பெண் குழந்தை கருக்கலைப்பு - அரைபக்க கதை
இதை ஏங்க கலைக்கச் சொல்றீங்க... நான் கலைக்க மாட்டேன்.
இப்போ எதுக்கு இது? நாலு பேர் நாலு விதமா பேசுவாங்கம்மா.
பேசட்டுமே, எனக்கென்ன. எனக்கு ஒரு பெண் குழந்தை வேணும். எனக்கு தோண்றது, இது பெண்தான்.
அது சரிம்மா. ஆனா, இந்த சமயத்திலே இது எதுக்குன்னு பாக்குறேன்.
எனக்குன்னு இதுவரைக்கும் உங்ககிட்டே ஏதாவது கேட்டிருக்கேனா?
எனக்கு புரியுதும்மா, ஆனா அந்த நாலு பேர்...
சும்மா நாலு பேர், நாலு பேர் அப்படிங்காதீங்க.. உங்களுக்கு போன மாசம் உடம்பு சரியில்லாதபோது யாருமே வரலியே?
ஆமாம்மா, எல்லோரும் தொலைபேசியிலே ரொம்ப அக்கறையா விசாரிச்சாங்களே, அது போதாதா?
அதெல்லாம், கிடையாது. எனக்குன்னு ஒரு பெண் குழந்தை கண்டிப்பா வேணும். இதை நான் கலைக்க மாட்டேன்.
இதோ பாரும்மா.. நான் சொல்றதை சொல்லிடறேன். அப்புறம் உன் இஷ்டம். நமக்கும் வயசான நாலு பசங்க இருக்காங்க. எல்லோருக்கும் கல்யாணமாகி அவங்கவங்க பிள்ளைகுட்டிங்களோட வேறவேற நாட்டிலே இருக்காங்க. இந்த சமயத்திலே இந்த குழந்தை வேணும்னு நீ அடம் பிடிக்கறது கொஞ்சம்கூட நல்லாயில்லை. சொல்லிட்டேன். இன்னிக்கு சாயந்திரம் நாம டாக்டரை பார்த்து இதை கலைக்கப் போறோம். அவ்வளவுதான்.
0 comments:
Post a Comment