பால் விலை உயர்வு: செய்தியின் விளைவுகள்
நிலாவை ஏன் 'பால் நிலா' அப்படின்னு கவிஞர் சொன்னாரு தெரியுமா?
'பால்' விலை அவ்வளவு உசரத்துக்கு போகும்னு அப்பவே அவருக்கு தெரியும்போல...
---
திருக்குறள் புத்தகத்திலே போட்டிருக்கறத விட அதிகமா விலை சொல்றீங்களே?
எல்லா 'பால்'களின் விலையும் ஏறிப்போச்சுங்களே?
---
ஏங்க, நான் 'பெர்சனல்' லோன் தானே கேட்டேன்? நீங்க ஏன் சம்பந்தமில்லாம நான் தினமும் எவ்ளோ பால் வாங்கறேன்னு கேக்குறீங்க?
அதை வச்சித்தாங்க நீங்க வசதியானவரா, லோனை ஒழுங்கா திருப்பி கட்டுவீங்களா அப்படின்னு முடிவெடுப்போம்.
---
பக்கத்து மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் பால் விலை கம்மின்னு ஏன் அடிக்கடி சொல்றாங்க? மத்த பொருட்களோட இதையும் 'கடத்தலாம்'னு சொல்றாங்களான்னு நினைக்கிறேன்.
---
ஏன் நம்ம கட்சியிலிருந்து நிறைய பேர் வெளியேறி வேறே கட்சிக்குப் போயிடறாங்க?
எல்லாம் உங்களாலதான். எல்லா விழாலேயும் இப்பொல்லாம் நீங்க எடைக்கு எடை 'பால்' வேணும்றீங்களே?
---
இதோ பாருங்க, நாங்க மாடு வாங்கத்தான் கடன் கொடுப்போம். 'பால்' வாங்கல்லாம் கடன் கொடுக்கமாட்டோம். சொன்னாப் புரிஞ்சிக்கோங்க.
---
மிஸ், புல்வெளியிலே புல் இருக்கு. அதேபோல், மேலே பால்வெளியிலே பால் நிறைய இருக்குமே, அங்கேயிருந்து இறக்குமதி செய்யமுடியாதா?
5 comments:
திருக்குறள் சோக்கும், பால்வெளி சோக்கும் சூப்பருங்கோ!
வாங்க வீரசுந்தர், கருத்திற்கு நன்றி.
//இதோ பாருங்க, நாங்க மாடு வாங்கத்தான் கடன் கொடுப்போம். 'பால்' வாங்கல்லாம் கடன் கொடுக்கமாட்டோம். சொன்னாப் புரிஞ்சிக்கோங்க.//
Excellent.
Nice ones
அடடா என்னை முந்திட்டிங்களே , நானே ஒடு கடி தோரணம்னு போடலாம்னு இருந்தேன், நல்லா கடியா அமையலைனு காத்திருந்தேன்.
நல்லாவே பால் ஊத்தி இருக்கிங்க :-))
வாங்க சிறில் அலெக்ஸ், வவ்வால் -> நன்றி.. மீண்டும் வருக...
Post a Comment