நொறுக்ஸ் - வெள்ளி - 11/13/2009
போன மாதம் ஒரு நாள் எங்க மாநில தமிழ் சங்கத்திலே தீபாவளி சிறப்பு நிகழ்ச்சி - ஒரு இன்னிசை கச்சேரியும், ஈரோடு மகேஷின் சிரிப்பு நிகழ்ச்சியும் நடைபெற்றது.
ஈரோடு மகேஷ் : நல்லா சிரிப்பாத்தான் பேசுறார். வருடா வருடம் இங்கே வராப்பலயாம். இந்த வருடம்தான் எங்களுக்குத் தெரியும். வழக்கம்போல் எதையும் தயார் செய்து வைத்துக் கொள்ளாமல், அந்தந்த சமயத்துக்கேற்ப ஜோக்குகளை அள்ளித் தெளித்து கூடவே நல்ல மேற்கோள்களோடு பேசினார்.
நடிக்க வரலேன்னா என்ன செய்துட்டிருப்பீங்க? கலையுலகத்துலே உங்க லட்சியம் என்ன? - நடிகைகளைப் பார்த்து இப்படி வரலாற்று சிறப்புமிக்க கேள்விகளைக் கேட்கும் தொகுப்பாளர்களைப் போல் - இடைவேளையில் வெளியே வந்த மகேஷை மடக்கி நாங்களும் கேள்விகள் கேட்டோம். எப்படி எதையும் தயார் செய்துக்காமே கடகடன்னு ஜோக்கா பொளந்து கட்றீங்க? - கார்ல் மார்க்ஸையெல்லாம் எப்படி மேற்கோள் காட்டி பேசறீங்க? - இன்னுமா உங்களுக்கு கல்யாணம் ஆகலே?.
அரங்கத்தில், நாங்கள் எதிர்பார்க்காத - தங்கமணி எதிர்பார்த்த - ஒரு கடை இருந்தது. ப்ரின்ஸ் ஜுவல்லரி. நிகழ்ச்சி ஆரம்பிக்க கூப்பிட்டுக்கிட்டே இருக்காங்க - இங்கே தங்ஸும் அவர் நண்பிகளும் ப்ரின்ஸில் நின்னுட்டு வெளியே வரவே மாட்டேன்னுட்டாங்க.
கடை எங்கும் போகாது, நிகழ்ச்சி முடிஞ்சதும் நிறைய வாங்கித் தர்றோம்னு (ஏமாத்தி) உள்ளே கூட்டிட்டு போய் - வெளியே வரும்போது (10 மணி) - நல்ல வேளை, கடை மூடியிருந்தது.
கடை மட்டும் திறந்திருந்தா, எங்க நிலைமை ரொம்பவே கஷ்டமாயிருக்கும்!!!
**********
சஹானாவோட வகுப்பில் வாரந்தோறும் ஒருவரை - student of the week - அப்படின்னு தேர்ந்தெடுக்குறாங்க. சத்தம் போடாமே, சொல்ற பேச்சை கேட்டு, நல்ல புள்ளையா நடக்குறவங்களுக்கு இந்த 'விருது' கிடைக்குது. சில வாரம் யாருக்குமே கிடைக்காமையும் இருக்குது.
இன்னிக்கு அவனுக்கு கிடைச்சுது, இன்னிக்கு அவளுக்கு கிடைச்சுதுன்னு அப்பப்போ சொல்லிட்டே இருப்பாங்க.
இப்படியே எல்லாருக்கும் கிடைக்குதே. உனக்கு எப்போ அந்த விருது கிடைக்கும்? அப்படின்னு போன வாரம் கேட்டேன். கூடவே - மிஸ் சொல்ற பேச்சை கேட்டு நடந்தாதானே கிடைக்கும்? எப்பவும் கத்திக்கிட்டே, பக்கத்தில் இருப்பவரோட சண்டை போட்டுட்டிருந்தா எப்படி விருது கிடைக்கும்? அப்படின்னேன்.
அதுக்கு சஹானா - அதெல்லாம் ஒண்ணுமில்லே. எல்லாருக்கும் வரிசையா கொடுத்து வர்றாங்க. ஸ்கூல் (இந்த வருடம்) முடிய இன்னும் நிறைய நாளிருக்குல்ல. கண்டிப்பா எனக்கும் ஒரு நாள் குடுப்பாங்க - அப்படின்னுட்டாங்க.
ரொம்ம்ம்ப தெளிவா இருக்காங்கப்பா!!
********
வட அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையின் (Fetna) அடுத்த ஆண்டு விழா ஜூலை 2010ல் கனெக்டிகட்டில்தான் நடைபெறுகிறதாம். அரங்கம் நம்ம வீட்டு பக்கத்திலேதான். சரி ஒரு மூணு நாள் அங்கனயே டேரான்னு முடிவு பண்ணியிருக்கோம்.
*******
சமீபத்தில்(!!) வெளியான ஆறு (சூர்யா, திரிஷா) படத்தை வெகு சமீபத்தில்தான்(!!) பார்த்தேன். ஐசுவர்யாவும் சரி, மத்தவங்களும் சரி - படத்துலே கெட்ட வார்த்தைகளை சரமாரியா பயன்படுத்தறாங்க. cut எதுவுமில்லாமல் எல்லாமே தெளிவா கேக்குது வேறே. அதையெல்லாம் இப்போ கெட்ட வார்த்தையில்லேன்னு சொல்லிட்டாங்களா என்ன?
**********
மீண்டும் சஹானா!!!
பொம்பள புள்ளன்றது சஹானா விஷயத்துலே சரியாத்தான் இருக்கு. ஸ்கூல்லே, தொலைக்காட்சியில் இங்கேல்லாம் பாத்து - நகப்பூச்சு, உதட்டுச் சாயம், உயர்-செருப்பு இதெல்லாம் பெண்களுக்கு கட்டாயம்னு அம்மணி தெரிஞ்சிக்கிட்டாங்க. (கேட்டாலும் வாங்கிக் குடுக்கலைன்றது வேற விஷயம்!!).
எந்த கடைக்குப் போனாலும், பெண்களுக்கான பகுதிக்கு சென்று - எந்தெந்த பொருட்களை எங்கெங்கே(!!) தடவிக்கணும்/போட்டுக்கணும்னு விளக்குறாங்க.அதோட இல்லாமல், அந்த அக்காவை பாரு, அந்த மாதிரி காதுல மாட்டறது வாங்கணும், இந்த ஆண்டியை பாரு இந்த மாதிரி செருப்பு வேணும்னெல்லாம் கேக்குறாங்க.
அதனால் இப்பல்லாம் எங்கே போனாலும், நான் அங்கிருக்கும் அக்காவையும், ஆண்டியையும் தைரியமாய்(!!) பாக்க முடியுது. தங்ஸ் கேட்டாலும், நம்ம பாப்பாவுக்காக - அவங்க வளையலையும், கம்மலையும் பாத்தேன். அவ்வளவுதான். வேறொண்ணுமில்லைன்னு சமாளிச்சிடறேன்.. ஹிஹி..
******
14 comments:
//சரி ஒரு மூணு நாள் அங்கனயே டேரான்னு முடிவு பண்ணியிருக்கோம்.//
பரிவாரத்தோட நாங்க உங்க வீட்ல தங்கறதுன்னு முடிவு பண்ணியிருக்கோம்.
:))
குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்
//ஈரோடு மகேஷ் : நல்லா சிரிப்பாத்தான் பேசுறார் //
அவருக்கு பேச்சுன்னா உங்களுக்கு எழுத்து தல :)
//சத்தம் போடாமே, சொல்ற பேச்சை கேட்டு, நல்ல புள்ளையா நடக்குறவங்களுக்கு இந்த 'விருது' கிடைக்குது. சில வாரம் யாருக்குமே கிடைக்காமையும் இருக்குது //
உங்களுக்கு வீட்ல தினமும் அண்ணி இந்த விருதைத் தர்றதா கேள்விப்பட்டேன் :)
//வட அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையின் (Fetna) அடுத்த ஆண்டு விழா ஜூலை 2010ல் கனெக்டிகட்டில்தான் நடைபெறுகிறதாம்//
நம்ப பழமைபேசி அண்ணன் எனக்கு விழாக் கமிட்டி சார்பா அழைப்பு அனுப்புறதா சொல்லிருக்காரு. தங்குற பிரச்சனை முடிஞ்சுருச்சு :)
//குழந்தைகள் தின வாழ்த்துகள் என்றும் அன்புடன் வாழ்க வளமுடன்
தமிழ்நெஞ்சம்
//
ச்சின்னப்பையன்ங்குற பேரைப் பார்த்து குழந்தைகள் தின வாழ்த்தா?? இதெல்லாம் நெம்ப ஓவரூஊஊஊ
:)))))
:-)))
பழமைபேசி / அப்துல்லா அண்ண்ன்ஸ் -> நான் இடுகையிலேயே போட்டிருக்கணும். விட்டுப் போயிருச்சு... :-((
கண்டிப்பா வாங்க.. நம்ம வீடு மற்றும் பயபுள்ளங்க நிறைய பேரு வீடு இருக்கு. தங்குறதுக்கு பிரச்சினையே இல்லே...
பசி அண்ணே -> உங்களுக்கு தனி மெயிலிடரேன்...
/அதனால் இப்பல்லாம் எங்கே போனாலும், நான் அங்கிருக்கும் அக்காவையும், ஆண்டியையும் தைரியமாய்(!!) பாக்க முடியுது. //
ஹா...ஹா..ஹா..
சஹானாவுக்கு விருது கிடைக்க வாழ்த்துக்கள் :)
//
கனெக்டிகட்டில்தான் நடைபெறுகிறதாம். அரங்கம் நம்ம வீட்டு பக்கத்திலேதான். சரி ஒரு மூணு நாள் அங்கனயே டேரான்னு முடிவு பண்ணியிருக்கோம்.
//
athu varaikkum naan ingeye (CT) irunthaa... oru kalakku kalakkidalam :)
சரி சஹானாவுக்காக நீங்க பார்க்கறதா எழுதியிருக்கிறத உங்க தங்கமணி படிச்சாங்களா?
சஹானா ஸ்கூல்ல மட்டுமில்ல, ஒரு சில ஆபிஸ்லேயும் இப்படித்தான் நடக்குது.
ஈரோடு மகேஷ் போன்றோர் பல நிகழ்ச்சிகளில் பேசி பழகியவர்கள். அவங்க அனுபவத்துல ஒவ்வொரு சிட்டிவேஷனுக்கு ஒரு சில ஜோக்ஸ் இருக்கும்.
/
அந்த அக்காவை பாரு, அந்த மாதிரி காதுல மாட்டறது வாங்கணும், இந்த ஆண்டியை பாரு இந்த மாதிரி செருப்பு வேணும்னெல்லாம் கேக்குறாங்க.
அதனால் இப்பல்லாம் எங்கே போனாலும், நான் அங்கிருக்கும் அக்காவையும், ஆண்டியையும் தைரியமாய்(!!) பாக்க முடியுது. தங்ஸ் கேட்டாலும், நம்ம பாப்பாவுக்காக - அவங்க வளையலையும், கம்மலையும் பாத்தேன். அவ்வளவுதான். வேறொண்ணுமில்லைன்னு சமாளிச்சிடறேன்..
/
ஹா ஹா
:)))))))))))
ம்ம்ம்... நல்லா சமாளிக்கிறீர்யா...
"சஹானா"ன்னு பேர் இருக்கறவங்களுக்கு எல்லாம் விருது தனியா தேவைய என்ன? அவங்க தகப்பன்களே அவங்களுக்கு பெரிய விருதுதான்... ஹி ஹி ஹிஹ்ஹி...
என்ன நம்ம வீட்டுப்பக்கமெல்லாம் வரத நிறுத்திட்டீங்க? :(
சுவாரஸ்யம். நகைச்சுவை ரொம்ப இயல்பா வருது உங்களுக்கு. நிறைய எழுதுங்க பாஸ்.
அனுஜன்யா
Post a Comment