Thursday, February 13, 2014

மாப்பிள்ளை பார்க்கும் படலம்!

நேற்று ஒருவர் publish செய்துவிட்டு, பிறகு எடுத்துவிட்ட பதிவுதான் இந்தப் பதிவுக்கு இன்ஸ்பிரேஷன்.

தூரத்து சொந்தக்கார பொண்ணுதான். பெங்களூர் ஜெய நகர்லே இருக்காங்க. அந்த பொண்ணுக்கு கல்யாணத்துக்கு வரன் பார்க்க ஆரம்பிச்சாங்க. என்ன ஆச்சுன்னு பதிவில் பாருங்க.

வயசு 23: பொண்ணு MBA முடிச்சி ஒரு நல்ல தனியார் வங்கியில் வேலைக்கும் சேர்ந்துடுச்சு. கிடைக்கும் மாப்பிள்ளை ஜெய நகர் / ஜெபி நகர் 5வது Phaseக்குள் இருக்க வேண்டும். மென்பொருள் நிபுணர்’ஆகத்தான் இருக்க வேண்டும் என்ற கண்டிஷன்கள் - அந்தப் பொண்ணுதான் போட்டது. (சிரிக்கக்கூடாது. இது நிஜமான சம்பவப் பதிவுதான்). ஆனா, கிடைத்த மாப்பிள்ளைகள் பெங்களூரில் வேறு பகுதிகளில் இருந்து வந்தார்கள். அதனால் - ரிஜெட்டட்.

வயது 24: பையன் பெங்களூரில் எங்கே வேணாலும் இருக்கலாம். ஆனால், ஜெய நகர் / ஜெபி நகருக்கு வீடு மாற்றிக் கொண்டு வந்துவிட வேண்டுமென்ற கண்டிஷன். ஆனால், கிடைத்த பையன்கள் பெங்களூருக்கு வெளியே ஹோசூர், மாண்டியா போன்ற பகுதிகளில் இருந்தார்கள். அதனால் - ரிஜெட்டட்.

வயது 25: பையன் பெங்களூர், மைசூர் அல்லது கர்னாடகாவில் எங்கே வேணாலும் இருக்கலாம். பெங்களூருக்கு ட்ரான்ஸ்பர் வாங்கினால் போதும். இதுதான் கண்டிஷன். இப்போ ஜாதகங்கள் சென்னையிலிருந்து வந்தன. சென்னையா? உவ்வே.. நோ. அதனால் - ரிஜெட்டட்.

வயது 26: சரிப்பா. பெங்களூர், சென்னை, ஹைதை. எங்கேயிருந்தாலும் ஓகே. ஆனா பெரிய நகரங்களில்தான் இருக்கவேண்டும். என்ன சொல்லப் போறேன்னு உங்களுக்கே தெரியும். இங்கிருந்தெல்லாம் எதுவும் கிடைக்கவில்லை. வந்தவை - ரிஜெட்டட்.

வயது 27: தென்இந்தியாவில் எங்கே வேணாலும் போறேன். வங்கிக் கிளை இல்லைன்னாலும் பரவாயில்லை. வேறு வேலை தேடிக்கறேன். யாராவது மாட்டுறானான்னு பார்ப்போம். நோப். யாரும் மாட்டவில்லை.

வயது 28: இந்தியாவின் எந்த மூலைக்கும் போகத் தயார். ‘நம்மளவா’வா இருந்தா போதும்.

வயது 29: ஆம்பளையா இருந்தா போதும்.

வயது 30: இன்னும் மாப்பிள்ளை தேடிக்கிட்டுதான் இருக்காங்க.

இந்த மாதிரி case studiesகளைப் பார்க்கும்போதுதான் பக்பக்ன்னு இருக்கு. ஆனா, நம்ம கையில் என்ன இருக்கு? நல்லதே நடக்கும்னு ஒரு நம்பிக்கையில் வாழ்க்கையை ஓட்டிப் போகலாம்.

நீங்க என்ன சொல்றீங்க?

***

3 comments:

Kamala February 13, 2014 at 10:49 PM  

இப்படித் தேடி கடைசியில் தலையில் சொட்டை விழுந்த பையனோடு வாழ்க்கை நடத்துகிறது பாவப்பட்ட ஒன்று!

Variety February 14, 2014 at 12:27 AM  

என்ன பன்றதுங்க, படித்து வேலைக்கு சேர்ந்து கையில் பணம் வாங்கி பழகி, வீட்டு செலவுக்கும் கொடுத்தார்கள் என்றால், தங்களை அரிவுஜீவிகளாகவும், சமுதாயத்தில் சரியான் முறையில் செயல்படுபவர்களாகவும் நினைத்து கொள்கிறார்கள். அவர்களுடைய அறிவுக்குறைவை தெரிந்துகொளவதற்குள் ஆயுளில் பாதி முடிந்துவிடுகிறது.

Unknown February 14, 2014 at 4:55 AM  

முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்பது சரிதானே ?
த ம +1

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP