ஆபீஸில் தூங்கும் பாட்ஷா!!!
பத்திரிக்கைகளில் வரும் ஜோக்குகளில், ஆபீஸில் தூங்குவது பற்றிய ஜோக் கண்டிப்பாக ஒன்றாவது இருக்கும். மக்களும் விதவிதமா யோசிச்சி எழுதுவாங்க. ஹிஹி. நானும் அதே மாதிரி ஏதாவது எழுதலாம்னு யோசிச்சதோட விளைவுதான் இந்த இடுகை.
******
இதே சப்ஜெக்ட்டில் நான் இரண்டு நாள் முன்னாடி போட்ட ட்விட்டுகளை பார்த்துவிட்டு - தலைப்பில் சொன்ன அந்த கதைக்குப் போகலாம். (ட்விட்டருக்கு ஆள் சேக்கணுமே!!! அதுக்குதான் - அந்த சினிமாக்காரங்களை மாதிரி - ஒரு விளம்பரம்!!!).
தூக்கம் வர்றவனுக்கு - ஆபீஸ் மேஜை - பஞ்சு மெத்தை! ஹ!
மேனேஜர்! இந்த நாள் உன் டைரியில் குறிச்சி வெச்சிக்கோ. எப்படி என் தூக்கத்தை நீ கெடுத்தியோ, அதே மாதிரி உன் தூக்கத்தை கெடுத்து, உன்னை நடு ஹால்லே முழிமுழின்னு முழிக்க வெக்கலே... (டப்.. தொடையை தட்டி) என் பேர் ச்சின்னப் பையன் இல்லே.
யாரு தூங்குனா கண்ணு மூடி குறட்டை வந்து வாயிலேந்து பயங்கரமா ஜொள்ளு வழியுதோ - அவந்தான் தமிழ்! (ச்சின்னப்பையன்னு போடமாட்டேன்!!)
காலை கீழேயே வெச்சேன்னா - 5 நிமிஷம் தூங்கப்போறேன்னு அர்த்தம். டேபிள் மேலே தூக்கி வெச்சேன்னா - 5 மணி நேரம்னு அர்த்தம்
சேர்ந்தே இருப்பது ஆபீஸும் தூக்கமும். சேராமல் இ தூக்கமும் வேலையும். சொல்லக்கூடியது சாயங்காலம் எழுப்பு. சொல்லக்கூடாதது தூக்கத்தில் உளறல்
ஆபீஸ்லே இன்னிக்கு நான் தூங்கறேன்.. நாளைக்கு என் பையன்.. அப்புறம் என் பேரன் தூங்குவான். இதெல்லாம்.. எனக்கு என்ன பெருமையா???
ஆபீஸ் வந்தவுடன் தூங்கணும்னு... அந்த ஆண்டவன் சொல்றான்... விஷ்க்.. விஷ்க்... இந்த ச்சின்னப்பையன் தூங்கறான்... விஷ்க்.. விஷ்க்...
******
தலைப்புக்கான கதை:
பாட்ஷா வேலை பார்க்கும் இடத்தில் அவரது தம்பி மேனேஜராக இருக்கிறார். ஒரு நாள் பாட்ஷா அலுவலகத்தில் நன்றாக குறட்டை விட்டு தூங்கி விடுகிறார். அந்த குறட்டை சத்தத்தால் பலரது தூக்கம் கெடுகிறது. தூக்கமின்மையால் அவர்கள் பல்வேறு பிரச்சினைகளுக்கு ஆளாகின்றனர்.
இனி...
ரயில் போகும் சத்தம்... தடக் தடக்... தடக் தடக்... என்று கேட்கிறது.
பாட்ஷா தூக்கக் கலக்கத்தோடு அமர்ந்திருக்க - தம்பி வெளியிலிருந்து வந்து பேசுகிறார்.
ஆபீஸ்லே நாலு பேர் தூங்கவே முடியாம முழிச்சிக்கிட்டே இருக்காங்க. கெஸ்ட் ஹவுஸ்லே மூணு பேர், தூக்கம் இப்ப வருமா அப்ப வருமான்னு படுத்து கிடக்கறாங்க. டாக்டர்ஸ் அவங்க இன்னும் 24 மணி தூங்க மாட்டாங்கன்னு கெடு கொடுத்திருக்காங்க. அந்த மூணு பேர்ல நம்ம முதலாளியும் ஒருத்தரு.
நம்ம வீட்டு டிவியில் நாலு மொக்கை படங்களை வரிசையா போட்டப்போ ராத்திரி முழுக்க கண்முழிச்சி பாத்துக்கிட்டே இருந்தீங்க. இந்த ஊரே நின்னு வேடிக்கை பாக்க, கொட்டற மழையிலே பேப்பர் கப்பல் விட்டு விளையாடவே பொறந்தா மாதிரி, ராத்திரி முழுக்க தூங்காமே விளையாடிக்கிட்டே இருந்தீங்க.
நேத்து நீங்க தூங்கவிடாமே அலையவிட்ட நம்ம ஆபீஸ் ஆட்களை ட்ரீட் பண்ண டாக்டர்ஸ் மிரண்டு போய் நிக்கறாங்க. இது சாதாரண ஆள் விட்ட குறட்டை சத்தமில்லே. நாடி, நரம்பு, ரத்தம், சதை, புத்தி எல்லாத்திலேயும் தூக்கவெறி ஊறிப்போன ஒருத்தனால்தான் இப்படி தூங்கமுடியும்றாங்க.
உங்களால் தூக்கம் கெட்டுப் போன யாராவது ஒருத்தன் ரிசைன் பண்ணாலும், நானே உங்களை வேலை விட்டு தூக்க வேண்டியிருக்கும். அண்ணே... சொல்லுங்க... நீங்க யாரு... பாம்பேலே நீங்க எந்த ஆபீஸ்லே தூங்கிட்டிருந்தீங்க? இந்த தூக்கம்தான் உங்க வாழ்க்கையாயிருந்ததா. அப்போ நீங்க இங்கே முழிச்சிட்டிருந்தது வேஷமா? வேஷம் கலைஞ்சி
போச்சுன்னு பயமா இருக்கா? ஏன் ஒண்ணும் பேசாமே இருக்கீங்க? அப்போ, எங்ககிட்டே நீங்க எதையோ மறைக்கிறீங்க. சொல்லுங்க.. எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும். நீங்க யாரு? பாம்பேலே நீங்க எங்கே தூங்கிட்டிருந்தீங்க? சொல்லுங்க.
இதைக்கேட்ட அம்மாவுக்கு கோபம் வந்துவிடுகிறது.
சிவா.. என்னடா? விசாரணையா? அவன் வேலையை பணயம் வெச்சி ஆபீஸ்லே தூங்கினதுக்கு பாராட்டு பத்திரமா? யார்கிட்டே பேசறே? இப்படி ஒரு தூக்கம் என்னாலே தூங்க முடியலியேன்னு நான் ஏங்காத நாளே கிடையாது.
இதோ பாரு. உன் மேனேஜர் புத்தியை வாசற்படிக்கு வெளியே விட்டுட்டு, அவன் தம்பியா இந்த வீட்டுக்குள்ளே வர்றதா இருந்தா வா, இல்லே அவன் ஒருத்தனையே என் புள்ளையா நினைச்சிப்பேன். நீ அப்படியே போயிடு.
அம்மா, தம்பியிடம் இப்படி கேட்டுக் கொண்டிருக்கையில், பாட்ஷா தூக்கக் கலக்கத்துடன் அறைக்குள் போய் - கதவை சார்த்திக் கொள்கிறார்.
பின்னணியில் ‘சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க சொல்லுங்க. எனக்கு இப்பவே தெரிஞ்சாகணும். சொல்லுங்க சொல்லுங்க' என்ற குரல் ஒலித்தபடியேயிருக்க, டபக்கென்று படுக்கையில் படுத்து குறட்டை விட ஆரம்பிக்கிறார். கொர் கொர்...
- சுபம் -
********
28 comments:
ஹா ஹா... அலுவலகம் வந்தவுடனே சிரிக்க வைக்க உங்களால தான் தலைவா முடியும்..
சிரிச்சுகிட்டே தூங்கப்போறேன்.. அப்புடியே இத என் மேனேஜருக்கும் அனுப்பி வைச்சுட்டேன்.. :)
//நம்ம வீட்டு டிவியில் நாலு மொக்கை படங்களை வரிசையா போட்டப்போ ராத்திரி முழுக்க கண்முழிச்சி பாத்துக்கிட்டே இருந்தீங்க. இந்த ஊரே நின்னு வேடிக்கை பாக்க, கொட்டற மழையிலே பேப்பர் கப்பல் விட்டு விளையாடவே பொறந்தா மாதிரி, ராத்திரி முழுக்க தூங்காமே விளையாடிக்கிட்டே இருந்தீங்க.//
கலக்கல் :))))))))))))))))) செமையா மேட்ச் பண்ணிட்டீங்க!
:-)))))))))))))))))
தூங்காமல் இருக்க ஆசைப்பட்ட எவனும்/எவளும் உருப்பட்டதாக ......
:-)
:))))))))))
Srini
முன்னமே அந்த டிவிட்டுக்களைப டிவிட்டர்ல படிச்சு சிரிச்சி முடியல. நான் அல்ரெடி உங்க டிவிட்டர் ஃபாலோவர் என்பதில் பெருமை கொள்கிறேன்.. இதுல பாட்ஷா.. :)
பாட்ஷா பாட்ஷா சவுண்ட்க்கு குறட்டை வருமோ பின்னணியில்.. :)
நாடி, நரம்பு, ரத்தம், சதை, புத்தி எல்லாத்திலேயும் நக்கல் ஊறிப்போன ஒருத்தராலதான் இப்படி எழுத முடியுங்க :)
அதென்ன 'டமாஸ் மாதிரி'? உங்க பதிவுதான் 'டமாஸ்'க்கெல்லாம் மாதிரி.
நாடி, நரம்பு, ரத்தம், சதை, புத்தி எல்லாத்திலேயும் நக்கல் ஊறிப்போன ஒருத்தராலதான் இப்படி எழுத முடியுங்க :)
அதென்ன 'டமாஸ் மாதிரி'? உங்க பதிவுதான் 'டமாஸ்'க்கெல்லாம் மாதிரி.
அய்யோ இப்படி வாய்விட்டு லூசு மாதிரி தனியா சிரிக்கிற அளவு எழுதுறீங்களே!
என்ன என்னய்யா பண்ணினே !
இப்போ தூக்கம் தூக்கமா வருது
//யாரு தூங்குனா கண்ணு மூடி குறட்டை வந்து வாயிலேந்து பயங்கரமா ஜொள்ளு வழியுதோ - அவந்தான் தமிழ்! /
:) :)
தூக்கம் காணாம போகற அளவுக்கு சிரிக்க வெச்சு இருக்கிங்க
இந்த ஏரியாவுல நீங்க மோனோபோலிண்ணா. இரசித்து சிரித்தேன் :)))
//எம்.எம்.அப்துல்லா said...
இந்த ஏரியாவுல நீங்க மோனோபோலிண்ணா...//
ஜி, இந்த ஏரியாவுல இவரு 'ஒருத்தருதான் போலி' - ன்னு சொல்லறீங்களா :)))
அண்ணே அடிச்சு தூள் கிளப்பியிருக்கீங்க..சிரிச்சு சிரிச்சு வயிறு(கொஞ்சம் பெரிசா இருந்தாலும்) புண்ணாயிடுச்சி...
உங்க மேலே செம்ம கோவத்துல இருக்கேன்...எங்க அந்தபக்கம் ஆளையே காணும்.
:)))))) எப்படி இப்படி?
//டபக்கென்று படுக்கையில் படுத்து குறட்டை விட ஆரம்பிக்கிறார். கொர் கொர்...// :))))
ரொம்ப பிடிச்சு இருக்குங்க.
ஆபீஸ்லே இன்னிக்கு நான் தூங்கறேன்.. நாளைக்கு என் பையன்.. அப்புறம் என் பேரன் தூங்குவான். இதெல்லாம்.. எனக்கு என்ன பெருமையா???//
சிரிச்சுக்கிட்டே வந்தவன்.. அலறிச்சிரிச்சேன் இதுக்கு.! பாட்ஷாவில் 'எனக்கு இன்னொரு பேரு இருக்குது' மாதிரி ஏதும் அதிர்வேட்டு பண்ணியிருக்கலாம்.
இந்த மாடலில் உங்களை அடிச்சுக்க ஆளேயில்ல குரு.
எம்.எம்.அப்துல்லா said...
இந்த ஏரியாவுல நீங்க மோனோபோலிண்ணா. இரசித்து சிரித்தேன் :))
//
என் கமென்டை போட்டதுக்கப்புறம்தான் இதைப்பார்க்குறேன்.
இப்போ புரியுதா.. நா ஏன் இந்தக்கடைக்கு அடிக்கடி வர்றேன்ங்கிறது..
அட்டகாச சரவெடி
அருமையான கற்பனை...
"ஆபீஸில் தூங்கும் பாட்ஷா!!!": ஒரு தடவ தூங்கினா நூறு தடவ தூங்கின மாதிரி.
இந்த முக்கியமான வரியா மிஸ் பண்ணிடீங்கலே. அடுத்த பதிவுல வருமா?
நீங்க கொஞ்சமா தூங்குவீங்களா?
இல்ல அதிகமா தூங்குவீங்களா?
"ஆபீஸில் தூங்கும் நாயகன்": ஆ ஆ ஆ ... தெரியலயே பா...
அரபிக் கடல் புயலில் கூட அசந்து தூங்கும் ஆளு பாருடா..,
இவன் டேபிளையே மாத்திப் போட்ட பாவி யாருடா
எனக்கு இன்னொரு பேரும் இருக்கு
இந்த இடுகையைப் படிச்சீங்களாண்ணா..,
ஆபிசில் தூங்காம உக்கார்ந்து யோசிச்சீங்களோ? நல்ல தமாஷ்!
ரசித்தேன்! ச்சின்னப்பையன் டச்!
Post a Comment