பகவத் கீதை.
நண்பர் உவாச (சொன்னார்):
மாதங்களில் நான் மார்கழின்னு சொன்னாரே பகவான், அந்த பகவத் கீதையை படிச்சிருக்கியா?
நான்: யெஸ். மலர்களிலே நான் மல்லிகைதானே அடுத்த வரி?
நண்பர்: அடேய்!!
ரொம்ப நாளாகவே இந்த பகவத்கீதையை முழுக்க ஒரு முறையாவது படிக்கணும்னு நினைப்பு இருந்தது. அங்கும் இங்குமாக சொற்பொழிவுகள் கேட்டிருந்தாலும், புத்தகம் படிக்கணும், அதில் என்னதான் சொல்ல வர்றார்னு புரிஞ்சிக்கணும்னு இருந்தது. சரி இந்த மார்கழியில் ஒரு rapid-fire பகவத்கீதை படித்தல் / கேட்டல் செய்திடுவோம்னு முடிவு எடுத்தாச்சு.
வீட்டில் இருந்த புத்தகங்கள்:
* கீதா பிரஸ் - தமிழில் உரை (1000 பக்கங்கள்).
* பாரதியாரின் உரை - (Project Madurai)
* The Gita for Children : Roopa Pai
* My Gita - Devdatt Patnaik
* Gita for Students - ராஜாஜி
கேட்பதற்காக தேர்ந்தெடுத்த ஒலித்துண்டுகள்:
* வேளுக்குடியின் கீதாசாரம் - 3மணி நேரங்கள்
* வேளுக்குடியின் பக்தி யோகம் - 2மணி நேரங்கள்
* சுகி சிவமின் கீதாசாரம் - 4மணி நேரங்கள்
இதையெல்லாம் இந்த ஒரே மாதத்தில் முடிச்சிடலாம்னு முடிவு செய்திருக்கேன்.
நண்பர்: அட! ஆமா கீதா பிரஸ் ஒரு as-is உரைன்னு சொல்றாங்க. ஆனா மத்தவங்க அவங்க அவங்களுக்கு புரிஞ்ச மாதிரிதானே சொல்லியிருப்பாங்க. எல்லாத்தையும் படிச்சி / கேட்டு, நீ குழம்பிடமாட்டே?
நான்: கண்ணா. அர்ச்சுனன் குழப்பத்தையே தீர்த்த கீதை இது. இதைப் படிச்சி குழம்பிட்டான்னு கேக்குறியே?
நண்பர்: அதில்லை. School of thoughtன்னு சொல்றாங்களே? அதில்தானே குழப்பமெல்லாம் வரும்?
நான்: இது கேள்வி. இதுவரை பகவத்கீதைன்னா என்னன்னே தெரியாமல் இருக்கிற எனக்கு, மேற்சொன்ன எல்லாம் ஒரு முன்னுரை மாதிரிதான். இப்போ content என்னன்னு தெரிஞ்சபிறகே, நம்ம school of thoughtக்கு வரணும். அதைப் பற்றி சொல்லவேயில்லையே?
நம்மது எப்பவுமே இரட்டை இலைதான். (பார்க்க படம்). அதற்கான ஒலித்துண்டு + புத்தகங்கள் இவை.
* சுவியேந்திரர் - உடுப்பி மடத் தலைவர்களில் ஒருவர் - 12 மணி நேர சொற்பொழிவு (கன்னடத்தில்)
* வித்யாபூஷணர் - 10 மணி நேர சொற்பொழிவு (கன்னடத்தில்)
* த்வைத வழியின் ஆராய்ச்சியாளர்கள் - K.T.Pandurangi & T.S.Raghavendran ஆகியோர் எழுதிய புத்தகங்கள்.
இதைத் தவிர, இந்த வாரயிறுதியில், த்வைத புத்தகக் கடைக்குப் போய், ஓரிரு புத்தகங்கள்/CDகளை அள்ளப் போறேன். இவை, நம்ம School of thoughtல் ஏதாவது வித்தியாசம் இருக்கா, கீதையை எப்படி புரிஞ்சிக்கணும்னு எனக்கு சொல்லித் தரும்.
நண்பர்: சூப்பர். ஆமா, இது எல்லாத்தையும் ஒரே மாதத்தில் செய்ய முடியுமா?
நான்: ஹிஹி. ஆபீசில் சும்மாதானே இருக்கோம்?
நண்பர்: இருக்கேன்னு சொல்லு. ஆமா, இவ்வளவு செய்த பிறகு, அடுத்த மாசம் இதிலிருந்து என்ன முடிவு வரும்னு எதிர்பார்க்கிறே?
நான்: பகவத்கீதை படிக்கிறது என் கடமை. படித்தா என்ன பலன்கள் வரும்னு நான் எதிர்பார்ப்பதில்லை. எப்புடி?
நண்பர்: ஆ!
***
0 comments:
Post a Comment