எனக்கு எதுவும் தெரியாது..
நான் சிந்திந்த
கவிதைகளை யாரோ
எழுதிவிடுகிறார்கள்.
நான் நினைத்த
கதைகளை யாரோ
புனைந்துவிடுகிறார்கள்.
நான் யோசித்த
ஜோக்குகளை யாரோ
சொல்லிவிடுகிறார்கள்.
இப்படியே சொல்லிட்டிரு
எதுவும் உருப்படியா
செய்யாதே என்றான் நண்பன்.
நீ இப்படிதான்
சொல்வாய் என
அதையும் நான்
முன்கூட்டியே
ஊகித்திருந்தேன் என்றேன்.
கேவலமா
திட்டினான்.
இப்படிதான் திட்டுவான்னு
எனக்கு முன்னாடியே
தெரியும்னு சொல்லலாம்.
எதுக்கு வம்பு.
எனக்கு எதுவும்
தெரியாது.
***
1 comments:
நீங்க இப்படித்தான் கவிதை எழுதுவீங்கன்னு எனக்கு முன்னாடியே தெரியும்.
Post a Comment