. அவங்கதான் சேர்க்கமாட்டாங்கன்னு சொல்லிடலாம்.இப்படியாக பெரிய பள்ளிகள் எதுவும் பக்கத்தில் கிடையாது, சேர்க்கவும் முடியாதுன்னு தெரிந்த பட்சத்தில் (அப்பாடா!), அடுத்த ரக பள்ளிகள் பட்டியல் எடுக்க ஆரம்பிச்சோம்.தொடரும்...5 comments:

க ரா December 24, 2011 at 8:24 PM  

உங்க பொண்ணு இங்க பொறந்திருந்தான்னா அதுக்கு நீங்க டபுள்மடங்கு டொனேஷன் வேற கொடுக்கனும். மிச்சவங்க கிட்ட ஒரு லட்சம் கேட்டா உங்ககிட்ட ரெண்டு லட்சம் கேப்பாங்க.

chinnapiyan December 24, 2011 at 8:32 PM  

நண்பரே, இதை எல்லாம் பார்த்தே, என் உறவினர்கள், சாதாரணமான அரசு பள்ளியில் சேர்த்து விட்டுள்ளார்கள்.காரணம் சொல்ல வேண்டியது இல்லை.மேலும் சாதாரண பள்ளிகளில்தான், உண்மையான மண்ணின் வாசனை உணர முடியும்.எலிசபெத் ராணி,ஜவஹர்லால் நேருவும் இதைத்தான் செய்தார்கள். நடை அருமை.வாழ்க வளர்க

அமுதா கிருஷ்ணா December 25, 2011 at 8:03 AM  

ஒரு 10 பாகங்கள் வருமா??

ஹுஸைனம்மா December 27, 2011 at 3:44 AM  

ஹும்... நானும் 2010-ல ஊருக்குப் போய், ஸ்கூல் நிலவரம் விசாரிச்சேன்; கதிகலங்கிப் போய், இங்கயே முடிஞ்சவரை கண்டினியூ பண்ணுவோம்னு ஓடியே வந்துட்டேன்.

ILA(@)இளா February 7, 2012 at 9:21 PM  

எப்படி படிக்காம விட்டேன் ??

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP