புத்தம் புதிய திரைப்படம் 'தமிழ்மணம்' - திரை விமர்சனம்
எச்சரிக்கை: பதிவின் இறுதியில் இருக்கும் 'டிஸ்கி'யை இப்போதே படிக்க வேண்டாம்.
சுரேஷ் - சிறந்த பதிவர் ஆகவேண்டுமென்பதற்காக தன் கற்பனையிலிருந்து பற்பல கதை, கட்டுரை, கவிதைகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்துக்கொண்டிருக்கிறார். தமிழ்மணத்தில் ஒரு பதிவை துவக்கி ஒவ்வொரு நாளும் ஒரு பதிவைப் போட்டு 2008ன் சிறந்த பதிவராக வேண்டுமென்று கடுமையாக உழைக்கிறார்.
ரமேஷ் - இவரும் தமிழ்மணத்தில் பதிவை புதிதாக துவக்கியிருக்கிறார். ஆனால் ஒரு பதிவு போடக்கூட சரக்கு இல்லை. இவர், சுரேஷிடமிருந்து சில சூடான பதிவுகளைத் திருடி தன் பெயரில் வெளியிடுகிறார். அப்படி செய்வதால் இரண்டே பதிவுகளில் மிகவும் பிரபலமாகி விடுகிறார். எல்லோரும் ரமேஷின் பதிவில் 'மீ த பஷ்டு', 'மீ த செகண்டு' என்று போட்டி போட்டு பின்னூட்டம் இடுகின்றனர். அவரது ஒரு பதிவுக்கு 1000+ பின்னூட்டம் கிடைக்கிறது. வெகு விரைவில் அவர் நட்சத்திரப் பதிவராகிறார்.
இதற்கு நடுவில், சுரேஷுக்கு 'போலி' ஒருவரால் அவப்பெயர் உண்டாகிறது. அதனால், அவரின் பதிவு முயற்சியில் தொய்வு ஏற்படுகிறது.
மனம் வெறுத்த சுரேஷ், ரமேஷுடன் சேர்ந்து ஒரு 'சங்கம்' துவக்குகிறார். அதில் அவர் சந்திக்கும் பிரச்சினை என்ன, க்ளைமாக்ஸில் என்ன திருப்பம் உண்டாகிறது என்று வெள்ளைத்திரையில் காணுங்கள்.
நடிகர்கள்: சுரேஷ், ரமேஷ் - இருவரும் தமது பாத்திரங்களை உணர்ந்து நன்றாக செய்திருக்கின்றனர்.
பாடல்கள்: ரமேஷ் தன் பதிவில் போட்டிருக்கும் பாடல் பதிவுகள் நன்றாக இருக்கின்றன.
சண்டைப் பயிற்சி: சுரேஷ்-போலி இவர்கள் போடும் சண்டைக்காட்சிகள் மிகவும் அருமையாக இருக்கிறது. சுரேஷ் தன் உயிரைப் பணயமாக வைத்து சண்டை போட்டிருக்கிறார்.
ஆக மொத்தம், 'தமிழ்மணம்' - நல்ல மணம்.
டிஸ்கி: இந்தப் படம் 'வெள்ளித்திரை' திரைப்படத்தின் தழுவல் இல்லை, இல்லை, இல்லை!!!
7 comments:
Test Message..!!!
Test Message..!!!
ஏதோ பிரச்சனையைக்கிளப்பறீங்கன்னு மட்டும் புரியுது.
ஆஹா சின்ன அம்மிணி, பத்தவச்சிட்டீங்களே... இந்த பதிவு யாரை குறித்தும் இல்லீங்கோ... 'வெள்ளித்திரை' படத்தை 'தமிழ்மணத்தில்' அப்படியே பொருத்தி ஒரு கற்பனை செய்தேன். அவ்வளவுதான்... தமாஷா எடுத்துக்கோங்கோ.... ஓகேவா... நன்றி...
அனானி -> வருகைக்கு நன்றி...
அனானி -> "பொதுவா" தமாஷா பேசறதா இருந்தா மட்டும் எதுனா சொல்லுங்க...
தவறுதலா "பப்ளிஷ்" பண்ண பின்னூட்டத்தை திரும்ப எடுக்கமுடியுமா - யாராச்சும் உதவி பண்ணுங்களேன்...:-(
இச்சின்னப்பையன்,
'Post a Comment' இல் சொடுக்கும்போது உங்கள் பதிவில் ஒரு pop up வருமே. அதில உங்களுக்கு மட்டும் ஒவ்வொரு பின்னூட்டத்துக்கும் கீழே ஒரு குப்பைக்கூடை ஒன்று இருக்கும் பாருங்க. அதை சொடுக்கி விடுங்க; அந்தப் பின்னூட்டம் பதிவைவிட்டே ஒடிடும்.
நன்றி கெளபாய்மது -> ரெண்டு பின்னூட்டங்கள் தூக்கவேண்டியிருந்தது... ஆச்சு...
Post a Comment