மடக்கவுஜ!
நீதான் வீட்டுக்குப் பெரியவன்
நீதான் சின்னவங்களை
அனுசரிச்சி போகணும்
அவங்க உன்னை விட
பெரியவங்க - நீதான்
அவங்ககிட்டே
மரியாதையா நடந்துக்கணும்
ச்சின்னச்சின்ன
விஷயங்களுக்காக
நண்பர்களோட
சண்டை போடாதே
அவங்க தயவு
பிறகு தேவைப்படும்
எவ்ளோ பெரிய
தவறு செய்திருந்தாலும்
நண்பர்களை
மன்னித்துவிடு
பிற்காலத்துலே
அவங்க உதவியாயிருப்பாங்க
உன் மேனேஜர்
திட்டினாரா
நீதான் ஏதாவது
தப்பு செய்திருப்பே
உன் குழுவில்
யாரேனும் சரியா
வேலை செய்யலியா -
உனக்கு வேலை
வாங்கத் தெரியல
எல்லாமே நான்தான்
செய்யணும்னா
எல்லா தப்பும்
என்னுது மட்டும்னா
ங்கொய்யாலே..
இந்த உலகத்துலே
மத்தவங்கல்லாம்
எதுக்காக வந்துருப்பாங்க?
***
பிகு: மடக், மடக்கி எழுதியால் இதை மடக் கவுஜ'ன்னு யாரும் திட்டும்முன் நானே தலைப்பில் சொல்லிட்டேன்!!
***
6 comments:
சுயத்தின் கூர்மையை மழுங்கச் செய்யும்
இன்றைய சூழலை மிக அழகாகச் சொல்லிப் போகும்
அருமையான படைப்பு
மடக் கவுஜ அல்ல
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 1
200 வது தொடர்பவராக என்னை
இணைத்துக் கொள்வதில் பெருமிதம் கொள்கிறேன்
மடக் கவுஜ மாதிரித் தெரியலை... மடக்கு கவிஜ!
மிகவும் ஆழத்தை உணர்த்தும் வரிகள்...
அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இந்த வார சினிமா செய்திகளின் தொகுப்பு (21.11.2011-27.11.2011)
நல்ல சிந்தனை.
நான் படிக்கலை, ஆனாலும் நெஞ்சைத் தொட்டுச்சி.
nallaa solliyirukkeenga..
Post a Comment