நம்பிக்கை - அரைபக்க கதை
ரொம்ப நாட்களாக வரவேண்டிய பணம், எதிர்ப்பார்த்தபடி இன்றைக்கும் வரவில்லை. எல்லாம் என் அதிர்ஷ்டம் என்று நொந்துகொண்ட சுரேஷ், தன் வாகனத்தில் அலுவலகம் புறப்பட்டான். பணம் என்றால் ஒன்றல்ல, இரண்டல்ல, சுளையாய் பத்து லட்சம் ரூபாய். இந்த வாரமாவது அந்த பணம் கிடைத்தால், அம்மாவின் விருப்பப்படி கிராமத்தில் உள்ள பெரிய வீட்டை வாங்க வேண்டும்.
அலுவலகத்தில் பக்கத்து இருக்கையில் உள்ளவர் கேட்டார்,
"ஏம்பா சுரேஷ், இன்னைக்காவது எனக்குத் தரவேண்டிய ஐநூறு ரூபாய் தருவாயா?".
"கண்டிப்பாக இந்த வாரத்திற்குள்ளாக தந்து விடுகிறேன். எனக்கு வரவேண்டிய பணம் இன்றைக்கும் வரவில்லை."
"உனக்கு வரவேண்டிய பணமா? எங்கிருந்து வரவேண்டியிருக்கிறது?"
"இதோ பாருங்கள். இந்த வாரத்திய அனைத்து பரிசுச்சீட்டுகள். ரொம்ப நாளாக பரிசு விழும் என்று எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். கண்டிப்பாக இந்த வாரம் முதல் பரிசு எனக்கே விழும் என்று நம்பிக்கை இருக்கிறது. அப்படி பரிசு விழுந்தவுடன், கண்டிப்பாக உனக்கு சேரவேண்டிய ஐநூறு ரூபாய் தந்துவிடுகிறேன்."
டிஸ்கி: தமிழகத்தில் பரிசுச்சீட்டுகள் விற்பனை தடை செய்யப்பட்டிருப்பதால், இந்த கதைக்களம் (!!) வேறு மாநிலத்தில் இருப்பதாக நினைத்துக்கொள்ளவும்.
4 comments:
சரியான திருப்பம். நல்லாயிருந்தது
overconfidence...
தடை செய்யப்பட்டிருக்கிறது,சட்டப்படி.ஆனால் லாட்டரி சீட்டு விற்பனை வெகு ஜோர்,இஷ்டப்படி
Post a Comment