ஆளுங்கட்சியினரின் சாதனைகளை 1,2,3 என்று வரிசைப்படுத்தி பாடுக!!!
திருவிளையாடல் பாணியில் - நம் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியினரின் சாதனைகளை ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசைப்படுத்தி பாடினால் - எப்படி இருக்கும் என்று ஒரு சிறு கற்பனை.
1 - ஆளுங்கட்சிக்கு சாதகமான ஒரு தொலைக்காட்சி தொடங்குதல்
2 - மாவட்டங்களை இணைத்தல் அல்லது பிரித்தல்
3 - தமிழக / இந்திய / வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலிருந்து டாக்டர் பட்டம் பெறுதல்
4 - அணைகள் கட்டுதல் - இந்த அணைகள் தமிழ்நாட்டிலல்ல - அண்டை மாநிலங்களில். (டெண்டர் எடுப்பது நம் ஆட்கள்தானே).
5 - கடையடைப்பு நடத்துதல் - மத்திய அரசில் இருந்தாலும் / இல்லா விட்டாலும் இந்த கடையடைப்பு நடைபெற வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.
6 - நதிகள். இணைப்பு வேலையல்ல - மணல் அள்ளி அள்ளி நதிகளை காணாமல் போகச் செய்தல்.
7 - பெயர் மாற்றம் - தமிழ் நாட்டிலுள்ள நகரங்கள், இரயில் நிலையங்கள், தெருக்கள் ஏதாவது பெயர்களை மாற்றி வைத்தல்
8 - தொழிற்சாலைகள் சென்னையை சுற்றி தொடங்குதல்
9 - மேம்பாலங்கள் சென்னையில் தொடங்குதல். அவற்றை எப்போது முடிப்பது என்பதை பற்றி யாரும் பேசக்கூடாது.
10 - வழக்குகள் முன்னாள் முதல்வர் மேல் தொடுத்தல்.
ஆளுகின்ற எந்த கட்சியானாலும் (மொத்தமே இரண்டு கட்சிகள்தானே மாற்றி மாற்றி ஆளுகின்றன!!) இந்த வரிசை பெரும்பாலும் பொருந்தி வரும் என்று நினைக்கிறேன்.
அப்போ நீங்க?
1 comments:
இந்த மாதிரி உண்மையெல்லாம் படார்னு போட்டு உடைக்கப்படாது. சின்ன புள்ளத் தனமா இல்ல இருக்கு.
Post a Comment