இரண்டாயிரம் பின்னூட்டங்கள்!!! அரைபக்க கதை
முன்னுரை:
இது ஒரு கற்பனை கதைதான். என் சொந்த கதை அல்ல. இந்த கதை துளசி மேடமுக்கும், cheena (சீனா) சாருக்கும் சமர்ப்பணம். ஒரு இளம் வலைப்பதிவருக்கு 2000 பின்னூட்டங்கள் எப்படி கிடைக்குது - அவர் மனதில் என்ன நினைக்கிறார் என்று பார்ப்போம். இனி கதைக்கு போவோமா...
கதை:
காலை 7 மணி:
பதிவு போட்டு 3 நாளாச்சு... இன்னிக்கு ஏதாவது போட்டாகணும்... ஒரு கதையோ அல்லது கவிதையோ போட்டா நல்லாயிருக்கும். யோசிப்போம்.
காலை 10 மணி:
தமிழ்மணத்தை பார்ப்போம்.. அடடா.. நிறைய பேர் பதிவுகளைப் போடறாங்களே?.. நமக்கு மட்டும் ஒண்ணும் தோணவே மாட்டேங்குதே?...
மதியம் 1 மணி:
யாரு திட்டினாலும் பரவாயில்லை - இந்த கவிதையைப் போடுவோம்.
தலைப்பு: சாப்பாடு இறங்கலே!!!
பசிக்கும்போது நீ அருமையான வார்த்தைகளை பேசினே -
அதனாலே எனக்கு வயிறு ரொம்பி சாப்பாடு இறங்கலே!!!
பசிக்காதபோது நீ அசிங்கமான வார்த்தைகளை பேசினே -
அதனாலே எனக்கு மனசு வெம்பி சாப்பாடு இறங்கலே!!!
மாலை 4 மணி:
பின்னூட்டப் பெட்டியைப் பார்ப்போம்.. வழக்கம் போல ஒரு பின்னூட்டமும் வரலை...
இரவு 7 மணி:
இன்னும் ஒரு பின்னூட்டமும் இல்லை.
இரவு 10 மணி:
சரி சீக்கிரம் தூங்கப் போவோம். நாளைக்கு காலையில் 2000 பின்னூட்டங்கள் வந்திருக்கும். அவற்றை பப்ளிஷ் செய்யணும்.
கதை அவ்வளவுதான்.
பின்னுரை:
நாயகன் என்ன நினைக்கிறார்னா - கதை/கவிதை நன்றாக இருக்கும் பட்சத்தில் - துளசி மேடமும், cheena (சீனா) சாரும் பதிவரை ஊக்கப்படுத்தி ஒரு பின்னூட்டம் போடுவாங்க. அவங்களோட ஒவ்வொரு பின்னூட்டமும் 1000 பின்னூட்டங்களுக்கு சமம் - ஆக மொத்தம் 2000 பின்னூட்டங்கள் வரும் என்று எதிர்ப்பார்க்கிறார்.
என்ன, அவர் நினைப்பது சரிதானே?
16 comments:
புதியவனான எனக்கு அவர்கள் இருவரின் பின்னூட்டங்கள் மிகுந்த மகிழ்ச்சி,நம்பிக்கையை அளித்தன. ஏதோ என் வலைப்பூவுக்கு வர்ற ஒன்னு ரெண்டு பேர் துளசி மேடம், சீனா சார் பின்னூட்டங்கள பார்த்திட்டு என்ன ஏதுன்னு என் பதிவை படிக்கிறாங்க .இல்லன்னா நானெல்லாம் ஈ ஓட்டவேண்டியது தான்.அவங்க வந்து பின்னூட்டம் போடலைன்னா இப்பவும் பல சமயம் ஈ ஓட்ட வேண்டியதா இருக்கு. சின்ன பையன்!அவங்கள வெச்சி காமெடி கீமடி ஒண்ணும் பண்ணலையே?
:-))
//
நாயகன் என்ன நினைக்கிறார்னா - கதை/கவிதை நன்றாக இருக்கும் பட்சத்தில் - துளசி மேடமும், cheena (சீனா) சாரும் பதிவரை ஊக்கப்படுத்தி ஒரு பின்னூட்டம் போடுவாங்க. அவங்களோட ஒவ்வொரு பின்னூட்டமும் 1000 பின்னூட்டங்களுக்கு சமம் - ஆக மொத்தம் 2000 பின்னூட்டங்கள் வரும் என்று எதிர்ப்பார்க்கிறார்.
என்ன, அவர் நினைப்பது சரிதானே?//
சொல்ல மறந்துட்டேன். கதை நாயகன் நினைப்பது சரிதான்.
கதைய இப்படி முடிச்சிருக்கலாம்..
அவன் நினைத்தது போலவே அடுத்தநாள் துளசியும், சீனாவும் பின்னூட்டமிட்டிருந்தனர்.
காமெடிக்கு ஒரு அலவே இல்லாமப் போகுதுப்பா
:)
பிரேம்ஜி: வாங்க வாங்க... பாத்தீங்களா.. உண்மையைத்தாங்க சொல்லியிருக்கேன்... நிச்சயமா காமடி/கீமடி எதுவுமே இல்லை...
சிறில் அலெக்ஸ்: ஆமாங்க... அவர் ரொம்ப நம்பிக்கையோடதான் தூங்கவே போறார். ஹலோ, இதிலே காமெடி எதுவுமே இல்லைங்க....:-)
பின்னுட்டம் என்பது ஒரு போதை
அதற்கு காத்திருப்பவர் எல்லாம் பேதை
தீராது எப்பவும் நம்ம கையிருப்பு
தனக்குத் தானே திட்டம் தானே சிறப்பு :P
(சம்சாரம் என்பது வீணை என்ற பாடல் மெட்டில் பாடினால் சிறப்பு)
ஆரம்ப காலக் கட்டத்திலாகட்டும், இன்று வரை ஆகட்டும், பின்னுட்டங்கள் வருவது பதிவின் பொருளடக்கத்தினாலே என்பது தான் என் புரிதல்.
அடப்பாவி..........:-)))))
தமிழ் எழுதறவங்களை 'ஊக்கு விக்க'ப்போடும் பின்னூட்டங்களோட சக்தி யை இப்பவாவது புரிஞ்சுக்கிட்டீங்கதானே?
எப்படியோ பதிவு எழுதவும் ஒரு இன்ஸ்பிரேஷனா இருக்கோம் நானும் சீனாவும் என்பதே இப்போதைய மகிழ்ச்சி.
இதுலே ஏதும் உ.கு. இல்லை:-))))
நல்லா இருங்கப்பா......நல்லா இருங்க.
tbcd:
ரொம்ப நல்லாயிருக்கு பாட்டு...:-)
சரியா சொன்னீங்க... இது வெறும் கற்பனை கதைதாங்க... இன்னொரு :-)
துளசி மேடம்:
வாங்க... இந்த கதை நாயகன் மட்டுமல்ல, மேலெ இன்னொருத்தரும் அதையே சொன்னதை பாத்தீங்கதானே...:-)
நன்றி...
எனக்கு இதுவரைக்கும் எல்லா பதிவுக்கும் 1000 பின்னூட்டம் மட்டும் தான் வந்துருக்கு.... அப்படியே துளசி டீச்சரையும் நம்ம பதிவு பக்கம் அனுப்பி வைங்க...நானும் இனிமே 2000 பின்னூட்டம் வாங்கரேன்.
TBCD said...
ஆரம்ப காலக் கட்டத்திலாகட்டும், இன்று வரை ஆகட்டும், பின்னுட்டங்கள் வருவது பதிவின் பொருளடக்கத்தினாலே என்பது தான் என் புரிதல்.
அண்ணே குசும்பனை எதுக்கு கிண்டல் செய்யறிங்க
நல்லா இருங்க! (இதுக்கு எத்தனை கவுண்ட்?)
இம்சை:
வாங்க.. வாங்க... ஹாஹா... நான் அனுப்பி வைக்கணும்னே இல்லீங்க... அவங்க இங்கேயும் இருப்பாங்க...அங்கேயும் இருப்பாங்க... எங்கேயும் இருப்பாங்க....:-)
பினாத்தல் சுரேஷ்:
வருகைக்கு நன்றி... உங்க கவுண்ட்:
1000, 10000, ... , மாமா பிஸ்கோத்து...:-)
இப்பின்னூட்டம் கோடி பெறும். :)
//
இப்பின்னூட்டம் கோடி பெறும். :)
//
சரியா சொன்ன தலீவா...!
ஹேய் - என்ன வைச்சு காமெடி கீமெடி பண்ணலேயே - நான் பின்னூட்டமிடுவதில் அதிக விருப்பமுள்ளவன். அவ்வளவு தான். முடிந்த வரை அனைத்துப் பதிவுகளிலும் பின்னூட்டமிடுபவன். ஊக்கு விப்பவன். வாங்குவது யாரெனத் தெரிய வில்லை. ம்ம்ம்ம்ம்
ஒரு தடவை சொன்னா 1000 தடவை சொன்ன மாதிரியா..பலே பலே - கதா நாயகனே - வாழ்க - வளர்க - தொடர்க - வாழ்த்துகள்
வருகைக்கு நன்றி அரை பிளேடு மற்றும் கருப்பன்...
cheena (சீனா) ->
ஐயா... என்ன இப்படி சொல்லிட்டீக.. இது நிஜம்தான்னு இங்கனயே ஒருத்தரு சொல்லியிருக்காரு பாத்தீகளா? நீங்க வித்ததை நான் வாங்கிட்டேன்னு நினைக்கிறேன்... நன்றி... :-)
அடேங்கப்பா இதோட சேத்து
16000
Post a Comment