Tuesday, November 3, 2009

வெள்ளி மாலை Vs ஞாயிறு மாலை

வெ.மா : அரை மணி நேரம்தான் ஆகும். அடுத்த வாரத்துக்கான துணிகள் எல்லாத்தையும், இந்த வாரயிறுதிலேயே அயர்ன் பண்ணி வெச்சிடறேன்.

ஞா.மா : சரி விடு. ஒரு நாளைக்கு அஞ்சு நிமிஷம்கூட ஆவாது. அன்னன்னிக்கு பண்ணிண்டா போச்சு!!!

*****

வெ.மா: நூலகத்திலேந்து வாங்கி வந்த புத்தகம் ஒண்ணு காணோம். வீட்டை நாளைக்கு தலைகீழா புரட்டி அதை எப்படியாவது தேடி எடுக்கறேன் பாரு.

ஞா.மா: என்ன. ரெண்டு டாலர் ஃபைன் கேப்பாங்க. அவ்ளோதானே? கொடுத்துட்டா போச்சு. அப்புறம் அந்த புத்தகம் கிடைச்சா, நாமே வெச்சிக்கலாம்.

*****

வெ.மா: நீல கலர் கார், கார் மேக கலர் மாதிரி கருப்பா ஆயிட்டு வருது. இந்த வாரயிறுதியில் வண்டியை தண்ணீர்-கழுவல் (water wash) பண்ணியே ஆகணும்.

ஞா.மா: வர்ற வியாழன்லேந்து மழைன்னு போட்டிருக்கான். வண்டியை கொஞ்ச நேரம் மழையில் நிக்க வெச்சா தானா சுத்தமாயிட்டு போகுது.

*****

வெ.மா : ஒரு காலுக்கான வெள்ளை காலுறையை மட்டும் காணோம். நாளைக்கு அதை தேடியே ஆகணும். இன்னொண்ணை தனியா எப்படி மாட்டிண்டு போறது?

ஞா.மா : ஒரு கால்லே கருப்பு காலுறையும், இன்னொரு கால்லே வெள்ளை காலுறையும் மாட்டிண்டு போனா யாருக்கு தெரிய போகுது? அப்படியே தெரிஞ்சாலும், அப்பத்தான் பாத்தா மாதிரி காட்டிக்க வேண்டியதுதான்.

*****

வெ.மா: ஒட்டடை நிறைய வந்துடுச்சு. நாளைக்கு வீட்டை முழுக்க சுத்தம் பண்ணிடவேண்டியதுதான். பக்கத்து வீட்டுலேந்து ஒட்டடை குச்சியை வாங்கி வைம்மா.

ஞா.மா: ச்சே பாவம் அந்த சிலந்திங்க. நம்மை விட்டா அதுக்கு வேற எது கதி? அதையெல்லாம் ஒழிக்க வேண்டாம். இப்போதைக்கு அப்படியே விட்டுடுவோம்.

*****

வெ.மா: இதுவரை பாக்காத படம் ஏதையாவது பாக்கணும். நம்ம மக்கள் பரிந்துரைத்த படங்கள் சில இருக்கு.

ஞா.மா: எவ்ளோ தடவை ஆனாலும் தலைவரோட படங்களைப் பாத்தா (பாட்ஷா, படையப்பா etc) இப்பவும் உடம்பு புல்லரிக்குது பாத்தியா!!!

*****

14 comments:

லோகு November 3, 2009 at 8:25 AM  

அப்படின்னா அந்த ரெண்டு நாள்ல என்ன தான் பண்ணறீங்க???

ச்சின்னப் பையன் November 3, 2009 at 9:16 AM  

வாங்க லோகு -> ஹிஹி. இப்படி வெளிப்படையா கேக்கற உங்க ஸ்டைல் பிடிச்சிருக்கு... (ஒண்ணுமே செய்யாம சும்மா இருந்தேன்றதுதான் இந்த இடுகையோட கருத்து, உட்கருத்து, சைட் கருத்து எல்லாமே!!!)

அறிவிலி November 3, 2009 at 9:16 AM  

எனக்கு..

வெ.மா: எப்படியாவது ஒரு போஸ்டுக்காவது மேட்டர் ரெடி பண்ணிரணும்.

ஞா.மா: ஆமா, அப்படியே நம்ம போட்டுட்டா மட்டும் யாரும் படிச்சுர போறாங்களாக்கும்...லூஸ்ல விடு..

எம்.எம்.அப்துல்லா November 3, 2009 at 11:08 AM  

வெள்ளி மாலை : பின்னூட்டத்துக்கெல்லாம் வேலையினால பதில் சொல்ல முடியல இந்த வாரம் தனித்தனியா பதில் சொல்லிடனும்

ஞாயிறு மாலை : எல்லாரும் எப்பவும் வர்ற நண்பர்கள்தானே.ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டாங்க :))

Rajan November 3, 2009 at 11:36 AM  

இது கதை அல்ல நிஜம்!!

Rajalakshmi Pakkirisamy November 3, 2009 at 11:52 AM  

//வெ.மா: எப்படியாவது ஒரு போஸ்டுக்காவது மேட்டர் ரெடி பண்ணிரணும்.

ஞா.மா: ஆமா, அப்படியே நம்ம போட்டுட்டா மட்டும் யாரும் படிச்சுர போறாங்களாக்கும்...லூஸ்ல விடு..//

//வெள்ளி மாலை : பின்னூட்டத்துக்கெல்லாம் வேலையினால பதில் சொல்ல முடியல இந்த வாரம் தனித்தனியா பதில் சொல்லிடனும்

ஞாயிறு மாலை : எல்லாரும் எப்பவும் வர்ற நண்பர்கள்தானே.ஒன்னும் தப்பா எடுத்துக்க மாட்டாங்க :))//

post, comment ellame ha ha ha

pappu November 3, 2009 at 1:10 PM  

உலகம் முழுவதும் ஒரே கதைதான்!

கடைக்குட்டி November 3, 2009 at 1:28 PM  

ஹா ஹா..
ரசி--த்தேன்.. :-)
சிரி--த்தேன்

RAMYA November 3, 2009 at 2:38 PM  

எப்படி மாத்தி மாத்தி வேலை செய்யற மாதிரி ஏமாத்தறீங்களா
அதுசரி :)

எல்லாத்தையும் விட அந்த கருப்பு கலர் / வெள்ளை கலர் சாக்ஸ் சூப்பர்!

சொல்லிடுங்க நீங்க அப்படி போட்டுக்கிட்டு போனீங்களா :-)

சரி ஏதோ புல்லரிக்குதுன்னு சொல்லி இருக்கீங்களே!

வீட்டுலேயே இருங்க வெளியே போனா மாடு விடாது :)

Mahesh November 3, 2009 at 4:17 PM  

அய்யோ... அய்யோ.... நீங்க இப்பிடி எல்லாம் ப்ளான் பண்ணி பண்ணுவீங்களா?

பரிசல்காரன் November 3, 2009 at 10:57 PM  

உங்களோட 100க்கு 90பதிவுகளைப் படிக்கறப்போ.. ’ச்சே.. நாம இந்த ஐடியாவை மிஸ் பண்ணீட்டோமேன்னு நெனைக்கறதுண்டு.. இது 90ல ஒண்ணு!

ஸ்ரீமதி November 4, 2009 at 1:17 AM  

அண்ணி
வெ.மா: இந்த வாரமாவது சொன்னத செய்ங்க பாக்கலாம்.

ஞா.மா: ம்ஹீம் நீங்க திருந்தவே மாட்டீங்க... என்னவோ பண்ணுங்க..

உங்கள் தோழி கிருத்திகா November 5, 2009 at 8:43 PM  

எவ்ளோ தடவை ஆனாலும் தலைவரோட படங்களைப் பாத்தா (பாட்ஷா, படையப்பா etc) இப்பவும் உடம்பு புல்லரிக்குது பாத்தியா!!!///////
agaaa agaaa....nalla pathivu...ennaipola oruthar irukaru :)

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP