ஊர்வம்பு - அரைபக்க கதை
சுரேஷ் அலுவலகத்தில் உட்கார்ந்துகொண்டு, வழக்கம்போல் இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தான்.
ஒருவர் கால நிர்வாகம் (Time Management) பற்றி இப்படி எழுதியிருந்தார்.
யார் உங்கள் நேரத்தை வீணடிக்க வந்தாலும், அவரிடம் கீழ்க்கண்ட மூன்று கேள்விகளைக் கேளுங்கள். மூன்று கேள்விகளுக்கும் 'ஆம்' என்று அவர் பதில் சொன்னால், பேச அனுமதியுங்கள். இல்லையென்றால், எனக்கு வேலையிருக்கிறது என்று ஆளை அனுப்பிவிடுங்கள்.
1. இது நிஜமான விஷயமா?
2. இது உங்களை அல்லது என்னைப் பற்றிய விஷயமா?
3. இது நமக்கு உபயோகமான விஷயமா?
இது நல்லாயிருக்கே? என நினைத்த சுரேஷ் - மாலையில் வீடு திரும்பியபோது, தங்கமணி வந்தார்.
என்னங்க, உங்களுக்கு விஷயம் தெரியுமா?.
இரு. முதல்லே உன்கிட்டே நான் மூன்று கேள்விகள் கேக்குறேன். அந்த கேள்விகளில் ஏதாவது ஒன்றுக்கு கூட 'ஆமாம்' என்ற பதில் வச்சிருந்தேன்னா, எனக்கு ஒரே தலைவலியா இருக்கு. ஆபீஸ்லே பயங்கர வேலை. அதனாலே, நாம் நாளைக்குப் பேசிக்கலாம்.
மூன்று கேள்விகளுக்கும் உன்னோட பதில் 'இல்லை' அப்படின்னா, விஷயத்தை இப்பொவே சொல்லு - என்றபடி, கேள்விகளை கேட்க ஆரம்பித்தான்.
4 comments:
இது தான் யதார்த்தம் - பையா
நன்றி... cheena (சீனா) ஐயா ...:-)
//
இரு. முதல்லே உன்கிட்டே நான் மூன்று கேள்விகள் கேக்குறேன். அந்த கேள்விகளில் ஏதாவது ஒன்றுக்கு கூட 'ஆமாம்' என்ற பதில் வச்சிருந்தேன்னா, எனக்கு ஒரே தலைவலியா இருக்கு. ஆபீஸ்லே பயங்கர வேலை. அதனாலே, நாம் நாளைக்குப் பேசிக்கலாம்.
//
ஹாஹா கலக்கல்!!!
வாங்க மங்களூர் சிவா - நன்றி...
Post a Comment