வாடகைக்கு வருபவர், வீட்டு உரிமையாளருக்கு விதிக்கும் நிபந்தனைகள்!!!
அனுப்புனர்: வீட்டு வாடகைக்கு வருபவர்.
பெறுனர்: வீட்டு உரிமையாளர்.
ஐயா,
நீங்கள் கொடுத்த வாடகை ஒப்பந்தத்தை படித்துப் பார்த்தேன். அதில் எனக்கு பரிபூர்ண சம்மதம். ஒவ்வொரு 11 மாதங்களுக்கும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு, வாடகை குறிப்பிட்ட சதவிகிதம் ஏற்றப்படும் என்று போட்டிருந்தீர்கள்.
வாடகை ஏற்றுவதற்கு ஏன் 11 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று எனக்கு புரியவில்லை. சில நிபந்தனைகளின்படி - நான் மாதாமாதம் கூட - சென்ற மாத வாடகையை விட அதிகம் கொடுக்க தயாராக உள்ளேன். அதாவது, நான் கீழே கொடுத்துள்ள சில நிபந்தனைகளில் எந்த ஒன்று நடந்தாலும்கூட நான் உடனடியாக வாடகையை ஏற்றிக்கொடுக்க தயாராக உள்ளேன்.
இனி என் நிபந்தனைகள். அடைப்புக்குறிக்குள் இருப்பவைகளை நீங்கள் படிக்க வேண்டாம். அவை நான் என் மனதில் நினைப்பவையாகும்.
ஆகவே, 11 மாதங்களுக்குப் பதில், இந்த நிபந்தனைகளை ஒப்பந்தத்தில் போட நீங்கள் சம்மதிப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.
திமுக, பாமக இல்லாத மத்திய அமைச்சரவை அமைந்ததும்
(ஒரு காதை அறுத்துக்கறேண்டா)
அன்புமணி ராமதாஸ் அமைச்சர் பதவியிலிருந்து இறங்கியவுடன்
(இது எப்போதும் நடக்கப்போவதில்லை)
முல்லை பெரியார், ஒகனெக்கல் பிரச்சினை தீர்ந்தவுடன்
( நம்மாளுங்க இதை தீர்க்கமாட்டாங்க)
கத்திப்பாரா மேம்பாலம் முடிஞ்சதும்
(அது போகும் இன்னும் பல வருஷத்திற்கு)
மணல் கொள்ளையில் பிடிபட்டவர், தக்க தண்டனை பெற்றதும்
(மொதல்ல பிடிபடட்டும்)
ஒலிம்பிக்ஸில் இந்தியா ஒரே ஒரு பதக்கம் வாங்கியவுடன்
(ஹாஹா)
ரஜினிகாந்த் தன் வயதுக்கேற்ற பாத்திரத்தில் நடித்தவுடன்
(என் பேரன் கவலைப்படவேண்டியது இது)
கோலங்கள் தொடர் முடிஞ்சதும்
(அது முடிவே இல்லாதது)
பிகு: இந்த கடிதத்திற்கு அந்த வீட்டு உரிமையாளரின் பதில் மற்றும் அவரது நிபந்தனைகள் - நாளைய பதிவில்...
8 comments:
இன்னுமா கோலங்கள் முடியல!!!
வாங்க வீரசுந்தர்... ஆமாங்க.. அது இப்போதைக்கு முடியாது... :-)
வாங்க வீரசுந்தர்... ஆமாங்க.. அது இப்போதைக்கு முடியாது... :-)
கத்திப்பாரா மேம்பாலம் முடிஞ்சதும்--
முடிஞ்சிருச்சின்னு சொன்னாங்க?
ஏன் எல்லாரும் ரஜினியையே தாக்குறிங்க...பொறாமை??
வாங்க வடுவூர் குமார் -> அப்படியா, செய்தியை நான் சரிபார்க்கிறேன்... நன்றி...
// கத்திப்பாரா மேம்பாலம் முடிஞ்சதும்--
முடிஞ்சிருச்சின்னு சொன்னாங்க?//
NO WAY.... recently opened flyover is the smaller one in T.Nagar.
Venpu -> Thanks for coming and clarifying...
Post a Comment