இது பின்னூட்டக் கயமை அல்ல - அரைபக்க கதை
சுரேஷ் காலையில் சீக்கிரமே எழுந்துவிட்டான். முதலில் தன் பின்னூட்டப் பெட்டியைப் பார்க்க வேண்டும். உடனே, நீங்கள் ஏதோ சுரேஷின் பதிவுகளை ஏகப்பட்ட பேர் பார்த்து வருவதாகவும், பின்னூட்டங்களால் பெட்டியை நிரப்புவதாகவும் கற்பனை செய்ய வேண்டாம். தவறுதலாக அவர் பதிவுகளில் வந்து விடுபவர்கள்தான் அதிகம். நிற்க.
ஆஆ. 10 பின்னூட்டங்கள். நேற்று போட்ட சொத்தைப் பதிவுக்கு 10 பின்னூட்டங்கள். சுரேஷ் தன்னைத்தானே கிள்ளிப் பார்த்துக் கொண்டான். நிஜம்தான். யாரோ என் பதிவுக்கும் வந்திருக்கிறார்கள். 'சிறந்த பதிவர்' விருதைப் பெற்றதைப் போல சந்தோஷம் அடைந்தான்.
பின்னூட்டப் பெட்டியை திறந்து பார்த்தால், அந்த பத்து பின்னூட்டங்களும் 'See here' மற்றும் 'See there' (அனானி) என்று இருந்தது. அடப்பாவிகளா, இவ்வளவுதானா... யாரும் என் பதிவைப் பார்க்ககூட இல்லையா - இதை வெளியிட்டு என்ன பிரயோசனம் என்று அந்த பத்து பின்னூட்டங்களையும் 'Reject' செய்தான்.
எப்படியும் 10 பின்னூட்டங்கள் வந்தது... அதற்கு பதிலாக இருந்துவிட்டுப் போகட்டும் என்று தன் பதிவுகளில் வெவ்வேறு பெயர்களில் 10 பின்னூட்டங்கள் போட்டுக்கொண்டான். இது பின்னூட்டக் கயமை அல்ல என்று திருப்தி அடைந்தான்.
டிஸ்கி:
அ. இது கற்பனைதான். நான் அவனில்லை.
அஅ. ஆனால், இது யாருக்காவது நடந்திருக்கலாம் அல்லது நடக்கலாம்.
அஅஅ. இனிமேல் யாராவது இதைப் போல் செய்தால், நான் பொறுப்பல்ல.
அஅஅஅ. இதெல்லாம் ஒரு கதையா என்று திட்ட வருபவர்களுக்கு - நாமெல்லாம் Friends - ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்.
4 comments:
அட இப்பிடில்லாம் கூட செய்யலாமா?
அன்புடன் அருணா
ஏம்ப்பா...ச்சின்னப்பையன் செய்ற வேலையா இது? :-)))))
எனக்குத் தெரியாதுங்க அருணா... இது வெறும் கதைதான்...:-)
துளசி மேடம்... எனக்கு எதுவும் தெரியாது... டிஸ்கியெல்லாம் பாத்துட்டீங்கல்லே...:-)
ப்ட்டிவுகள் பதிந்து விட்டு, பின்னூட்டங்கள் வராதா என ஏங்கும் பதிவர்கள் தான் அதிகம். எனவே பின்னூட்டக் கயமை என்பது தவறல்ல. பதிவரே பின்னூட்டமிடும் போது தமிழ் மண முகப்பில் வந்து கொண்டே இருக்குமல்லவா.
Post a Comment