நிலநடுக்கம், சுனாமி, கடவுள் மற்றும் சில ட்வீட்டுகள்.
இன்று காலை ட்விட்டரில் நிலநடுக்கம், சுனாமி ட்விட்டுகளுக்கு நடுவே கடவுளைப் பற்றிய ஒரு விவாதமும் ஓடிக்கொண்டிருந்தது. யாரு கேக்கறாங்களோ இல்லையோ, யாரு படிக்கறாங்களோ இல்லையோ, ஒரு டுமீல் ட்விட்டராய் நம் கடமையை செய்ய வேண்டும் என்று எண்ணினேன். போட்டேன் பல ட்வீட்டுகள்.
ஆனா பாருங்க, ஒவ்வொரு முறையும் 140 எழுத்துகளை என்னால் எட்ட முடியல. அதனால், இந்த #365Process தளத்தைப் பற்றியும் நடுநடுவே எழுத வேண்டியதாயிடுச்சு. படிச்சி பாருங்க, உங்களுக்கே புரியும் என் கஷ்டம். மற்றபடி இந்த பதிவின் தலைப்பில் உள்ளவற்றைப் பற்றிய ட்விட்டுகளே இவை. நம்புங்க.
***
கடவுள் உலகை அளந்தாரான்னு தெரிய வேண்டாம்; உங்க செயல்திறனை அளக்க தெரிஞ்சிக்குங்க. உதவிக்கு #365Process
கடவுள் இருந்தா நல்லா இருக்கும். செயல்முறை இல்லேன்னா நாறிடும். அதைப்பற்றி தெரிஞ்சிக்க படியுங்கள் #365Process
நிலநடுக்கம் ஏற்பட்டாலும், செய்யும் வேலையில் மனநடுக்கம் ஏற்படாமல் இருக்க படியுங்கள் #365Process
கடவுள் உண்டு/இல்லை என்பதற்கான காரணங்களை இஷிகாவா வரைபடத்தில் வரைய #365Process படியுங்கள்
12/21/12 அன்று உலகம் அழியாது. ஏன்னா 2/28/13 அன்றுதான் #365Process முடியும்
ஆக்கல், காத்தல், அழித்தல் - செயல்முறையில் இவற்றை சரியா செய்யணுமா? படியுங்கள் #365Process
ஆத்திகர்கள், நாத்திகர்கள் இருவரும் ஒப்புக் கொண்டு படிக்கும் ஒரே தளம்.. #365Process
இப்பவாவது அடுக்ககத்தில் அடுத்த வீட்டில் இருப்பது யார்னு தெரிஞ்சிக்குங்க. இப்பவும் வேணாமா? படிங்க #365Process
வதந்திகளை பரப்பாதீர்கள். உண்மையான செய்திகளை மட்டுமே சொல்லவும். இதையும் செய்தியாக பரப்பலாம். #365Process
பேரிடர் சமயங்களில் தொலைபேசி அலைவரிசைகளை கடலை போட்டு busy ஆக்காதீர்கள். படியுங்கள் #365Process
நிலநடுக்கம் வந்து போனபிறகு வெளியில் சும்மா நிற்பவர்கள் படிக்க சிறந்த தளம். #365Process
அடாது நிலநடுக்கம் வந்தாலும் விடாது பதிவு போடப்படும். #365Process
***
இப்போ உங்களுக்கும் அந்த தளத்தை பார்க்க ஆசை வந்திருக்குமே. இங்கே போங்க.
http://365process.blogspot.com
***
2 comments:
தனி ஒருவனுக்கு ப்ளாக் எழுத சரக்கில்லை எனில், அவனுடைய ட்வீட்களை அழித்திடுவோம்.
(ட்வீட்டரில் படித்து, மறுபடியும் ப்ளாக்லயும் அதையே படிப்பது போதும்டா சாமி)
வெரி குட் மார்கெட்டிங் சத்யா சொரிங்க ச்சின்னப்பையன்...
Post a Comment