ஓய்வறையிலிருந்து கேட்கக்கூடாத வாக்கியங்கள்!!!
அலுவலகத்திலே நீங்க ஓய்வறைக்குப் போறீங்க... எதுக்குன்னுலாம் கேக்கமாட்டேன். ஆனா அங்கே 'உள்ளே' ஒருத்தரு 'உக்காந்திருக்காரு'. அப்போ அவருடைய தொலைபேசி அடிக்குது.
நாம எந்த நிலைமையிலே இருந்தாலும் தொலைபேசி அடித்தால் எடுத்து பேசித்தானே ஆகணும். அப்படியே அவரும் பேசறாரு. 'அங்கே' உட்கார்ந்து கொண்டு தொலைபேசியிலே அவரு இப்படியெல்லாம் பேசினா, நமக்கு சிரிப்பு வருமா வராதா, நீங்களே கேட்டுட்டு சொல்லுங்க...
1. நான் ஒரு முக்கியமான மீட்டிங்லே இருக்கேன். ஒரு பத்து நிமிடம் கழித்து கால் பண்ணுங்க.
2. என்னடி போட்டே இன்னிக்கி சாம்பார்லே?
3. டாக்டர், நேத்து சொன்னேனே, அதிலே ஒண்ணும் முன்னேற்றமில்லை.
4. இல்லே, என்னாலே முடியல.
5. ஏய். இருப்பா, பத்து நிமிடத்திலே உன்னோட பின்னூட்டத்தை பப்ளிஷ் பண்ணிடறேன். இப்போ ஒரு டெஸ்டிங் பண்ணிட்டிருக்கேன்.
6. என் கண்ணு இல்லே, எனக்கு நேரமே இல்லைடா. இங்கே எல்லாமே நானே பண்ணிக்க வேண்டியிருக்குடா, செல்லம்...
7. ஆமாம்பா, நீங்க சொன்னா மாதிரிதான் நான் பண்ணிட்டிருக்கேன்.
8. சார், இதோ பாருங்க, என்னாலே முடிஞ்சதை நான் செய்துட்டேன். இதுக்கு மேல் கடவுள் விட்ட வழி.
9. ஏம்மா, முன்னாடியே சொல்லக்கூடாதா.. வேறே மாதிரி செய்திருப்பேன்லே?
10. சாப்பிட்டேன்பா.. இப்போதான் சாப்பிட்டேன்.
நீங்க இதுமாதிரி எதாவது கேட்டிருக்கிறீர்களா? அப்படி இருந்தா இங்கே சொல்லுங்க...
14 comments:
hilarious :)))
:)))
:-))))))))))))
அய்யோ அய்யோ...
:-)))))
பாஸ்டன் பாலா, சிறில் அலெக்ஸ், மங்களூர் சிவா மற்றும் துளசி மேடம்:
ஆஹா.. இந்த ச்சின்னப்பையன் வீட்டுக்கு வந்த எல்லா பெரியவங்களும் நன்றி... :-)
ச்சின்ன பையன் மெய்யாலுமே ஒரு பெரிய "பதிவர்" பையனாமே உண்மையாவா...?
- இது கேள்வி இல்லை, இப்படி ஒரு வாசகத்தைக் அங்கே கேட்டாலும், சிரிப்புத் தானே வரும்..
:)))))))))))))))))))))
:))))
நான் கேட்டது: I am doing wonderful!
tbcd, கப்பி பய மற்றும் அனானி -> வருகைக்கும் கருத்திற்கும் நன்றி... :-)
Nice;-))
என் நண்பர் ஒருவர் இப்படி பேசினாhர்
"நான் on the way-ல இருக்கேன்..."
=)))))
Superb...
:))))))
சிரிச்சேன் கற்பனை நல்ல இருக்குதுங்க. நிலாமதி
Post a Comment