Monday, February 4, 2008

கிபி 2030 - சூப்பர் ஸ்டார் - தமிழ் நாட்டுக்கு ஏதாவது செய்யணும்; செய்வேன்.

பல வருடங்கள் காத்திருப்புக்குப் பிறகு நமக்கு சூப்பர் ஸ்டாரை பேட்டி எடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. விடுவோமா? வாருங்கள், நேராக பேட்டிக்குப் போய்விடுவோம்.

நிருபர்: இப்போல்லாம் மன அமைதிக்கு இமயமலை போகிறீர்களா?

சூ.ஸ்: எங்கே பாஸ்? இமயமலையிலேயே அமைதி இல்லை இப்போது. பயங்கர கும்பலாகி விட்டது. அதனால் வருடா வருடம் நான் யாருக்கும் சொல்லாமல் ஆல்ப்ஸ் மலைக்கு சென்று விடுகிறேன். நான் போய்விட்டால், என் குடும்பத்தினர் அமைதியில்லாமல் அல்லாடுகின்றனர். அதனால், அவர்களையும் என்னோடு கூட்டிப் போகின்றேன். ஆனால் பாஸ், தமிழ் நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும். செய்வேன்.

நிருபர்: உங்கள் அடுத்த படம் எது? கதாநாயகி யார்?

சூ.ஸ்: என்னோடு அடுத்த படம் 'ரிமோட்'. ரிமோட் வெடிகுண்டு தயாரித்து சென்னையை தாக்க சதி செய்யும் ஒரு கும்பலைப் சாதாரண பஸ் கண்டக்டராக இருக்கும் ஒருவன் பிடிப்பதுதான் கதை. புதுமுகம் ஸ்ருதி ஸ்ரேயாதான் கதாநாயகி. அவருக்கு இந்த படம் மூலம் ஒரு நல்ல எதிர்காலம் இருக்கும். இவர் வேறு யாருமல்ல. பழைய நடிகையும், தற்போதைய டிவி சீரியல் மாமியார் புகழ் ஸ்ரேயாவின் பேத்திதான். ஒரு தமிழ்ப் பெண்தான் கதாநாயகியாக வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து அவரை புக் பண்ண வைத்தேன். தமிழ் நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும் பாஸ். செய்வேன்.

நிருபர்: 'ரிமோட்' தமிழ் பெயரா? வரி விலக்கு கிடைக்குமா?

சூ.ஸ்: இது தமிழக மக்களால் பல காலமாக பேசப்பட்டு வரும் ஒரு வார்த்தையாகும். நான் இது குறித்து நம் தமிழக முதல்வரிடம் ஏற்கனவே பேசிவிட்டேன். இந்தத் தலைப்புக்கு வரி விலக்கு நிச்சயம் உண்டு.


நிருபர்: இந்த படத்தின் பட்ஜெட் என்ன?

சூ.ஸ்: இது ஒரு சாதாரண பட்ஜெட் படம்தான். சுமார் 1000 கோடி. வினியோகஸ்தர்களுக்கு நஷ்டம் வரக்கூடாது என்று நான் விரும்புகிறேன். தயாரிப்பாளர், இயக்குனர் எல்லோரும் தமிழர்கள்தான். தமிழ் நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும். செய்வேன்.

நிருபர்: உங்கள் ரசிகர்களெல்லாம் உங்களை சந்திக்க பல வருடங்களாக முயற்சி செய்தும் உங்களைப் பார்க்க முடிவதில்லை என்று குறை கூறுகிறார்களே, அதைப் பற்றி?

சூ.ஸ்: நான் இன்னும் திரைப்படங்களில் நடித்துக் கொண்டிருப்பதே என் ரசிகக் கண்மணிகள் பார்த்து ரசிக்கவேண்டும் என்பதற்காகதான். அதற்காக, எப்போதும் படப்பிடிப்பிலேயே இருப்பதால், கடந்த 25 வருடங்களாக என்னால் என் ரசிகர்களைக்கூட சந்திக்க முடிவதில்லை. ஆனால், என் ரசிகர்களை நான் கூடிய விரைவில் சந்திப்பேன்.


நிருபர்: நீங்கள் அரசியலுக்கு வருவீர்களா?

சூ.ஸ்: இப்போதைக்கு நான் பிஸியாக படங்களில் நடித்துக்கொண்டிருக்கிறேன். அதனால் அரசியல் பற்றி யோசிக்கக்கூட நேரமில்லை. ஆனால் அரசியலுக்கு வரவேண்டுமென்றால், வரவேண்டிய நேரத்துக்கு சரியாக வந்துவிடுவேன். ஏனென்றால், தமிழ் நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும். செய்வேன்.

நிருபர்: நதி நீர் இணைப்புக்கு நீங்கள் ஒரு கோடி ரூபாய் கொடுப்பேன் என்று பல வருடங்களுக்கு முன் சொன்னீர்களே, அதைப் பற்றி?

சூ.ஸ்: இப்பொழுதும் சொல்கிறேன். நதி நீர் இணைப்பு திட்டம் நிறைவேறினால், என் சார்பாக நான் இரண்டு கோடி கொடுக்கிறேன். நதிகள் இணைவதை யாராலும் தடுக்க முடியாது. தமிழ் நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும். செய்வேன்.

நிருபர்: அடிக்கடி தமிழ் நாட்டுக்கு ஏதாவது செய்யவேண்டும் செய்வேன், தமிழ் நாட்டுக்கு ஏதாவது செய்யவேண்டும் செய்வேன் என்று சொல்கிறீர்களே, தமிழ் நாட்டுக்கு என்ன செய்யப் போகிறீர்கள்?

சூ.ஸ்: தமிழ் நாட்டுக்கு நான் எதுவும் செய்யப்போவதில்லை. அது என் அடுத்த படத்துடைய பஞ்ச் வசனம். எப்படி அதை விதவிதமாக சொல்லலாம் என்று சொல்லிப் பார்த்துக் கொள்கிறேன். அவ்வளவுதான்.

வாழ்க தமிழ்!!! வளர்க தமிழர்கள்!!! வணக்கம்.

14 comments:

கோவி.கண்ணன் February 4, 2008 at 8:52 PM  

அட்டகாசம்.

உங்களுக்கும் எதாவது செய்யனுமே, சும்மா படிச்சிட்டு சிரிச்சிட்டு போகமுடியல.
:)
அது தான் பின்னூட்டம். செஞ்சாச்சு
:)

கோவி.கண்ணன் February 4, 2008 at 8:52 PM  

அட்டகாசம்.

உங்களுக்கும் எதாவது செய்யனுமே, சும்மா படிச்சிட்டு சிரிச்சிட்டு போகமுடியல.
:)
அது தான் பின்னூட்டம். செஞ்சாச்சு
:)

TBCD February 4, 2008 at 10:21 PM  

ச்சின்னப் பையா..

திபி2061 என்று போடய்யா.. ;)

ரஜினியயைக் கிண்டலடிக்கிறே..

சரி..அப்ப நாங்க..கை தட்டி ரசிக்கிறோம்.

Unknown February 5, 2008 at 1:01 AM  

2030 வரைக்கும் தமிழ்நாடு திருந்தாதா?
கஷ்டகாலம் ...

இது நகைச்சுவையோடு முடிய என் பிரார்த்தனை :)

சின்னப் பையன் February 5, 2008 at 6:10 AM  

துளசி மேடம்:
இது - புரியுது...
இத்து - புரியல...
ஆனாலும் நன்றி....:-)

கண்ணன்:
பின்னூட்டத்திற்கு நன்றி.

TBCD:
நல்ல வேளை.. எங்கே திட்டப் போறீங்களோன்னு நினெச்சேன்... நன்றி....:-)

தஞ்சாவூரான்:
அப்படியே ஆகட்டும்...:-)

பாச மலர் / Paasa Malar February 5, 2008 at 6:21 AM  

அப்படின்னா அரசியலுக்கு வரவே மாட்டாரா? வருவார் என்று பேச்சு அடிபடுகிறதே..

பஞ்ச் டயலாக் சூப்பர்...

PPattian February 5, 2008 at 8:05 AM  

அசத்தல்.. நல்ல கற்பனை, நிஜமாக ஆனாலும் ஆகும் :))

அடிஷனலா, இந்த கேள்விகளும் கேட்கலாம்.

1. தனுஷ்தான் அடுத்த முதல்வர் என்று கூறுவது பற்றி என்ன நினைக்கிறீங்க?

2. யாத்ரா நடிக்கும் படத்தில் நீங்கள் கெஸ்ட் ரோல் பண்றீங்களாமே?

சின்னப் பையன் February 5, 2008 at 9:19 AM  

பாசமலர்:
அவர் அரசியலுக்கு வராதவரைக்கும் இப்படி கேள்வி கேட்போம். வந்துட்டார்னா, வேறே மாதிரி கேள்வி கேட்போம். இது எப்படி இருக்கு?... நன்றி...

புபட்டியன்:
ஹாஹா. நல்ல கேள்விகள். சரி. குறித்து வைத்துக் கொண்டேன். சிறிது நாள் கழித்து வேறு ஒரு நிருபர் ரஜினியை பேட்டி எடுக்காமலா போய்விடுவார்?.....:-)... நன்றி...

வீ. எம் February 5, 2008 at 9:44 AM  

அடி சக்கை, செம கலக்கல்....
நல்ல நையான்டி

ஸ்ரீ February 5, 2008 at 9:46 AM  

" தமிழ் நாட்டுக்கு ஏதாவது செய்ய வேண்டும். செய்வேன்." இந்த பஞ்சு சூப்பர் ஆனா இதத்தான் 20 வருசமா சொல்றாரே அதை எப்படி ராசா 2030ல மறுபடி சொல்லுவாரு. ஒருவேளை ரீமிக்ஸ் பாட்டு மாதிரி ரீமிக்ஸ் பஞ்ச் டயலாக்கோ....

சின்னப் பையன் February 5, 2008 at 11:34 AM  

வீ.எம் - நன்றி.

ஸ்ரீ - இது நல்ல ஐடியா. தலைப்பு, கதை, பாட்டு - இவைகளுக்குப் பிறகு ரீமிக்ஸ் செய்வதற்கு வசனங்களையும் எடுப்பார்களோ?... எப்படி சமாளிப்பு.....:-)

சகாதேவன் February 16, 2008 at 11:48 PM  

டிபி சிடி சொன்னதுபோல்
2061 லும் கூட
சூப்பர் ஸ்டார் உண்டு,
தமிழக முதல்வர் உண்டு,
ஆனால் ஸ்ருதி ஸ்ரேயாவின்
பேத்திதான் கதாநாயகி.

"தமிழ்நாட்டுக்கு நிறைய செய்து விட்டேன்,இன்னும் செய்வேன்",

என்று பஞ்ச் டயலாக் பேசுவார்.

சகாதேவன்

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP