Monday, March 31, 2008

என் பங்குக்கு கொஞ்சம் பிரம்ம ரசம்!!!

















Read more...

வாடகைக்கு வருபவர், வீட்டு உரிமையாளருக்கு விதிக்கும் நிபந்தனைகள்!!!

அனுப்புனர்: வீட்டு வாடகைக்கு வருபவர்.
பெறுனர்: வீட்டு உரிமையாளர்.

ஐயா,

நீங்கள் கொடுத்த வாடகை ஒப்பந்தத்தை படித்துப் பார்த்தேன். அதில் எனக்கு பரிபூர்ண சம்மதம். ஒவ்வொரு 11 மாதங்களுக்கும் ஒப்பந்தம் புதுப்பிக்கப்பட்டு, வாடகை குறிப்பிட்ட சதவிகிதம் ஏற்றப்படும் என்று போட்டிருந்தீர்கள்.

வாடகை ஏற்றுவதற்கு ஏன் 11 மாதங்கள் காத்திருக்க வேண்டும் என்று எனக்கு புரியவில்லை. சில நிபந்தனைகளின்படி - நான் மாதாமாதம் கூட - சென்ற மாத வாடகையை விட அதிகம் கொடுக்க தயாராக உள்ளேன். அதாவது, நான் கீழே கொடுத்துள்ள சில நிபந்தனைகளில் எந்த ஒன்று நடந்தாலும்கூட நான் உடனடியாக வாடகையை ஏற்றிக்கொடுக்க தயாராக உள்ளேன்.

இனி என் நிபந்தனைகள். அடைப்புக்குறிக்குள் இருப்பவைகளை நீங்கள் படிக்க வேண்டாம். அவை நான் என் மனதில் நினைப்பவையாகும்.

ஆகவே, 11 மாதங்களுக்குப் பதில், இந்த நிபந்தனைகளை ஒப்பந்தத்தில் போட நீங்கள் சம்மதிப்பீர்கள் என்று நம்புகிறேன். நன்றி.

திமுக, பாமக இல்லாத மத்திய அமைச்சரவை அமைந்ததும்
(ஒரு காதை அறுத்துக்கறேண்டா)

அன்புமணி ராமதாஸ் அமைச்சர் பதவியிலிருந்து இறங்கியவுடன்
(இது எப்போதும் நடக்கப்போவதில்லை)

முல்லை பெரியார், ஒகனெக்கல் பிரச்சினை தீர்ந்தவுடன்
( நம்மாளுங்க இதை தீர்க்கமாட்டாங்க)

கத்திப்பாரா மேம்பாலம் முடிஞ்சதும்
(அது போகும் இன்னும் பல வருஷத்திற்கு)

மணல் கொள்ளையில் பிடிபட்டவர், தக்க தண்டனை பெற்றதும்
(மொதல்ல பிடிபடட்டும்)

ஒலிம்பிக்ஸில் இந்தியா ஒரே ஒரு பதக்கம் வாங்கியவுடன்
(ஹாஹா)

ரஜினிகாந்த் தன் வயதுக்கேற்ற பாத்திரத்தில் நடித்தவுடன்
(என் பேரன் கவலைப்படவேண்டியது இது)

கோலங்கள் தொடர் முடிஞ்சதும்
(அது முடிவே இல்லாதது)

பிகு: இந்த கடிதத்திற்கு அந்த வீட்டு உரிமையாளரின் பதில் மற்றும் அவரது நிபந்தனைகள் - நாளைய பதிவில்...

Read more...

Saturday, March 29, 2008

மூன்று திரை விமர்சனங்கள் ஒரே பதிவில்!!!

ரொம்ப நாளாக திரை விமர்சனம் எழுதவேண்டுமென்று ஆசையாக இருந்தது. அது இன்றுதான் நிறைவேறியது. நான் இங்கு செய்துள்ள திரை விமர்சனம் நன்றாக இருக்கிறதா என்று சொல்லுங்கள்.

திரை 1 விமர்சனம்: பூ போட்ட திரை நல்லாத்தான் இருக்கு. குழந்தை அறையில் இதை போட்டுவிடலாம்.

திரை 2 விமர்சனம்: இந்த கலர் நல்லாயில்லை. அடுத்தது பாப்போம்.

திரை 3 விமர்சனம்: இது படுக்கை அறையில் போடலாம்.

உங்கள் கருத்து என்ன?






Read more...

Friday, March 28, 2008

பழைய்ய்ய்ய காரை யாராவது வாங்குவாங்களா?

"மாப்ளே, கார் வாங்கிட்டேன்டா!!!"...
"அப்படியாப்பா, கலக்கறே போ... எப்போ ட்ரீட்"?.. இது நான்.

"இன்னிக்கு சாயந்திரம் வீட்டுக்கு வா, நம்ம நண்பர்கள் எல்லாரையும் கூப்பிட்டிருக்கேன். சாப்பிட வந்துரு".

சுரேஷ் என் நண்பன். 2 மாதங்களாக அமெரிக்கா வாசம். இப்போதுதான் கார் வாங்கியிருக்கிறான்.
"சுரேஷ், என்ன மாடல் கார்? எவ்ளோ ஓடியிருக்கிறது? எவ்ளோ காசு?"

"ஒவ்வொண்ணா கேள்றா. கார் கொஞ்சம் பழசுதாண்டா... 25 வருஷம் பழைய மாடல்"...

"என்னது? 25 வருஷம் பழைய மாடலா? அதை ஏண்டா வாங்கினே?"

"அதை வித்தவனும் எனக்கு தெரிஞ்சவந்தாண்டா.. அவனை நம்பித்தான் வாங்கினேன்."

"அது சரி... காரோட வரலாறைப் பாத்துதானே வாங்கினே? ஒண்ணும் பிரச்சினையில்லையே"?

"வரலாறையெல்லாம் பாத்துதாண்டா வாங்கினேன். ரெண்டே ரெண்டு விபத்துதான். அதுவும் வேறே ஒருத்தனாலே ஆன விபத்துகள்தான். அதுதான், தைரியமா வாங்கிட்டேன்."

"சரி, காசு எவ்ளோ கொடுத்தே? ரொம்ப கம்மியான விலையிலேதானே வாங்கினே?"

"ஆமாடா.. பத்தாயிரம் சொன்னான். நாம் ஒண்ணும் பேரம் பேசலே.. ஒரே செக்கா கொடுத்துட்டேன்."

"என்னது? பத்தாயிரமா? பயங்கரமா ஏமாந்திருக்கேடா?...என்ன கார் சொன்னே? ஏதாவது பிரச்சினை வந்தாக்கா சரி செய்யவாவது ஆளிருக்குமா இந்த ஊர்லே?"

"இல்லை. என்ன பிரச்சினை வந்தாலும், அவனோட ஆளு வந்துதான் சரி செய்யணும். இன்னிக்கு கார் வாங்கினவுடனேயே ஒரு பிரச்சினை வந்திடுச்சு. அவன் அடுத்த வாரம் ஆள் அனுப்பி சரி செய்து தர்றேன்னு சொல்லியிருக்கான்."

"இவ்ளோ நடந்திருக்கு. ஆனா, எனக்கு ஒரு வார்த்தை கூட சொல்லவேயில்லையே... சரி.. உன் மனைவிக்காவது இதெல்லாம் தெரியுமா?"

"இல்லை. அவளுக்கு முழுசா தெரியாது."

"நீ பண்ணது கொஞ்சம் கூட நல்லாயில்லே. இரு. சாயங்காலம் வந்து நான் எல்லாத்தையும் உன் மனைவிக்கும் நம் மத்த நண்பர்கள் கிட்டேயும் சொல்லிடறேன்".

"வேணாடா.. தயவு செய்து அப்படி எதுவும் செய்துடாதே.. நீ வேறே எதுவேணா சொல்லு.. நான் கேட்கறேன். இதை மட்டும் என் வீட்டுலே சொல்லிடாதே. அப்புறம் மாட்டிக்கறது நாந்தான்".

"இந்த பயம் முன்னாடியே இருந்திருக்கணும். நான் இதை சொல்லியே ஆகணும். வர்றேன்".

"சரி.. நீ இதை என் மனைவிக்கிட்டே சொல்லு.. நான் உன்னுடைய 'அந்த' விஷயத்தை உன் மனைவிக்கிட்டே சொல்லிடறேன்".

"ஆ.. வேணாண்டா.. இப்போதான் நானும் என் மனைவியும் 'அந்த' விஷயத்தை கொஞ்சம் கொஞ்சமா மறந்துட்டு வர்றோம். நீ வேறே எங்க நடுவிலே ' நந்தி' மாதிரி வந்து காரியத்தை கெடுத்துடாதே... சரி.. நானும் எதுவும் சொல்லலே... நீயும் எதுவும் சொல்லாதே... ஓகேவா... போனை வெச்சிடறேன்.. பை".

பி.கு: இந்த கதைக்கு மூலம் இதுதான். சுரேஷ் மற்றும் நான் யார் என்பது உங்கள் கற்பனைக்கே விட்டுவிடுகிறேன்.

Read more...

Thursday, March 27, 2008

சென்னையில் வீட்டு வாடகை உயர்வு - விளைவுகள்

அங்கே என்ன ஏலம் நடக்குது?

வாடகை வீடுதான். யாரு அதிகமா 'வாடகை' ஏலம் எடுக்கறாங்களோ, அவுங்களுக்கு வீடு கொடுப்பாங்களாம்.
---


பாஸ், இவரை கடத்தலாமா, சொந்த வீடு வெச்சிருக்காரு?

லூசாப்பா நீ, அவரை விடு. இவரைப் பாரு. வாடகை குடுத்துண்டு ஒரு வீட்டிலே இருக்காரு. நினைச்சிப் பாரு, எவ்ளோ பணமிருக்குமின்னு.
---


நயா பைசா வரதட்சிணை வேண்டாம்னு சொன்ன மாப்பிள்ளையை வேண்டாம்னுட்டியாமே? ஏன்?

வரதட்சிணைக்குப் பதிலா 5 வருஷத்துக்கு அவர் வீட்டு வாடகையை நான் குடுக்கணுமாம். கட்டுப்படியாகுமா?
---


எல்.ஐ.சியின் 'ஜீவன் வாடகை' பாலிசி.
5 வருஷத்திற்கு சிறிய ப்ரிமியம் கட்டுங்க. பிறகு உங்கள் வாழ்க்கை முழுவதும் உங்கள் வாடகையை எல்.ஐ.சி கட்டும்.

---


வழியில் கிடந்த ஒரு விளக்கை எடுத்து தேய்த்தவுடன், ஒரு பூதம் வந்தது

ஏதாவது ஒரு வரம் கேள்.

எனக்கு ஒரு பெண்ணின் மனசில் என்ன நினைக்கிறான்னு தெரியணும்.

அது ரொம்ப கஷ்டம்பா. அவங்க என்ன நினைக்கிறாங்கன்னு கடவுளுக்கே கூட தெரியாது. வேறே ஏதாவது கேளு.

ஓகே. சென்னையில் ரெண்டு வருஷத்திற்கான என் வீட்டு வாடகையை எனக்கு கொடுத்துவிடு.(பூதம் ஒரு நிமிடம் யோசித்து)... சரி... எந்த பெண் மனசைப்பத்தி உனக்கு தெரியணும்?

Read more...

Wednesday, March 26, 2008

அம்புலிமாமாவில் ஒரு புதிய பகுதி - கிசுகிசு

தினமலர், குமுதம் ஆகியவற்றில் வருவதுபோல் அம்புலிமாமாவிலும் ஒரு 'கிசுகிசு' பகுதி துவக்கினால் எப்படி இருக்கும் என்று ஒரு சிறிய கற்பனை. இனி கிசுகிசு.


'பூனை' போன்ற விழிகளையுடைய நடிகையும், 'நாய்'வால் போன்று நிமிர்த்தமுடியாத படத்தைக் கொடுத்த நடிகரும் சேர்ந்து ஒரு 'சொத்து' வாங்கினர். சென்ற வாரம் அவர்கள் பிரிந்தபோது, அந்த 'சொத்தை' பங்கிட்டுக்கொள்ள முடிவு செய்தனர். அதில் சமரசம் காண முடியாமல் சண்டை வரவே, பஞ்சாயத்து செய்ய 'குரங்கின்' மற்றொரு பெயரைக் கொண்ட இயக்குனரிடம் சென்றனர்.

அந்த இயக்குனரும் பஞ்சாயத்து செய்வது போல் செய்து, கொஞ்சம் கொஞ்சமாக அந்த சொத்தை ஆக்ரமித்துக் கொண்டு விட்டார். அந்த சொத்து வெள்ளைக்கணக்கில் வராததால், நடிகையும், நடிகரும் நீதிமன்றத்துக்குச் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.


Read more...

Tuesday, March 25, 2008

"சூப்பர்" ஸ்டாரின் புகைப்படங்கள் இணையத்தில் - நிலாவுடன்!!!











Read more...

Monday, March 24, 2008

புத்தம் புதிய திரைப்படம் 'தமிழ்மணம்' - திரை விமர்சனம்

எச்சரிக்கை: பதிவின் இறுதியில் இருக்கும் 'டிஸ்கி'யை இப்போதே படிக்க வேண்டாம்.

சுரேஷ் - சிறந்த பதிவர் ஆகவேண்டுமென்பதற்காக தன் கற்பனையிலிருந்து பற்பல கதை, கட்டுரை, கவிதைகள் ஆகியவற்றை தயார் நிலையில் வைத்துக்கொண்டிருக்கிறார். தமிழ்மணத்தில் ஒரு பதிவை துவக்கி ஒவ்வொரு நாளும் ஒரு பதிவைப் போட்டு 2008ன் சிறந்த பதிவராக வேண்டுமென்று கடுமையாக உழைக்கிறார்.

ரமேஷ் - இவரும் தமிழ்மணத்தில் பதிவை புதிதாக துவக்கியிருக்கிறார். ஆனால் ஒரு பதிவு போடக்கூட சரக்கு இல்லை. இவர், சுரேஷிடமிருந்து சில சூடான பதிவுகளைத் திருடி தன் பெயரில் வெளியிடுகிறார். அப்படி செய்வதால் இரண்டே பதிவுகளில் மிகவும் பிரபலமாகி விடுகிறார். எல்லோரும் ரமேஷின் பதிவில் 'மீ த பஷ்டு', 'மீ த செகண்டு' என்று போட்டி போட்டு பின்னூட்டம் இடுகின்றனர். அவரது ஒரு பதிவுக்கு 1000+ பின்னூட்டம் கிடைக்கிறது. வெகு விரைவில் அவர் நட்சத்திரப் பதிவராகிறார்.

இதற்கு நடுவில், சுரேஷுக்கு 'போலி' ஒருவரால் அவப்பெயர் உண்டாகிறது. அதனால், அவரின் பதிவு முயற்சியில் தொய்வு ஏற்படுகிறது.

மனம் வெறுத்த சுரேஷ், ரமேஷுடன் சேர்ந்து ஒரு 'சங்கம்' துவக்குகிறார். அதில் அவர் சந்திக்கும் பிரச்சினை என்ன, க்ளைமாக்ஸில் என்ன திருப்பம் உண்டாகிறது என்று வெள்ளைத்திரையில் காணுங்கள்.

நடிகர்கள்: சுரேஷ், ரமேஷ் - இருவரும் தமது பாத்திரங்களை உணர்ந்து நன்றாக செய்திருக்கின்றனர்.

பாடல்கள்: ரமேஷ் தன் பதிவில் போட்டிருக்கும் பாடல் பதிவுகள் நன்றாக இருக்கின்றன.

சண்டைப் பயிற்சி: சுரேஷ்-போலி இவர்கள் போடும் சண்டைக்காட்சிகள் மிகவும் அருமையாக இருக்கிறது. சுரேஷ் தன் உயிரைப் பணயமாக வைத்து சண்டை போட்டிருக்கிறார்.

ஆக மொத்தம், 'தமிழ்மணம்' - நல்ல மணம்.

டிஸ்கி: இந்தப் படம் 'வெள்ளித்திரை' திரைப்படத்தின் தழுவல் இல்லை, இல்லை, இல்லை!!!

Read more...

Sunday, March 23, 2008

சென்னையை சிங்காரச் சென்னையாக மாற்றுவதற்கு எளிய வழி...!!!

திரு.ஸ்டாலின் சென்னையின் மேயராக இருந்தபோது, சென்னையை 'சிங்காரச் சென்னை'யாக மாற்றுவதற்கு பல நடவடிக்கைகளை எடுத்தார்.

ஆனால், நமக்குத் தோன்றியது ஒரு மிகவும் எளிதான வழி.

'மெட்றாஸ்'-லிருந்து 'சென்னை'யானது போல் - 'சென்னை'யை 'சிங்காரச் சென்னை' என்று பெயர் மாற்றம் செய்தால் போதுமானது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?




Read more...

Saturday, March 22, 2008

பால் விலை உயர்வு: செய்தியின் விளைவுகள்

நிலாவை ஏன் 'பால் நிலா' அப்படின்னு கவிஞர் சொன்னாரு தெரியுமா?
'பால்' விலை அவ்வளவு உசரத்துக்கு போகும்னு அப்பவே அவருக்கு தெரியும்போல...
---



திருக்குறள் புத்தகத்திலே போட்டிருக்கறத விட அதிகமா விலை சொல்றீங்களே?
எல்லா 'பால்'களின் விலையும் ஏறிப்போச்சுங்களே?
---



ஏங்க, நான் 'பெர்சனல்' லோன் தானே கேட்டேன்? நீங்க ஏன் சம்பந்தமில்லாம நான் தினமும் எவ்ளோ பால் வாங்கறேன்னு கேக்குறீங்க?

அதை வச்சித்தாங்க நீங்க வசதியானவரா, லோனை ஒழுங்கா திருப்பி கட்டுவீங்களா அப்படின்னு முடிவெடுப்போம்.
---



பக்கத்து மாநிலங்களைவிட தமிழ்நாட்டில் பால் விலை கம்மின்னு ஏன் அடிக்கடி சொல்றாங்க? மத்த பொருட்களோட இதையும் 'கடத்தலாம்'னு சொல்றாங்களான்னு நினைக்கிறேன்.
---



ஏன் நம்ம கட்சியிலிருந்து நிறைய பேர் வெளியேறி வேறே கட்சிக்குப் போயிடறாங்க?
எல்லாம் உங்களாலதான். எல்லா விழாலேயும் இப்பொல்லாம் நீங்க எடைக்கு எடை 'பால்' வேணும்றீங்களே?
---



இதோ பாருங்க, நாங்க மாடு வாங்கத்தான் கடன் கொடுப்போம். 'பால்' வாங்கல்லாம் கடன் கொடுக்கமாட்டோம். சொன்னாப் புரிஞ்சிக்கோங்க.
---



மிஸ், புல்வெளியிலே புல் இருக்கு. அதேபோல், மேலே பால்வெளியிலே பால் நிறைய இருக்குமே, அங்கேயிருந்து இறக்குமதி செய்யமுடியாதா?

Read more...

Friday, March 21, 2008

நம்பிக்கை - அரைபக்க கதை

ரொம்ப நாட்களாக வரவேண்டிய பணம், எதிர்ப்பார்த்தபடி இன்றைக்கும் வரவில்லை. எல்லாம் என் அதிர்ஷ்டம் என்று நொந்துகொண்ட சுரேஷ், தன் வாகனத்தில் அலுவலகம் புறப்பட்டான். பணம் என்றால் ஒன்றல்ல, இரண்டல்ல, சுளையாய் பத்து லட்சம் ரூபாய். இந்த வாரமாவது அந்த பணம் கிடைத்தால், அம்மாவின் விருப்பப்படி கிராமத்தில் உள்ள பெரிய வீட்டை வாங்க வேண்டும்.

அலுவலகத்தில் பக்கத்து இருக்கையில் உள்ளவர் கேட்டார்,

"ஏம்பா சுரேஷ், இன்னைக்காவது எனக்குத் தரவேண்டிய ஐநூறு ரூபாய் தருவாயா?".
"கண்டிப்பாக இந்த வாரத்திற்குள்ளாக தந்து விடுகிறேன். எனக்கு வரவேண்டிய பணம் இன்றைக்கும் வரவில்லை."

"உனக்கு வரவேண்டிய பணமா? எங்கிருந்து வரவேண்டியிருக்கிறது?"

"இதோ பாருங்கள். இந்த வாரத்திய அனைத்து பரிசுச்சீட்டுகள். ரொம்ப நாளாக பரிசு விழும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக இந்த வாரம் முதல் பரிசு எனக்கே விழும் என்று நம்பிக்கை இருக்கிறது. அப்படி பரிசு விழுந்தவுடன், கண்டிப்பாக உனக்கு சேரவேண்டிய ஐநூறு ரூபாய் தந்துவிடுகிறேன்."

டிஸ்கி: தமிழகத்தில் பரிசுச்சீட்டுகள் விற்பனை தடை செய்யப்பட்டிருப்பதால், இந்த கதைக்களம் (!!) வேறு மாநிலத்தில் இருப்பதாக நினைத்துக்கொள்ளவும்.

Read more...

Thursday, March 20, 2008

தமிழ்லே பேசறது எவ்ளோ கஷ்டம் தெரியுமா???

முன்னுரை:

கட்சியிலே எல்லோரும் தூய தமிழில்தான் (ஆங்கில வார்த்தைகள் கலப்பில்லாமல்) பேசவேண்டும் என்று ஒரு கட்சித்தலைவர் கூறிவிடுகிறார். அந்த தலைவரது பிறந்த நாள் விழாவில் ஒரு தொண்டர் "தமிழில்" பேச நினைக்கிறார். அவர் எப்படி பேசுகிறார் என்று பாருங்கள். இனி தொண்டர் பேச்சு.

அம்பத்தெட்டாம் வட்ட சார்பாக பேச வந்திருக்கேன். நம்ம தலைவரைப் பத்தி பத்து நிமிஷம் பேசணும்னு சொன்னாங்க. அவர சின்ன வயசிலேர்ந்து கிட்ட இருந்து பாத்தவன் நான். அதனால அவரோட சின்ன வயசு விஷயங்கள பகிர்ந்துக்கிறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம்.

நம்ம தலைவரு சின்ன வயசில அதிலேதான் பள்ளிக்கூடத்துக்குப் போவாரு. அப்போ அடிக்கடி கீழே அது கழண்டுடும். அவரும் சளைக்காம குனிஞ்சி குனிஞ்சி அதை எடுத்து மாட்டிக்கிட்டே போவாரு. வழியிலே நின்னு அவரு அதை மாட்டும்போது எல்லோரும் கத்துவாங்க. ஆனா அவரு யாரையும் கண்டுக்கவே மாட்டாரு. அந்த பொறுமையும், மன தைரியமும் நாம அவரிடமிருந்து கற்க வேண்டிய பாடங்களாகும்.

நம்ம தலைவரு அதை குடிப்பாரான்னு நிறைய பேர் என்னைக் கேட்டிருக்காங்க. சின்ன வயசிலேர்ந்தே தலைவரு அதை விரும்பி குடிப்பாரு. அவங்க அப்பா, அம்மால்லாம் திட்டினாலும், யாருக்கும் தெரியாம சந்து முனையிலே மறைஞ்சி நின்னு குடிப்பாரு. நானே அதை நிறைய தடவை அவருக்கு வாங்கி குடுத்திருக்கேன். பிறகு, வயித்து வலி வந்தப்புறம் அதை குடிக்கறதை நிறுத்திட்டாரு. இன்னிவரைக்கும் அதை அவர் கையால தொடலியே. இந்த அவரோட பக்குவம் நம்ம எல்லாருக்கும் வரணும்.

நம்ம தலைவருக்கு ரொம்ப இளகிய மனம் அப்படிங்கறது ரொம்ப பேருக்குத் தெரியாது. வீட்லே, அதோட அது மேலே வராமே தவிச்சாக்கூட இவரால பொறுத்துக்க முடியாது. ஓடிப்போய் அதை தூக்கி விட்டுடுவாரு. நம்ம தலைவரோட மனைவி திட்டினாலும் அவரு கண்டுக்கவே மாட்டாரு. அது எப்படி கஷ்டப்படுது பாரு அப்படின்னு, அதை தூக்கி விட்டுட்டே இருப்பாரு.

தலைவரு இப்போல்லாம் அதிலே போறாரே அப்படின்னு நிறைய பேர் சொல்லி என் காதாலே கேட்டிருக்கேன். அவருக்கு என்ன ஆசையா அதிலே உட்கார்ந்து போறதுக்கு? கொஞ்ச நாள் முன்னாலே கூட, அவரு அதிலேதான் போயிட்டிருந்தாரு. ஒரு நாள் என்ன ஆச்சுன்னா, அவரு போயிட்டுருந்தப்போ, ஒருத்தன் வந்து அவர் பின்னாடி இடிச்சிட்டான். அவரும் கீழே விழுந்து ஒரே அடி. அன்னிலேருந்து, அவரு இதிலேதான் உக்கார்ந்து போறாரு. பாதுகாப்புக்கு கூடவே எப்பவும் ரெண்டு பேரோடதான் போவாரு.

அவரு அதிலே போற அழகை நீங்கல்லாம் பாக்கணுமே... அடடா... ரெண்டு கையையும் காலையும் விரிச்சிக்கிட்டு.. ஆகா.. காண கண் கோடி வேணும்.

அவருடைய பிறந்த நாளாகிய இன்னிக்கு நான் அரசுக்கு ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். நாட்டுக்கு பல நன்மைகள் செஞ்ச இவரோட அதை, நம்ம சட்டமன்றத்திலே வைக்கணும்னு கேட்டுக்கறேன். நம்ம கட்சி அலுவலகத்திலே இருக்கறாமாதிரி, அவரோட பெரிய அதை அங்கேயும் மாட்டணும்னு வேண்டிக்கறேன்.

வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.

பின்னுரை:

சில வார்த்தைகளுக்கு தமிழில் தெரியாததால், தொண்டர் அது, இது அப்படின்னு பேசி சமாளிச்சிட்டார்.

ஆனா, நீங்க ஏடாகூடமா புரிஞ்சிக்ககூடாது என்பதற்காக, அவர் சொல்ல நினைத்த 'அது/இது'வை இங்கே மொழிபெயர்த்துத் தருகிறேன்.

இரண்டாம் பத்தி: சைக்கிள், செயின்

மூன்றாம் பத்தி: கூல் ட்ரிங்க்ஸ்

நான்காம் பத்தி: குக்கர், விசில்

ஐந்தாம் பத்தி: கார், பைக்

ஏழாம் பத்தி: போட்டோ

Read more...

Wednesday, March 19, 2008

தமிழ்நாட்டை ரெண்டா பிரிச்சித்தான் ஆகணும்...!!!

தமிழ்நாட்டை ரெண்டா பிரிச்சாகணும் அப்படின்னு நம்ம ஊர் அரசியல்வாதிங்க சில பேர் சொல்றதுதாங்க. சரி, அதுக்கு நாம என்ன உதவி பண்ணலாம்னு யோசிச்சப்போ தோணினதுதாங்க இது.

பிரிச்சது ஓகே அப்படின்னீங்கன்னா, என் கையெ எடுத்துடுவேன்.

Read more...

Tuesday, March 18, 2008

உப்புமாவும் மாமியாரும்

சென்ற வாரம் ஒரு பிறந்த நாள் விழாவிற்குப் போயிருந்தோம். வழக்கம்போல், சிறுவர்களுக்கும் பெரியவர்களுக்கும் சிறுசிறு விளையாட்டுகள் ஏற்பாடு செய்திருந்தனர்.

பெரியவர்கள் விளையாட்டில் - தங்களுக்கும் தங்கள் துணைவருக்கும் 'பிடிக்காத' படம், நடிகர், நடிகை, வண்ணம், உணவு ஆகியவற்றை எழுதவேண்டும். எந்த ஜோடி அதிகம் பொருத்தமான பதில்களை எழுதியதோ அவர்கள் வெற்றி பெற்றதாக அறிவித்தனர். நிற்க (ஏற்கனவே நின்றிருந்தால் உட்கார்க).

போட்டி முடிவடைந்த பிறகு ஒரு சுவையான தகவல் கிடைத்தது. வந்திருந்த 15 ஜோடிகளில், 10 பேர் தென்னிந்தியர்கள். அந்த 10 ஜோடிகளில், 8 ஜோடிகள் - தங்களுக்கும்/துணைவருக்கும் பிடிக்காத உணவு - உப்புமா என்று எழுதியிருந்தனர்.

இதிலிருந்து அடுத்த போட்டி துவங்கியது. உப்புமா ஏன் பிடிக்காது என்று எல்லோரும் அவரவர் காரணத்தை சொல்ல வேண்டும். யாருடைய காரணம் வித்தியாசமாக இருக்கிறது என்று பார்க்கலாம் என்று முடிவு செய்து, இன்னும் சிறிது நேரத்தை கொலை செய்தோம்.

எல்லாம் முடிந்து நான் பேசும்போது கூறியது - மேற்கண்ட 'பிடிக்காத' போட்டியில், மேலும் ஒரு கேள்வி சேர்த்திருக்க வேண்டும் - அது 'உறவு'. அப்படி இருந்திருந்தால், பெண்கள் என்ன எழுதியிருப்பார்கள் என்று ஊகிக்க முடியுமா - என்று கேட்டதற்கு, எல்லோரும் ஒரே குரலில் கத்தியது - 'மாமியார்'.

எல்லா மாமியாரும் தொலைக்காட்சித் தொடர்களில் வருகின்றமாதிரி கொடூரமாக இல்லாவிட்டாலும், பல பெண்களின் விருப்பமான 'பிடிக்காத' உறவு என்று வருகிறபோது எல்லோரும் 'மாமியார்' என்றே குறிப்பிடுகின்றனர்.

உப்புமா ஏன் நிறைய பேருக்கு பிடிக்கவில்லை என்று தெரிந்தாலும், எல்லா (அன்று அங்கிருந்த) பெண்களுக்கு 'மாமியார்' ஏன் பிடிக்கவில்லை என்று எனக்குத் தெரியாததற்குக் காரணம் நான் ஆண் என்பதால்தானே?

Read more...

Monday, March 17, 2008

ஓய்வறையிலிருந்து கேட்கக்கூடாத வாக்கியங்கள்!!!

அலுவலகத்திலே நீங்க ஓய்வறைக்குப் போறீங்க... எதுக்குன்னுலாம் கேக்கமாட்டேன். ஆனா அங்கே 'உள்ளே' ஒருத்தரு 'உக்காந்திருக்காரு'. அப்போ அவருடைய தொலைபேசி அடிக்குது.


நாம எந்த நிலைமையிலே இருந்தாலும் தொலைபேசி அடித்தால் எடுத்து பேசித்தானே ஆகணும். அப்படியே அவரும் பேசறாரு. 'அங்கே' உட்கார்ந்து கொண்டு தொலைபேசியிலே அவரு இப்படியெல்லாம் பேசினா, நமக்கு சிரிப்பு வருமா வராதா, நீங்களே கேட்டுட்டு சொல்லுங்க...

1. நான் ஒரு முக்கியமான மீட்டிங்லே இருக்கேன். ஒரு பத்து நிமிடம் கழித்து கால் பண்ணுங்க.

2. என்னடி போட்டே இன்னிக்கி சாம்பார்லே?

3. டாக்டர், நேத்து சொன்னேனே, அதிலே ஒண்ணும் முன்னேற்றமில்லை.

4. இல்லே, என்னாலே முடியல.

5. ஏய். இருப்பா, பத்து நிமிடத்திலே உன்னோட பின்னூட்டத்தை பப்ளிஷ் பண்ணிடறேன். இப்போ ஒரு டெஸ்டிங் பண்ணிட்டிருக்கேன்.

6. என் கண்ணு இல்லே, எனக்கு நேரமே இல்லைடா. இங்கே எல்லாமே நானே பண்ணிக்க வேண்டியிருக்குடா, செல்லம்...

7. ஆமாம்பா, நீங்க சொன்னா மாதிரிதான் நான் பண்ணிட்டிருக்கேன்.

8. சார், இதோ பாருங்க, என்னாலே முடிஞ்சதை நான் செய்துட்டேன். இதுக்கு மேல் கடவுள் விட்ட வழி.

9. ஏம்மா, முன்னாடியே சொல்லக்கூடாதா.. வேறே மாதிரி செய்திருப்பேன்லே?

10. சாப்பிட்டேன்பா.. இப்போதான் சாப்பிட்டேன்.

நீங்க இதுமாதிரி எதாவது கேட்டிருக்கிறீர்களா? அப்படி இருந்தா இங்கே சொல்லுங்க...

Read more...

Sunday, March 16, 2008

கடமை, அது கடமை - அரைபக்க கதை

இன்ஸ்பெக்டர் சுரேஷ் தன் கம்பியில்லா சாதனத்தில் வந்த குறுக்குப்பேச்சைக் (crosstalk) கேட்டு அதிர்ச்சியடைந்தார்.

"இன்னிக்கு ராத்திரி சரியா 11 மணிக்கு கலங்கரை விளக்கத்துக்குப் பக்கத்திலே சரக்கு வந்துரும். நீங்களும் பணத்தோட வந்து சேந்துடுங்க. இப்பொல்லாம் போலீஸ் தொல்லை அதிகமாயிடுச்சு. அதனால, 1 நிமிஷத்திலே நம்ம வேலை முடிஞ்சிடணும். கவனமா கேட்டுக்கங்க.. அவங்க 'பஞ்சு மிட்டாய் என்ன கலர்?' அப்படின்னு கேப்பாங்க... நீங்க 'முப்பது' அப்படின்னு சொல்லணும். ஓகேவா. நான் வச்சிடறேன்."

என்ன தைரியம் இருந்தா, என் ஏரியாலியே இப்படி சரக்கைக் கடத்துவாங்க? இன்னிக்கு சம்பவம் நடக்கிற இடத்துக்கு நேராப் போய், அவங்கள மடக்கிட வேண்டியதுதான்.

இரவு 10.30 மணிக்கே தயாரான சுரேஷ், தன் வாகனத்தை தூரத்தில் விட்டுவிட்டு கலங்கரை விளக்கத்திற்குப் பக்கத்தில், ஒரு புதரின் பின்னே ஒளிந்து கொண்டார். இடுப்பில் உள்ள துப்பாக்கியை ஒருமுறை சரி பார்த்துக் கொண்டார்.

சரியாக 11 மணிக்கு, தூரத்தில் இருவர் வருவது தெரிந்தது.

"நில்லுங்க. ஓட முயற்சி பண்ணா சுட்டுடுவேன்" என்றவாறு எழுந்தார் சுரேஷ். அந்த இரு உருவமும் கைகளைத் தூக்கிக்கொண்டு நின்றன.

"ஐயா, நீங்களா... "

"நானேதான். எனக்குத் தெரியாமெ என் ஏரியாவில் எதுவும் நடக்கமுடியாது. எனக்கு கமிஷன் கொடுக்காமே தப்பிச்சிடலாம்னு பாத்தீங்களா. மரியாதையா என்னோட 10% கமிஷனைக் கொடுத்துட்டு இடத்தை காலி பண்ணுங்க."

Read more...

Saturday, March 15, 2008

பெண் குழந்தை கருக்கலைப்பு - அரைபக்க கதை

இதை ஏங்க கலைக்கச் சொல்றீங்க... நான் கலைக்க மாட்டேன்.

இப்போ எதுக்கு இது? நாலு பேர் நாலு விதமா பேசுவாங்கம்மா.


பேசட்டுமே, எனக்கென்ன. எனக்கு ஒரு பெண் குழந்தை வேணும். எனக்கு தோண்றது, இது பெண்தான்.

அது சரிம்மா. ஆனா, இந்த சமயத்திலே இது எதுக்குன்னு பாக்குறேன்.


எனக்குன்னு இதுவரைக்கும் உங்ககிட்டே ஏதாவது கேட்டிருக்கேனா?

எனக்கு புரியுதும்மா, ஆனா அந்த நாலு பேர்...


சும்மா நாலு பேர், நாலு பேர் அப்படிங்காதீங்க.. உங்களுக்கு போன மாசம் உடம்பு சரியில்லாதபோது யாருமே வரலியே?

ஆமாம்மா, எல்லோரும் தொலைபேசியிலே ரொம்ப அக்கறையா விசாரிச்சாங்களே, அது போதாதா?


அதெல்லாம், கிடையாது. எனக்குன்னு ஒரு பெண் குழந்தை கண்டிப்பா வேணும். இதை நான் கலைக்க மாட்டேன்.


இதோ பாரும்மா.. நான் சொல்றதை சொல்லிடறேன். அப்புறம் உன் இஷ்டம். நமக்கும் வயசான நாலு பசங்க இருக்காங்க. எல்லோருக்கும் கல்யாணமாகி அவங்கவங்க பிள்ளைகுட்டிங்களோட வேறவேற நாட்டிலே இருக்காங்க. இந்த சமயத்திலே இந்த குழந்தை வேணும்னு நீ அடம் பிடிக்கறது கொஞ்சம்கூட நல்லாயில்லை. சொல்லிட்டேன். இன்னிக்கு சாயந்திரம் நாம டாக்டரை பார்த்து இதை கலைக்கப் போறோம். அவ்வளவுதான்.



Read more...

Friday, March 14, 2008

ஊர்வம்பு - அரைபக்க கதை

சுரேஷ் அலுவலகத்தில் உட்கார்ந்துகொண்டு, வழக்கம்போல் இணையத்தில் மேய்ந்து கொண்டிருந்தான்.

ஒருவர் கால நிர்வாகம் (Time Management) பற்றி இப்படி எழுதியிருந்தார்.

யார் உங்கள் நேரத்தை வீணடிக்க வந்தாலும், அவரிடம் கீழ்க்கண்ட மூன்று கேள்விகளைக் கேளுங்கள். மூன்று கேள்விகளுக்கும் 'ஆம்' என்று அவர் பதில் சொன்னால், பேச அனுமதியுங்கள். இல்லையென்றால், எனக்கு வேலையிருக்கிறது என்று ஆளை அனுப்பிவிடுங்கள்.

1. இது நிஜமான விஷயமா?
2. இது உங்களை அல்லது என்னைப் பற்றிய விஷயமா?
3. இது நமக்கு உபயோகமான விஷயமா?

இது நல்லாயிருக்கே? என நினைத்த சுரேஷ் - மாலையில் வீடு திரும்பியபோது, தங்கமணி வந்தார்.

என்னங்க, உங்களுக்கு விஷயம் தெரியுமா?.

இரு. முதல்லே உன்கிட்டே நான் மூன்று கேள்விகள் கேக்குறேன். அந்த கேள்விகளில் ஏதாவது ஒன்றுக்கு கூட 'ஆமாம்' என்ற பதில் வச்சிருந்தேன்னா, எனக்கு ஒரே தலைவலியா இருக்கு. ஆபீஸ்லே பயங்கர வேலை. அதனாலே, நாம் நாளைக்குப் பேசிக்கலாம்.

மூன்று கேள்விகளுக்கும் உன்னோட பதில் 'இல்லை' அப்படின்னா, விஷயத்தை இப்பொவே சொல்லு - என்றபடி, கேள்விகளை கேட்க ஆரம்பித்தான்.

Read more...

Thursday, March 13, 2008

இதுதான் என்னுடைய கடைசிப் பதிவு!!!

'வந்தா போய்த்தானே ஆகணும், போனா வந்துதானே ஆகணும்' அப்படின்னு 'பஞ்சதந்திர'த்தில் கோவை சரளா சொல்றமாதிரி, ஒரு நாள் போய்த்தானே ஆகணும்?

எவ்வளவு நாளா அலுவலகத்தில் இந்த பழுதடைந்த விசைப்பலகையை வைத்துக்கொண்டு வேலை செய்வது. அதனால், புதிதாக ஒன்று இன்று வாங்க இருக்கிறேன்.

அதனால், 'இந்த விசைப்பலகையில்' இதுதான் என்னுடைய கடைசிப் பதிவு.

'இந்த விசைப்பலகையில்' என்ற வார்த்தைகள் தலைப்பில் போட மறந்துவிட்டேன்... மன்னிக்கவும்...



Read more...

Wednesday, March 12, 2008

கிபி 2030 - பொதுத்தேர்தல் முடிவுகள் - திமுக மற்றும் பாமக பிடிவாதம்.

வணக்கம். செய்திகள் வாசிப்பது தமிழ்க்குடிமகள்.

நடந்து முடிந்த நாடாளுமன்ற பொதுத் தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது.

தமிழகத்தின் திமுக, பாமக கட்சிகள் வெற்றி பெற்ற காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ளன. இந்த கட்சிகள் சென்ற பாஜக ஆட்சியில் பங்குபெற்று, பொதுத் தேர்தலுக்கு இரண்டு மாதங்கள் முன்பு அந்த கூட்டணியிலிருந்து வெளியேறி, காங்கிரஸ் கூட்டணியில் இடம்பெற்றது அனைவரும் அறிந்ததே. மேலும், இந்த கட்சிகள் இதே போல் கடந்த 35 வருடங்களாக தொடர்ந்து மத்திய அமைச்சரவையில் உள்ளன என்பதும் - பொதுத்தேர்தலுக்கு 6 மாதம் முன்னர் கூட்டணி மாறிவருகின்றன என்பது கூடுதல் செய்தி.

முதற்கட்டமாக, 185 பேர் கொண்ட மத்திய அமைச்சரவை நேற்று பதவியேற்றது. அமைச்சரவையில், கூட்டணி கட்சிகளுக்கு சரிசமமாக பதவிகள் பிரித்துக் கொடுக்கப் பட்டுள்ளதாக காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

முக்கியத்துறைகளான ரயில்வே, கப்பல் மற்றும் போக்குவரத்து, மருத்துவம் மற்றும் நீர்வளத்துறை - ஆகிய நான்கு துறைகளுக்கும் அமைச்சரை நியமிப்பது குறித்து குழப்பம் நிலவிவருவதாக நம் சிறப்பு செய்தியாளர் தெரிவிக்கின்றார்.

மேலும் அவர் கூறுகையில், காங்கிரஸ், திமுக, பாமக ஆகிய மூன்று கட்சிகளும் நீர்வளத்துறை அமைச்சர் பதவி தங்களுக்கு வேண்டாம் என்று மறுத்து வருவதாகவும், அதே சமயம் ரயில்வே, கப்பல் மற்றும் போக்குவரத்து, மருத்துவம் ஆகிய மூன்று துறைகளும் தங்களுக்கே வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து வருவதாகவும் தெரிவித்தார். அதனால், பிரதமர் தலைமையில் கூடிய அமைச்சரவைக் கூட்டத்தில் சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதாவது, யாருமே அமைச்சராக முன்வராத காரணத்தால், நீர்வளத்துறையையே கலைத்து விட அமைச்சரவை முடிவெடுத்துள்ளது. இனிமேல், இந்த துறை மாநிலங்கள் வசமே இருக்கும் என்று தெரிகிறது.

மேலும், காங்கிரஸ், திமுக, பாமக ஆகிய மூன்று கட்சிகளையும் திருப்திப்படுத்தும் வகையில், ரயில்வே, கப்பல் மற்றும் போக்குவரத்து, மருத்துவம் ஆகிய மூன்று துறைகளையும் மூன்றாக பிரித்து, ஒவ்வொரு கட்சிக்கும் ஒரு அமைச்சர் பதவி கொடுக்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.

அந்த வகையில், ரயில்வே துறை இப்படி பிரிக்கப்படுகிறது. மக்கள் ரயில்வே, சரக்கு ரயில்வே மற்றும் மின் தொடர் ரயில்வே.

கப்பல் மற்றும் போக்குவரத்து துறை இப்படி பிரிக்கப்படுகிறது. மக்கள் போக்குவரத்து, சரக்கு போக்குவரத்து மற்றும் சுற்றுலா.

மருத்துவத்துறை இப்படி பிரிக்கப்படுகிறது. மனித மருத்துவம், கால்நடை மற்றும் ஆராய்ச்சி.

இந்த தீர்மானங்களுக்கு அமைச்சரவையின் முழு ஆதரவு கிடைத்ததாகவும், மேற்கூறிய மூன்று கட்சிகளும் திருப்தி தெரிவித்ததாகவும் கடைசியாக வந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

மக்களுக்கு நல்ல முறையில் சேவை செய்யவே, சில துறைகளை விரும்பி கேட்டு வாங்கியதாக, திமுக மற்றும் பாமக கட்சிகள் தெரிவித்தன.

இத்துடன் செய்திகள் முடிவடைந்தன. மீண்டும் செய்திகள் நாளை காலை இதே நேரத்தில். நன்றி. வணக்கம்.

Read more...

Tuesday, March 11, 2008

அரைபக்க கதை - "ஆபாசம். நிறுவனர்: சுரேஷ்"

"தனியொரு பதிவருக்கு பின்னூட்டம் இல்லையென்பதால், ஆபாசத்தை துவக்கினோம்" - சுவற்றில் இருந்த வாசகத்தை பார்த்து ஒரு முறை சிரித்துக்கொண்டான் சுரேஷ். 50 பதிவுகளை இட்ட பதிவரான சுரேஷ் - தன் கடைசி 5 பதிவுகளின் தலைப்புகளை ஒரு முறை நினைவு படுத்திக்கொண்டான்.

46. 60 ஆண்டு கால திமுக மற்றும் தமிழகத்தின் வளர்ச்சி - ஒரு ஒப்பீடு
47. சென்னை நகரின் போக்குவரத்து பிரச்சினையைப் போக்க 10 எளிய வழிகள்
48. 'லகான்' இந்தி திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட குறள்களின் எண்ணிக்கை
49. அப்துல்கலாம் மற்றும் அவரின் 2020 கனவு
50. சேது சமுத்திரத் திட்டத்தைப் பற்றி சித்தர்களின் பார்வை


இவ்வளவு 'ஹெவி'யான பதிவுகளை இட்ட சுரேஷ், அவற்றிக்கு வந்த பின்னூட்டங்களின் எண்ணிக்கையை எண்ணினான். அவை முறையே 6,2,3,9,1.

பின்னூட்டங்கள் அதிகரிக்க என்ன வழி என்று நண்பர்கள் 5 பேரை அழைத்து பேசினான். அந்த கூட்டத்தில் அவர்கள் செய்த முடிவுகள் பின்வருமாறு:


1. ஆபாசத்தை துவக்குவது - (ஆண்கள் பாதுகாப்பு சங்கம்).
2. இதுவரை வலைப்பூ இல்லாத அந்த 5 நண்பர்களும் உடனே வலைப்பூ துவக்குவது.
3. மேற்கண்ட பதிவுகளைப் போலல்லாது, மிகவும் 'லைட்'டான தலைப்புகளை (படிக்க: மொக்கை) எடுத்துக்கொண்டு, எல்லோரும் அதில் பின்னூட்டங்களால் தாக்குவது.
4. 1000, 2000, ... மாமா பிஸ்கோத்து... என்பது போல் இல்லாவிட்டாலும், குறைந்த பட்சம் 100,200 பின்னூட்டங்கள் வருமாறு பார்த்துக்கொள்வது.
5. எல்லோரும் அவரவர் பதிவுகளில், மேற்கண்ட கூட்டத்தையே 'வலைப்பதிவர் சந்திப்பு' என்று ஒரு பதிவு போடுவது.


அப்பாடா, பின்னூட்டப் பிரச்சினை முடிந்தது என்ற நிம்மதியில் சுரேஷ் தூங்கப்போனான்.


டிஸ்கி: சங்கத்தின் பெயருக்கு நன்றி - எஸ்.வி.சேகர்.

Read more...

Saturday, March 8, 2008

ஒரு நடிகையின் மனம் திறந்த பேட்டி - பேட்டி காண்பவர் கவுண்டமணி

மகாஜனங்களே, சின்ன பெண்களே, வயசானவங்களே எல்லாருக்கும் வணக்கமுங்கோ - நாந்தான் ஷில்பாகுமார். உங்களுக்கு தெரிஞ்சிருக்கும். இன்னிக்கு நாம ஒரு நடிகையோட பேச போறோம். அவங்க யாருன்னு நான் என் வாயால சொல்லமாட்டேன். நீங்களே பாத்துக்குங்க.


வாங்க.. காந்தக் கண்ணழகி, செந்தூரப் பொட்டழகி... நீங்க எப்படி இருக்கீங்கன்னெல்லாம் நான் கேக்க மாட்டேன். நீங்க நல்லாத்தான் இருப்பீங்க.. அதனால, நாம நேரா பேட்டிக்கு போய்டுவோம்.. இல்லேன்னா இந்த மக்கள் டிவியை பிராண்ட ஆரம்பிச்சுடுவாங்க...


ஆமா, இப்போ எந்த படங்களிலே நடிச்சிக்கிட்டிருக்கீங்க?
எவ அவ..


அடங்கொக்கமக்கா. யாரப்பாத்து என்ன கேள்வி கேட்டே?
அதில்லேங்க... நான் இப்போ நடிக்கப்போற படத்தோட பேரு... எவ அவ... நல்ல தமிழ் பெயர் இல்லே..


ஆமா ஆமா. இல்லையா பின்னே.. தூய தமிழ் பேர்தான். வரி விலக்கு கண்டிப்பா உண்டு... ஆமா, இந்த படத்தை பத்தி கொஞ்சம் சொல்லுங்களேன்.
இது ரொம்பவே வித்யாசமான கதை.


அதுதான் எல்லா படத்துக்கும் சொல்றாங்களே. இதிலே என்ன அப்படி வித்தியாசம்னு சொல்லுங்க.
இதிலே ஒரு ஹீரோ. ஆனா அவர் ஹீரோ இல்லை. ஒரு வில்லன். ஆனா அவர் வில்லன் இல்லை. எனக்கு அப்பாவா ஒருவர் வர்றாரு. ஆனா அவர் அப்பா இல்லை. ஹீரோவுக்கு நண்பனா ஒருத்தர் வர்றாரு. ஆனா அவர் நண்பன் இல்லை. இப்படி பல வித்தியாசங்களை கொண்டது இந்த கதை.


ரொம்ப நல்லாயிருக்கு கதை. சுவாரசியமா இருக்கும் போல இருக்கே?
ஆமா. பல திருப்பங்களை கொண்டது. திருப்பதி மலைப் பாதை மாதிரி ஒரு செட் போட்டு - படம் முழுக்க அங்கே எடுக்கப்போறாங்க. அதனால படம் முழுக்க பல திருப்பங்கள் இருக்கும்.


இந்த படத்திலே நீங்க நடிப்பீங்களா.. இல்லே இந்த மாதிரியே அழகா சிரிச்சிக்கிட்டே இருப்பீங்களா?
படத்திலே எனக்கு முக்கிய கேரக்டர். நாந்தான் ஒரு பெரிய திருப்பத்தை உண்டாக்குறேன்.


திருப்பம்னா... சும்மா இப்படி.. இல்லே இப்படி.. திரும்பிக்கிட்டே இருப்பீங்களா? (திரும்பி காட்டுகிறார்).
ஹீரோவை வில்லன் துரத்திக்கிட்டு வரும்போது, நான் ஒரு தெரு முனையில் நின்று கொண்டிருப்பேன். என்கிட்டே, ஹீரோ எங்கேன்னு வில்லன் கேட்கும்போது, நான் நேரா கைகாட்டாம வில்லனை திருப்பி விட்டுடுவேன். நான் மட்டும் அந்த திருப்பத்தை ஏற்படுத்தலைன்னா, படம் பத்தே நிமிஷத்திலே முடிஞ்சிருக்கும்.


ச்சே.. பத்து நிமிஷத்திலே படம் முடிஞ்சிருந்தாக்கா, மக்கள் வீட்டுக்குப் போயாவது நிம்மதியா இருந்திருப்பாங்க... அது சரி, பாடல்கள் எல்லாம் ரொம்ப பிரம்மாண்டமா வந்திருக்குன்னு பேசிக்கறாங்களே?

பிரம்மாண்டம் மட்டுமில்லை, முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் எடுக்கப்போறாங்க.

மாறுபட்ட கோணம்னா, எல்லாமே தலைகீழெ இருக்குமா?

ச்சீ.. நீங்க ரொம்ப தமாஷா பேசறீங்க.. இந்த படத்திலே எல்லா பாட்டும் 'டாப் ஆங்கிள்'ல தான் இருக்கப்போது. எல்லாமே மேலேருந்து பாக்கபோறீங்க.

அப்படியே மேலெருந்து குதிச்சிடலாம் போல இருக்கு... வாவ். ரொம்ப நல்லா இருக்கும் போல இருக்கே!!!

இதுக்கே இப்படி ஆச்சரியப்பட்டா எப்படி, இன்னும் க்ளைமாக்ஸ பத்தி நான் பேசவே இல்லையே?

ஓ, இந்த படத்தில க்ளைமாக்ஸ் வேறெ இருக்கா?. அதைப் பத்தியும் சொல்லுங்க பாப்போம்.

க்ளைமாக்ஸ் ரொம்ப அதிர்ச்சியானது.

ஏன், க்ளைமாக்ஸ் படத்து பாதியிலேயே வந்துடுதா? இல்லே படத்திலே க்ளைமாக்ஸே இல்லையா?

அதில்லைங்க, வில்லனை ஹீரோ கொல்றதுக்கு பதிலா, ஹீரோவை வில்லன் கொன்னுடுவான். ஏன்னா, அவன் வில்லன் கிடையாது, இவன் ஹீரோ கிடையாது.

கொன்னுட்டீங்கோவ்.. படம் முடிஞ்சு வரும்போது எல்லோரும் தலையை பிச்சிக்கிட்டுதான் வருவாங்கன்னு சொல்லுங்க. ஆமா. இந்த படத்தை யாரு தயாரிக்கறாங்க?
பாருங்க. இவ்ளோ நல்ல படத்துக்கு டைரக்டர் மற்றும் எல்லா கலைஞர்களும் கிடைச்சுட்டாங்க.. ஆனால் தயாரிப்பாளர் மட்டும் தான் கிடைக்கவே மாட்டேன்றாங்க.. ஏன் சார், ஒரு ஐடியா..


என்ன, நாம ரெண்டு பேரும் எங்கேயாவது ஓடிப்போய்டலாமா?
அது இல்லீங்க, பேசாம நீங்களே இந்த படத்தை தயாரிங்களேன். உங்களுக்கு ஒரு அவார்ட் கிடைக்கும்.


வேண்டாம்மா, இந்த டகால்டி வேலையெல்லாம் என்கிட்டே வேண்டாம். என்னை விட்டுடு. நான் இன்னும் கொஞ்ச நாள் தமிழ்நாட்லதான் இருந்தாகணும். நான் இங்கே வந்ததாகவோ, நீ எனக்கு பேட்டி கொடுத்ததாகவோ ஒரு சம்பவம் நடந்ததாகவே நெனெக்காதே. ஒரு கெட்ட கனவா நெனெச்சி மறந்துடு. நான் வர்றேன். நாராயணா, இந்த கொசுத் தொல்லை தாங்க முடியலடா...


இந்த பேட்டியை பாக்குற மக்களே, இந்தம்மா நடிக்கப்போற படத்தை இனிமேலும் யாராவது பாத்தீங்கன்னா, அதோட பின்விளைவுகளுக்கு நான் பொறுப்பில்லை. சொல்லிட்டேன்... நான் வர்றேன்.

Read more...

Thursday, March 6, 2008

ஆளுங்கட்சியினரின் சாதனைகளை 1,2,3 என்று வரிசைப்படுத்தி பாடுக!!!

திருவிளையாடல் பாணியில் - நம் தமிழ்நாட்டில் ஆளுங்கட்சியினரின் சாதனைகளை ஒன்று, இரண்டு, மூன்று என்று வரிசைப்படுத்தி பாடினால் - எப்படி இருக்கும் என்று ஒரு சிறு கற்பனை.

1 - ஆளுங்கட்சிக்கு சாதகமான ஒரு தொலைக்காட்சி தொடங்குதல்

2 - மாவட்டங்களை இணைத்தல் அல்லது பிரித்தல்

3 - தமிழக / இந்திய / வெளிநாட்டு பல்கலைக்கழகங்களிலிருந்து டாக்டர் பட்டம் பெறுதல்

4 - அணைகள் கட்டுதல் - இந்த அணைகள் தமிழ்நாட்டிலல்ல - அண்டை மாநிலங்களில். (டெண்டர் எடுப்பது நம் ஆட்கள்தானே).

5 - கடையடைப்பு நடத்துதல் - மத்திய அரசில் இருந்தாலும் / இல்லா விட்டாலும் இந்த கடையடைப்பு நடைபெற வேண்டும் என்பது காலத்தின் கட்டாயம்.

6 - நதிகள். இணைப்பு வேலையல்ல - மணல் அள்ளி அள்ளி நதிகளை காணாமல் போகச் செய்தல்.

7 - பெயர் மாற்றம் - தமிழ் நாட்டிலுள்ள நகரங்கள், இரயில் நிலையங்கள், தெருக்கள் ஏதாவது பெயர்களை மாற்றி வைத்தல்

8 - தொழிற்சாலைகள் சென்னையை சுற்றி தொடங்குதல்

9 - மேம்பாலங்கள் சென்னையில் தொடங்குதல். அவற்றை எப்போது முடிப்பது என்பதை பற்றி யாரும் பேசக்கூடாது.

10 - வழக்குகள் முன்னாள் முதல்வர் மேல் தொடுத்தல்.


ஆளுகின்ற எந்த கட்சியானாலும் (மொத்தமே இரண்டு கட்சிகள்தானே மாற்றி மாற்றி ஆளுகின்றன!!) இந்த வரிசை பெரும்பாலும் பொருந்தி வரும் என்று நினைக்கிறேன்.


அப்போ நீங்க?

Read more...

தமிழக சட்டசபையின் புதிய கட்டடம் - தேவைப்படும் புதிய வசதிகள்

தமிழக சட்டசபைக்கு புதிய கட்டடம் கட்டப்போவதாக செய்தி வந்திருக்கிறது. சட்டமன்ற உறுப்பினர்களுக்கு ஏகப்பட்ட நவீன வசதிகளை செய்து கொடுக்க வழிவகை செய்திருப்பார்கள்.


ஆனால் எவ்வளவு வசதிகள் செய்தாலும், நம் மக்கள் அங்கு போய் என்ன செய்வார்கள் என்று நமக்குத்தான் தெரியுமே? எதிர்க்கட்சிகள் எப்போதும் கத்தி கூச்சல் போட்டவாறே இருப்பர். எதிர்க்கட்சி தலைவர் கையெழுத்து மட்டும் போட்டுவிட்டு வெளியே போய்விடுவார். இந்த மாதிரி இன்னும் பல பிரச்சினைகளை - கட்டப்போகும் புதிய கட்டடத்தில் எப்படி சமாளிக்கலாம் என்று ஒரு சிறிய கற்பனை.

பிரச்சினை: 9.15 மணிக்கு சபைக்கு வந்து 9.17 மணிக்கு வெளியேறுதல்:


சட்டசபை வளாகத்தில், வருகைப் பதிவேட்டுக்கு பதிலாக, மென்பொருள் நிறுவனங்களில் இருப்பதுபோல் இயந்திரக்கதவுகள் பொருத்திவிடவேண்டும். எல்லோருக்கும் ஒரு Swipe Card கொடுத்து அந்த அட்டையினாலே உள்ளே போவதும், வருவதுமாக இருக்க வேண்டும். உறுப்பினர்கள் சபைக்குள் வந்துவிட்டால், ஒரு குறிப்பிட்ட நேரம் (1 மணி நேரம்) உள்ளே இருந்தால்தான், வெளியே போவதற்கு கதவு திறக்குமாறு set செய்து விடவேண்டும்.


பிரச்சினை: பல நாட்கள் சபைக்கு வராமல் மட்டம் போடுதல்:

ஒரு நாள் மட்டம் போட்டால்கூட, உறுப்பினர்கள் அடுத்த நாள் வரும்போது, முழு நாளும் சபையில் இருக்குமாறு மேற்கூறிய இயந்திரக் கதவில் set செய்துவிட வேண்டும். பல நாட்கள் மட்டம் போட்டவர்கள், சபைக்கு வந்த நாட்களில் முழு நாளும் இருக்குமாறு செய்யலாம்.

பிரச்சினை: சட்டை / வேட்டி / புடவைகளை இழுத்துக் கிழித்தல்:

உறுப்பினர்கள் சபைக்குள் இருக்கும்போது - தீயணைப்பு வீரர்கள் அணியும் உடையைப் போல் சீருடை அணியுமாறு செய்து விட்டால் - வேட்டி புடவைகள் இழுக்கப்பட்டு கிழிக்கப்படாமல் பார்த்துக் கொள்ளலாம்.

பிரச்சினை: நாற்காலி / மைக் - ஆகியற்றை தூக்கிப்போட்டு உடைத்தல்:

நாற்காலி / மைக் ஆகிய எல்லாவற்றையும் தரையில் / மேசையில் பொருந்தி இருக்குமாறு பார்த்துக் கொளளலாம்.

பிரச்சினை: சபையின் மையப்பகுதிக்கு சென்று கோஷம் போடுதல்:

சபையின் மையப்பகுதிக்கு ஆங்கிலத்தில் 'வெல்' என்று பெயர். அங்கு நிஜமாகவே ஒரு வெல்லை வைத்து விடலாம். அங்கு யாரும் சென்று நிற்க முடியாதவாறு அதில் தண்ணீர் நிரப்பி - அதையும் மீறி வருபவர்களுக்காக சில முதலைகளை அதில் விடலாம்.

பிரச்சினை: வெளிநடப்பு செய்யும் பெண் மற்றும் வயதான உறுப்பினர்கள்:

காவலாளிகளால் இவர்களை வெளியே கூட்டிப் போவது ஒரு பிரச்சினையாக இருக்கலாம். அதற்காக சபை நடுவிலிருந்து வெளியே போவதற்கு ஒரு நகரும் படிக்கட்டு (எஸ்கலேட்டர்) வைக்கலாம். மேற்படி உறுப்பினர்களை அந்த நகரும் படிக்கட்டுகளில் நகர்த்திவிட்டால், தானாகவே வெளியே போய்விடுவார்கள்.

ஏதோ, என்னாலான சில தீர்வுகளை கூறியிருக்கிறேன். ஆனால் கீழ்க்கண்ட பிரச்சினைகளுக்கு எனக்கு தீர்வு தெரியவில்லை. உங்களுக்கு ஏதாவது தீர்வு தெரிந்தால் சொல்லுங்களேன்:

அ. உறுப்பினர்கள் சபை நடைபெறும்போது தூங்குதல்.
ஆ. கும்பலோடு சேர்ந்து கோஷம் போடுதல்.
இ. சபையில் ஒரு நிமிடம் கூட பேசாமல் காலத்தை ஒட்டுதல்.

Read more...

Wednesday, March 5, 2008

இரண்டாயிரம் பின்னூட்டங்கள்!!! அரைபக்க கதை

முன்னுரை:

இது ஒரு கற்பனை கதைதான். என் சொந்த கதை அல்ல. இந்த கதை துளசி மேடமுக்கும், cheena (சீனா) சாருக்கும் சமர்ப்பணம். ஒரு இளம் வலைப்பதிவருக்கு 2000 பின்னூட்டங்கள் எப்படி கிடைக்குது - அவர் மனதில் என்ன நினைக்கிறார் என்று பார்ப்போம். இனி கதைக்கு போவோமா...

கதை:

காலை 7 மணி:
பதிவு போட்டு 3 நாளாச்சு... இன்னிக்கு ஏதாவது போட்டாகணும்... ஒரு கதையோ அல்லது கவிதையோ போட்டா நல்லாயிருக்கும். யோசிப்போம்.

காலை 10 மணி:
தமிழ்மணத்தை பார்ப்போம்.. அடடா.. நிறைய பேர் பதிவுகளைப் போடறாங்களே?.. நமக்கு மட்டும் ஒண்ணும் தோணவே மாட்டேங்குதே?...

மதியம் 1 மணி:
யாரு திட்டினாலும் பரவாயில்லை - இந்த கவிதையைப் போடுவோம்.

தலைப்பு: சாப்பாடு இறங்கலே!!!

பசிக்கும்போது நீ அருமையான வார்த்தைகளை பேசினே -
அதனாலே எனக்கு வயிறு ரொம்பி சாப்பாடு இறங்கலே!!!

பசிக்காதபோது நீ அசிங்கமான வார்த்தைகளை பேசினே -
அதனாலே எனக்கு மனசு வெம்பி சாப்பாடு இறங்கலே!!!

மாலை 4 மணி:
பின்னூட்டப் பெட்டியைப் பார்ப்போம்.. வழக்கம் போல ஒரு பின்னூட்டமும் வரலை...

இரவு 7 மணி:
இன்னும் ஒரு பின்னூட்டமும் இல்லை.

இரவு 10 மணி:
சரி சீக்கிரம் தூங்கப் போவோம். நாளைக்கு காலையில் 2000 பின்னூட்டங்கள் வந்திருக்கும். அவற்றை பப்ளிஷ் செய்யணும்.

கதை அவ்வளவுதான்.

பின்னுரை:
நாயகன் என்ன நினைக்கிறார்னா - கதை/கவிதை நன்றாக இருக்கும் பட்சத்தில் - துளசி மேடமும், cheena (சீனா) சாரும் பதிவரை ஊக்கப்படுத்தி ஒரு பின்னூட்டம் போடுவாங்க. அவங்களோட ஒவ்வொரு பின்னூட்டமும் 1000 பின்னூட்டங்களுக்கு சமம் - ஆக மொத்தம் 2000 பின்னூட்டங்கள் வரும் என்று எதிர்ப்பார்க்கிறார்.

என்ன, அவர் நினைப்பது சரிதானே?

Read more...

Tuesday, March 4, 2008

தங்கமணியின் எசப்பாட்டு !!!




நல்லா பாடறவங்களைப் பாத்தா, எல்லோருக்கும் பொறாமைதான். எப்படியாவது குண்டக்க மண்டக்க பேசி பாடற மூடை கெடுத்துடுவாங்க. இப்படித்தான், நான் எப்போ பாட (!!) வாயெ தொறந்தாலும், தங்கமணி 'தகதக' மணியாயிடுவாங்க... (அட.. கொதிச்சி எழுந்துடுவாங்கன்னு சொன்னேன்).

உதாரணத்துக்கு, சில பாடல்களைப் பாருங்க. பாடல்களின் கீழேயே தங்க்ஸின் முத்தான கமெண்ட்கள் / எசப்பாட்டுகள் உள்ளன.

நான்: சொந்த குரலில் பாட ரொம்ப நாளா ஆசை...
தங்க்ஸ்: பக்கத்து வீட்டிலிருந்து தினமும் கிடைக்கும் பூசை...

நான்: அம்மா என்றழைக்காத உயிரில்லையே...
தங்க்ஸ்: ஏன், உங்க பொண்ணே இருக்காளே, சொந்த அம்மாவையே - மாமான்றா, மாமின்றா (Momma / Mommy) ...

நான்: நான் பேச நினைப்பதெல்லாம் நீ பேச வேண்டும்...
தங்க்ஸ்: நீங்க மனசிலே அசிங்க அசிங்கமாத்தான் நினைப்பீங்க... அதையெல்லாம் என் வாயால நான் பேச முடியாது.

நான்: நேற்று இல்லாத மாற்றம் என்னது...
தங்க்ஸ்: நேத்து நீங்க குளிக்கல... கப்பு தூக்கல்... இன்னிக்கு குளிச்சிட்டீங்க... கப்பு கம்மி.. அவ்ளோதான் மாற்றம்.

நான்: பழம் நீயப்பா.. ஞானப்பழம் நீயப்பா...
தங்க்ஸ்: கண்ணாடி முன் நின்று பாடப்பா... இது ஒண்ணுதான் சரியா பாடறீங்க..

இப்படியே எடக்கு மடக்கா பேசிக்கிட்டிருந்தா, யாருக்குத்தான் கோபம் வராது? எனக்கும் வந்தது..
உடனே போயிட்டு வந்து - தண்ணி குடிச்சிட்டு - குப்புற படுத்து தூங்கிட்டேன்.
ம். வேறே என்ன பண்றது?...

Read more...

Monday, March 3, 2008

எங்கும் தமிழ்மணம், எதிலும் தமிழ்மணம்

சன் டிவி டாப் 10:

இது சென்ற வாரம் தமிழ்மணத்தில் பரபரப்பாக பேசப்பட்ட கெட்ட வார்த்தைகளைப் பற்றிய நிகழ்ச்சி. முதலில் புது வரவு. இந்த வாரம் புதிதாக பேசப்பட்ட கெட்ட வார்த்தைகள். #$@, ##@# மற்றும் #@@@.

ராசிபலன்:

தமிழ்மணம் படிக்கும் அன்பர்களே, இன்று வார இறுதியாகையால், தமிழ்மணத்தில் வீக் எண்ட் ஜொள்ளு, வீக் எண்ட் லொள்ளு ஆகிய பதிவுகளை எதிர்ப்பார்க்கலாம். மேற்கு திசைகளிலிருந்து அசிங்கமான பதிவுகளை எதிர்ப்பார்க்கலாம். இன்று உங்களுக்கு ராசியான நிறம் கருப்பு.

அலுவலகம்:

எல்லோரும் ஒழுங்கா வேலையை பாருங்க... இல்லேன்னா... தமிழ்மணம் பாக்க முடியாத கிளைக்கு மாத்திடுவேன்.


விடுப்பு கடிதம்:

மூன்று நாட்களாய் தமிழ்மணம் படிக்காததால், தயவு செய்து இரண்டு நாட்கள் விடுப்பு தருமாறு கேட்டுக்கொள்கிறேன். இன்று தமிழ்மணம் படிப்பதற்கும், நாளை தமிழ்மணம் படித்த அதிர்ச்சியிலிருந்து விடுபடுவதற்கும் தேவைப்படுகிறது.

மணமகன் தேவை:

நன்றாக படித்தவராகவும், தினமும் தமிழ்மணம் படிப்பவராகவும் இருக்கவேண்டும். எந்த விஷயமாக இருந்தாலும், அதைப்பற்றி ஒரு பதிவு போடும் திறமை உள்ளவராக இருத்தல் வேண்டும். குறைந்த பட்சம், சண்டையை/குழப்பத்தை உண்டாக்கும்படியான பின்னூட்டங்களைப் போடுபவராக இருந்தால் நலம்.

நீதிபதி:

இ.பி.கோ செக்ஷன் 'ங்' படி - கொலை செய்த இவருக்கு சாகும் வரை தமிழ்மணம் பார்க்குமாறு தண்டனை விதிக்கிறேன்.

குற்றவாளி: ஐயா, ஐயா, தயவு செய்து இந்த மாதிரி கொடுமையான தண்டனை தர வேண்டாம். அதற்கு பதிலாக, என்னை தூக்கில் போட்டுவிடுங்கள்.. ஐயா ஐயா...


வானிலை அறிக்கை:

இன்று தமிழ்மணம் மேகமூட்டமாக இருக்கும். மாதம் முழுக்க இருந்த இடியை விட, இன்று அதிக இடி இடிக்கும் வாய்ப்பு உள்ளது. பலத்த மழை பெய்யக்கூடும். நாளை காலைவரை பதிவர்கள் பதிவுக்கு செல்லாமலிருக்குமாறு கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP