இலவச தொலைக்காட்சி இனிமே கிடையாது!
நாலரை வருடங்கள் முன்பு இந்த வீட்டுக்கு வந்த புதுசு. முன்னால் குடியிருந்தவர் - இந்த மாதயிறுதி வரை என்னுடைய தொலைக்காட்சி இணைப்பே இருக்கும். அடுத்த மாதம் அது துண்டிக்கப்பட்டவுடன் நீ உன்
பேரில் புது இணைப்பு எடுத்துக்கோன்னார். நானும் சரின்னேன்.
ஒரு மாசமாச்சு.
ஆறு மாசமாச்சு.
கேபிள்காரங்க பழைய இணைப்பை துண்டிக்கவேயில்லை. அதற்குண்டான பில்லும் அனுப்பவில்லை.
பணம் கட்டாமே ஓசியில் தொகா பார்ப்பதற்கு என் மனசு கேட்கவேயில்லை. அதனாலே ராத்திரி தூக்கமே வராது. எப்பவும் தொகா என்னை திட்டுற மாதிரியே இருக்கும். நானும் அதை நேருக்குநேர் பார்க்கமுடியாமே, எப்பவும் நிகழ்ச்சிகளை ஒரு பக்கமா உக்காந்துதான் பாப்பேன். (ஏன், 'அங்கே' ஏதாவது பிரச்சனையான்னு யாரும் கேக்கக்கூடாது!).
ஒரு வருஷமாச்சு.
ரெண்டு வருஷமாச்சு.
நானும் யாராவது வரமாட்டாங்களா, தொலைபேச மாட்டாங்களா - தொகாவுக்கான காசு கொடுத்துடுவோம்னு கதவு/தொலைபேசி மேலே விழி வைத்து பாத்துட்டேயிருந்தேன். ம்ஹூம்.
இதற்கு நடுவில் ஒரு தடவை எங்க அடுக்ககம் பூராவும் ஏதோ பிரச்சனை வந்து எல்லா வீடுகளுக்கும் கேபிள் இணைப்பு துண்டாயிடுச்சு. ஒரே நாள்லே எல்லாருக்கும் திரும்ப வந்தாலும் எங்களுக்கு மட்டும் வரவில்லை.
ஆஹா, பணம் கொடுக்காததால் நிறுத்திட்டான்னு மனசு சொன்னாலும், வழக்கம்போல் புத்தி கேட்காததால் (அல்லது புத்தி / மனசு - ஏதோ ஒரு வரிசையில் போட்டுக்குங்க), அந்தப்பக்கம் வந்த பொறியாளர்களிடம் சொன்னேன் - என்னங்க, சரி செய்துட்டேன்னு சொன்னீங்க. எங்க வீட்டுக்கு இணைப்பு வரவேயில்லையே.
அவர்களும் - மன்னிச்சுக்குங்க. இப்ப சரி செய்துடுறோம்னு சொல்லி, அரை மணி நேரத்தில் சரி செய்து கொடுத்துவிட்டார்கள்.
ஆனா, வழக்கம்போல் பில் வரவில்லை.
மூணு வருஷமாச்சு.
நாலரை வருஷமும் ஆயிடுச்சு.
திடீர்னு போன வாரம் ஒரு நாள் தொகாவில் ஏகப்பட்ட பூச்சி(கள்). சரிதான், பெய்த பனியில் எங்கேயோ மின்சாரம் தடைபட்டிருச்சு, இதோ வந்துடும்னு நினைச்சிருந்தோம்.
எனக்கு சரியான கோபம் - "தொகா இல்லாம மனுஷன் எப்படி இருக்கறது? தடங்கலுக்கு வருந்துகிறோம்னாவது போடணுமா இல்லையா. கொஞ்ச நேரத்துலே சரியாகலேன்னா என்ன பண்றேன்னு பாரு"ன்னு டென்சனா இருந்தேன். நான் ஒன்னும் பண்ணமாட்டேன்னு தெரிஞ்சி, வீட்டிலே அமைதியா இருந்தாங்க.
ஒரு பத்து நிமிடத்தில் - டொக் டொக் - கதவுதாங்க. யாரோ தட்டினாங்க.
கேபிள்காரங்க.
பணம் கட்டாமே உங்களுக்கு தொகா வந்துட்டிருந்துச்சு. இப்பத்தான் அதை நிறுத்தினோம்.
ஆஹா.. 4.5 வருஷத்துக்கு மாசம் $40 - ஆக மொத்தம் $2160, கூட அபராதத்தொகையா எதையாவது கேக்கப்போறான். என்ன பண்றதுன்னு நினைச்சிட்டிருந்தபோதே - பயப்படாதீங்க. முன்னாடியே இணைப்பு துண்டிக்காதது எங்க தப்புதான். உங்ககிட்டே பணம் எதுவும் கேக்கமாட்டேன். ஆனா, இனிமே தொகா பாக்கணும்னா நீங்க பணம் கட்டியாகணும்.
சரி சரி. மன்னிச்சிட்டேன். பரவாயில்லை (தப்புதான் நம்ம மேலே இல்லையே!). மாசத்துக்கு எவ்வளவு?
$40௦.
ம்ஹூம். இது ரொம்ப ஜாஸ்தி. என்னாலே முடியாது. (கொய்யால! இது வரைக்கும் எதுவுமே கொடுக்கலியேடா!) நான் அவங்க (இவங்களோட எதிரி!) தொகையை பாத்துட்டு உங்களுக்கு தொலைபேசறேன். அட்டை கொடுத்துட்டு போங்கன்னு சொன்னேன்.
சரி. உங்களுக்காக தொகையில் கொஞ்சம் குறைச்சிக்கறேன். ஒரு வருஷத்துக்கு மாதாமாதம் $20 மட்டும் குடுங்க. அப்புறம் பாத்துக்கலாம்.
சரி. இதுவும் ஜாஸ்திதான். இருந்தாலும் பரவாயில்லை. உங்களுக்காக நான் இதை எடுத்துக்கறேன்னு சொல்லி தொகா பிரச்சினையை முடித்தேன்.
என்ன பண்றது, நாம கொடுத்து வைத்தது அவ்வளவுதான்னு சொல்லி, இனிமே மாதாமாதம் $20௦ கட்டணும்.
ஆனாலும், தங்க்ஸ் ஒரு ஐடியா கொடுத்தாங்க. ஒரு ரெண்டு மாதம் கழிச்சி இணைப்பை துண்டிக்கச் சொல்லிடலாம். எப்படியும் அவங்க துண்டிக்க மாட்டாங்க. அப்படியே கொஞ்ச நாள் ஓசியில் பாக்கலாம்னாங்க.
யம்மா. ஒரு தடவை சும்மா விட்டான். அடுத்த தடவை மொத்தமா தீட்டிடப் போறான்னு சொன்னாலும், அப்படி செய்துதான் பாக்கலாமேன்னு ஒரு நினைப்பு இருந்துக்கிட்டே இருக்கு.
நீங்க என்ன சொல்றீங்க?
*****
13 comments:
ரொம்ப நியாயஸ்தர்தான்.. தொ.கா வராத போது அவனை கூப்பிட்டு சரிசெய்ய சொல்லிட்டு.. அப்புறம் என்ன மனசாட்சி, புத்திசாட்சினு டயலாக்?
கேபிள் டிவி ப்ராட் இந்த நாட்டுல நிறைய உண்டு. மாட்டாத வரை எல்லாமே நல்லா இருக்கும்.
என்னாது சொல்லி ஒரு வாரத்துலையே ஆப்பு வெச்சிட்டாங்களா. என்னை மட்டும் சந்தேகப்படாதீங்க, நான் ரொம்ம்ம்ம்ப்பா நல்லவங்க
அடடா..... பக்கத்து வீடு காலியா இருக்கான்னு சொல்லுங்க. வந்துட்டா..... அப்படியே உங்கூட்டுலே தொகா பார்த்துக்குவேன்:-))))
//அதனாலே ராத்திரி தூக்கமே வராது. எப்பவும் தொகா என்னை திட்டுற மாதிரியே இருக்கும். நானும் அதை நேருக்குநேர் பார்க்கமுடியாமே, எப்பவும் நிகழ்ச்சிகளை ஒரு பக்கமா உக்காந்துதான் பாப்பேன்.//
ஹஹஹஹ.... மானஸ்தன்...:)
வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரனாயிடுவேன்னு சிலபேர் டயலாக் அடிக்கிறாங்களே தல... ஆனா வெள்ளைக்காரன் படுசோம்பேறியால்ல இருக்கான்....:)))
:))))
//அப்படி செய்துதான் பாக்கலாமேன்னு ஒரு நினைப்பு இருந்துக்கிட்டே இருக்கு. நீங்க என்ன சொல்றீங்க?//
இலவசங்களைத் தன் பிறப்புரிமையாகக் கருதும் பச்சைத் தமிழர் என்று நிரூபிக்கிறீங்க!!
worth trying....
//ஆனாலும், தங்க்ஸ் ஒரு ஐடியா கொடுத்தாங்க. ஒரு ரெண்டு மாதம் கழிச்சி இணைப்பை துண்டிக்கச் சொல்லிடலாம். எப்படியும் அவங்க துண்டிக்க மாட்டாங்க. அப்படியே கொஞ்ச நாள் ஓசியில் பாக்கலாம்னாங்க.//
வெளங்கிரும்
சரி சரி. மன்னிச்சிட்டேன்.// நாலரை வருசமா ஓசி டிவி பாத்துட்டு நீ அவுங்கள மன்னிக்கிறியா? சரிதான்.!
கிளைமாக்ஸ்ல உங்க தங்கமணி அப்படியெல்லாம் சொல்ற ஆளில்லைன்னு நினைக்கிறேன். மருவாதியா சொல்லிடு அதுவும் உன் ஐடியாதானே.!! பிச்சி பிச்சி..
ஹுஸைனம்மா பின்னூட்டம் ரிப்பீட்டு.!
//அப்படி செய்துதான் பாக்கலாமேன்னு ஒரு நினைப்பு இருந்துக்கிட்டே இருக்கு. நீங்க என்ன சொல்றீங்க?//
இலவசங்களைத் தன் பிறப்புரிமையாகக் கருதும் பச்சைத் தமிழர் என்று நிரூபிக்கிறீங்க!!
ரிபீட்டேய்...
நினைச்சா அத செய்து பாக்கனும் தல சீக்கிரம்
சாதா சங்கர கேபிள் சங்கர் ஆக்குறது இப்படித்தானா?
Post a Comment