சென்னையில் வீட்டு வாடகை உயர்வு - விளைவுகள்
அங்கே என்ன ஏலம் நடக்குது?
வாடகை வீடுதான். யாரு அதிகமா 'வாடகை' ஏலம் எடுக்கறாங்களோ, அவுங்களுக்கு வீடு கொடுப்பாங்களாம்.
---
பாஸ், இவரை கடத்தலாமா, சொந்த வீடு வெச்சிருக்காரு?
லூசாப்பா நீ, அவரை விடு. இவரைப் பாரு. வாடகை குடுத்துண்டு ஒரு வீட்டிலே இருக்காரு. நினைச்சிப் பாரு, எவ்ளோ பணமிருக்குமின்னு.
---
நயா பைசா வரதட்சிணை வேண்டாம்னு சொன்ன மாப்பிள்ளையை வேண்டாம்னுட்டியாமே? ஏன்?
வரதட்சிணைக்குப் பதிலா 5 வருஷத்துக்கு அவர் வீட்டு வாடகையை நான் குடுக்கணுமாம். கட்டுப்படியாகுமா?
---
எல்.ஐ.சியின் 'ஜீவன் வாடகை' பாலிசி.
5 வருஷத்திற்கு சிறிய ப்ரிமியம் கட்டுங்க. பிறகு உங்கள் வாழ்க்கை முழுவதும் உங்கள் வாடகையை எல்.ஐ.சி கட்டும்.
---
வழியில் கிடந்த ஒரு விளக்கை எடுத்து தேய்த்தவுடன், ஒரு பூதம் வந்தது
ஏதாவது ஒரு வரம் கேள்.
எனக்கு ஒரு பெண்ணின் மனசில் என்ன நினைக்கிறான்னு தெரியணும்.
அது ரொம்ப கஷ்டம்பா. அவங்க என்ன நினைக்கிறாங்கன்னு கடவுளுக்கே கூட தெரியாது. வேறே ஏதாவது கேளு.
ஓகே. சென்னையில் ரெண்டு வருஷத்திற்கான என் வீட்டு வாடகையை எனக்கு கொடுத்துவிடு.(பூதம் ஒரு நிமிடம் யோசித்து)... சரி... எந்த பெண் மனசைப்பத்தி உனக்கு தெரியணும்?
6 comments:
//அங்கே என்ன ஏலம் நடக்குது?
வாடகை வீடுதான். யாரு அதிகமா 'வாடகை' ஏலம் எடுக்கறாங்களோ, அவுங்களுக்கு வீடு கொடுப்பாங்களாம்.//
நான் கூட அப்டிதாங்க வீடு புடிச்சேன் . 1000 rs extra குடுத்து
//அங்கே என்ன ஏலம் நடக்குது?
வாடகை வீடுதான். யாரு அதிகமா 'வாடகை' ஏலம் எடுக்கறாங்களோ, அவுங்களுக்கு வீடு கொடுப்பாங்களாம்.//
நான் கூட அப்டிதாங்க வீடு புடிச்சேன் . 1000 rs extra குடுத்து
வாங்க அதிஷா... ஓ.. அப்படியா!!!
//எல்.ஐ.சியின் 'ஜீவன் வாடகை' பாலிசி.//
செம காமெடி
வாங்க பிரேம்ஜி, நன்றி.
Hilarious! Nice post!
Post a Comment