கடமை, அது கடமை - அரைபக்க கதை
இன்ஸ்பெக்டர் சுரேஷ் தன் கம்பியில்லா சாதனத்தில் வந்த குறுக்குப்பேச்சைக் (crosstalk) கேட்டு அதிர்ச்சியடைந்தார்.
"இன்னிக்கு ராத்திரி சரியா 11 மணிக்கு கலங்கரை விளக்கத்துக்குப் பக்கத்திலே சரக்கு வந்துரும். நீங்களும் பணத்தோட வந்து சேந்துடுங்க. இப்பொல்லாம் போலீஸ் தொல்லை அதிகமாயிடுச்சு. அதனால, 1 நிமிஷத்திலே நம்ம வேலை முடிஞ்சிடணும். கவனமா கேட்டுக்கங்க.. அவங்க 'பஞ்சு மிட்டாய் என்ன கலர்?' அப்படின்னு கேப்பாங்க... நீங்க 'முப்பது' அப்படின்னு சொல்லணும். ஓகேவா. நான் வச்சிடறேன்."
என்ன தைரியம் இருந்தா, என் ஏரியாலியே இப்படி சரக்கைக் கடத்துவாங்க? இன்னிக்கு சம்பவம் நடக்கிற இடத்துக்கு நேராப் போய், அவங்கள மடக்கிட வேண்டியதுதான்.
இரவு 10.30 மணிக்கே தயாரான சுரேஷ், தன் வாகனத்தை தூரத்தில் விட்டுவிட்டு கலங்கரை விளக்கத்திற்குப் பக்கத்தில், ஒரு புதரின் பின்னே ஒளிந்து கொண்டார். இடுப்பில் உள்ள துப்பாக்கியை ஒருமுறை சரி பார்த்துக் கொண்டார்.
சரியாக 11 மணிக்கு, தூரத்தில் இருவர் வருவது தெரிந்தது.
"நில்லுங்க. ஓட முயற்சி பண்ணா சுட்டுடுவேன்" என்றவாறு எழுந்தார் சுரேஷ். அந்த இரு உருவமும் கைகளைத் தூக்கிக்கொண்டு நின்றன.
"ஐயா, நீங்களா... "
"நானேதான். எனக்குத் தெரியாமெ என் ஏரியாவில் எதுவும் நடக்கமுடியாது. எனக்கு கமிஷன் கொடுக்காமே தப்பிச்சிடலாம்னு பாத்தீங்களா. மரியாதையா என்னோட 10% கமிஷனைக் கொடுத்துட்டு இடத்தை காலி பண்ணுங்க."
4 comments:
இதற்கு சரியான தமிழ்ச் சொல் கிடைக்கவில்லையா..?
//ஏரியாலியே//
வாங்க tbcd: வட்டம்?... பகுதி?.... ஏதாவது ஒண்ணு போட்டிருக்கலான்றீங்களா?... நன்றி...
//மரியாதையா என்னோட 10% கமிஷனைக் கொடுத்துட்டு இடத்தை காலி பண்ணுங்க//
அதுக்கும் code word (கடவுச் சொல்) சொன்னாத் தான் கொடுக்கப்படும்! :-)
அடுத்து கால்பக்கக் கதை எழுதுங்க தல!
வாங்க கே.ஆர்.எஸ் -> நன்றி.. :-)
Post a Comment