வெதர்.காம் சொன்னா வெங்கடேச பெருமாள் சொன்னா மாதிரி.
நாலு நாள் முன்னாடியிருந்தே அனைவரும் 'ஐரீன்' ஜெபத்தை துவக்கியிருந்தனர். நம்மாளு ஒருத்தர் மிக கவலையாக இருந்தார்.
சனி, ஞாயிறு ரெண்டு நாள் மட்டும் ஐரீன் வருதாம். திங்கள் மறுபடி வெயிலாம். என்ன கொடுமை இது என்றார். அவரவர் கவலை அவரவருக்கு.
நானோ, இவங்க எப்பவுமே இப்படிதான். ஐரீனால் நமக்கு ஒண்ணும் ஆகாதுன்னு சூனாபானா வடிவேல் மாதிரி கண்டுக்காமே போயிட்டிருந்தேன். நாம ஸ்டெடியா இருந்தா மத்தவங்களுக்கு பொறுக்காதே. பயமுறுத்த ஆரம்பிச்சாங்க.
இந்த தடவை புயல் பயங்கரமா இருக்கும். மின்சாரம் போயிடும். குடிதண்ணீர் கிடைக்காது. எதுவுமே செய்யமுடியாதுன்னு ஒரே டார்ச்சர்.
ஹிஹி. இதெல்லாம் ஜுஜுபி. நாங்க சென்னையிலேயே இதை விட அதிகமா பாத்துட்டோம்னா கேக்க மாட்டேன்றாங்க. மரியாதையா எல்லா முன்னேற்பாடும் செய்து வெச்சிக்கோ. அவ்வளவுதான் சொல்வேன்னு பாசமழை.
கூடவே ஒரு பழமொழி வேறே. வெதர்.காம் சொன்னா வெங்கடேச பெருமாள் சொன்னா மாதிரி.
சரி இனிமே இவங்களை சமாளிக்க முடியாதுன்னு கடைக்குப் போனா, பயபுள்ளைங்க எல்லாத்தையும் சூறையாடியிருக்காங்க. குடிதண்ணீர், பால், பழம், சூப், சிப்ஸ், பழரசம் - இப்படி எதுவும் கிடைக்கலை. இரண்டு மூன்று கடைகள் ஏறி இறங்கி கடைசியில் ஒரு கடையில் கிடைத்தது.
சனி மதியம் அனைத்திற்கும் நாங்கள் தயார்.
மெழுகுவர்த்தி/தீப்பெட்டி எடுத்து வைங்க என்றார் தங்க்ஸ். நம்ம வாய் சும்மா இருக்குமா? மெழுகுவர்த்திக்கு எகனைமொகனையா ஊதுவத்தியும் வேணுமான்னு கேட்டேன். சிறிது நேரம் காதை மூடிக் கொண்டேன்.
சனி மாலை ஆறு மணி.
மழை சீராக பெய்ய ஆரம்பித்தது. காற்று பலமாக இல்லை.
டிவிட்டரில் நம்ம ஊருக்கு கீழே இருக்கும் நியூயார்க்/ நியூஜெர்சி மக்கள் பயமுறுத்த ஆரம்பித்திருந்தார்கள். மழை பிச்சி உதறுது. மின்சாரம் போயிடுச்சு. மரங்கள் விழுது - அப்படின்னு.
சரிதான். நிஜமாவே புயல் வரப்போகுது போலன்னு நினைத்தோம்.
சனி இரவு 12 மணி:
மழை மட்டும் பலமாக பெய்தது. காற்று அவ்வளவாக இல்லை.
ஞாயிறு காலை 7 மணி:
எங்க ஊர் மேயர் ட்விட்டர், Facebook, தொலைபேசின்னு எல்லாத்திலேயும் - யாரும் வெளியே வராதீங்க. 11 மணிக்கு புயல் வருது அப்படின்னு பயமுறுத்திக்கிட்டே இருந்தாரு.
11 மணியாச்சு; 12 மணியாச்சு; 1 மணியாச்சு; புயலும் இல்லை. ஒரு பயலும் வரவில்லை.
எங்க மாநிலத்தில் கடற்கரையோரம் பிரச்னைகள் இருந்தாலும், ஊருக்குள் பெரிதாக எதுவும் ஆகவில்லை.
எங்க வீட்டு முன்னாடி சிறியதும் பெரியதுமாய் ஒரு பத்து மரங்கள் இருக்கு. அதில் ஒண்ணாவது விழும்னு நினைச்சோம். ஆனா, வெறும் குச்சி மாதிரி நிற்கும் மரங்கள் கூட விழவில்லை.
அடுத்த தடவை சென்னையில் புயல், மழைக் காலத்தில் இவங்களை கூட்டிப் போய் காட்டணும்.
*****
கீழிருக்கும் படம் எங்க பாஸ் வீட்டுக்குப் பக்கத்தில். கடல் ஒரு நூறு அடி ஊருக்குள்ளே வந்திருக்கு. அந்த ஸ்டாப் கம்பத்திற்கு பக்கத்தில் எங்க பாஸ் வீடு. பயந்துட்டே இருந்தாங்களாம். கடைசியில் ஒண்ணும் ஆகலை.
4 comments:
//கடைசியில் ஒண்ணும் ஆகலை//
ச்ச்சே... ‘ஐரீன்’ கவுத்திருச்சே!! :-((((
பெட்டர் லக் நெக்ஸ்ட் டைம்!!
ஒண்ணுமே ஆகலைன்னு எல்லாம் வருத்தப்படுவது ஓவர்.
அடுத்த மாதம் கொஞ்ச பேரை சென்னை அனுப்பி வையுங்கள்.மழையும் கொஞ்சமா புயலும் பார்த்துட்டு போகட்டும்.
//அந்த ஸ்டாப் கம்பத்திற்கு பக்கத்தில் எங்க பாஸ் வீடு. பயந்துட்டே இருந்தாங்களாம். கடைசியில் ஒண்ணும் ஆகலை. //
ஒருவேளை ஸ்டாப் சைன் பாத்து நின்னுட்டா ?
Post a Comment