Saturday, February 16, 2008

டாஸ்மாக் விற்பனையை மேலும் கூட்ட வழிகள்

மாதா மாதம், வருடா வருடம் டாஸ்மாக் விற்பனை கூடி வருகிறது. இந்த விற்பனையை மேலும் கூட்ட அரசு என்னவெல்லாம் செய்யலாம் என்ற சிறு கற்பனை. (ஆனால், இவை எதுவும் இல்லாமலேயே நம் 'குடி'மக்கள் அவர்களுக்கு நல்ல விற்பனையைக் குடுத்து வருகின்றனர் என்பது வேறு விஷயம். )

உறுப்பினர் அட்டை:

அடிக்கடி வரும் வாடிக்கையாளர்கள், தங்கள் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண்ணைக் கொடுத்து ஒரு உறுப்பினர் அட்டை பெற்றுக்கொள்ளலாம். உறுப்பினர் சந்தா என்பதெல்லாம் கிடையாது. மாறாக, பற்பல வசதிகளும், சலுகைகளும் இந்த அட்டை வைத்திருப்பவர்களுக்கு கிடைக்கும்.

அறிமுகச் சலுகை:

வாடிக்கையாளர்கள் தங்கள் கடைக்கு புதிய உறுப்பினர்களை அறிமுகப்படுத்தும்போது, அவருக்கும் அந்த புதிய உறுப்பினருக்கும் தலா ஒரு சுற்று அவர்களுக்குப் பிடித்தமான மது இலவசமாக அளிக்கப்படும்.

ECS முறை:

உறுப்பினர் அட்டை காட்டி குடிப்பவர் அவரது வங்கிக் கணக்கு எண்ணைக் கொடுத்தால், மாதா மாதம் அவரது கணக்கிலிருந்து அவர் குடித்ததற்குண்டான பணம் எடுத்துக் கொள்ளப்படும். இதனால், கடைக்காரருக்கு, குடித்துவிட்டு மயங்கிக் கிடப்பவரிடம் பணத்திற்காக சண்டை போட வேண்டிய அவசியம் இருக்காது.

குடித்தவர்கள் மட்டும்:

இரவு வெகு நேரம் வரையில் குடிப்பவர்கள் வீட்டிற்குப் போவதற்கு மிகவும் கஷ்டப்படுகின்றனர். அதற்காக அரசு ஒரு சிறப்பு பேருந்து வசதியை செய்யப் போகிறது. அதாவது மதுக்கடைகள் மூடும் நேரமான இரவு 12 மணிக்கு பல்வேறு இடங்களுக்கு 'குடித்தவர்கள் மட்டும்' பேருந்தை இயக்கும். சென்னையில் 'மகளிர் மட்டும்' பேருந்துகளைப் போல இது குடித்தவர்கள் மட்டுமே ஏறக்கூடியதாக இருக்கும்.

சரக்கு உங்கள் சாய்ஸ்:

இரவு முழுக்க மது குடித்தவர்கள் காலையில் மப்பில் எழுந்துக் கொள்ள கஷ்டப்படுவார்கள். அப்படி எழுந்தாலும், மறுபடி மதுக்கடைக்கு வர அவர்கள் மிகவும் சிரமப்படுவார்கள். இப்படிப்பட்டவர்களுக்கென்றே, இந்த அரசு ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
அதாவது, காலையில் 7 மணி முதல் 10 மணி வரை, நீங்கள் உங்கள் அருகாமையில் உள்ள மதுக்கடைக்கு போன் செய்து, உங்கள் உறுப்பினர் எண்ணைக் கொடுத்தால் போதும். அடுத்த 15 நிமிடத்தில் உங்கள் சரக்கு உங்கள் வீடு தேடி வரும்.

அப்படி 15 நிமிடத்தில் சரக்கு உங்கள் கையில் இல்லாவிடில், அந்த சரக்கு உங்களுக்கு இலவசமாகவே வழங்கப்படும்.


சரக்கு தினம்:

இப்போதெல்லாம் காதலர் தினம் போன்று பல தினங்களைக் கொண்டாடுகின்றனர். மது குடிப்பவர்களும் அதே முறையில் வருடத்தில் ஒரு நாள் ஒதுக்கி அன்று முழுக்க குடித்து மகிழ இந்த அரசு ஏற்பாடு செய்யும். இதற்கென ஒரு நல்ல நாள் விரைவில் அறிவிக்கப்படும்.


மேலும், இது போன்ற குடிமக்களை மகிழ்விக்கும் நல்ல திட்டங்கள் வரவேற்கப்படுகின்றன. தேர்ந்தெடுக்கப்படும் திட்டங்களுக்கு பரிசுகள் உண்டு.


8 comments:

Anonymous,  February 17, 2008 at 12:35 AM  

//உறுப்பினர் அட்டை//
அதாவது 'BEVMORE' stores அட்டை போல.

நித்யன் February 17, 2008 at 1:17 AM  

What a fantastic bunch of ideas...

'Madipakkam Kudippor Sangam' saarbaga ennudaiya kodaana kodi nanrigal. Ungal vaazhvil ellam laarge aaga kidaikka vaazhthukkal

sorry for not writing in tamil... i am from a netcafe...

சின்னப் பையன் February 17, 2008 at 7:01 AM  

அனானி மற்றும் நித்யகுமாரன் - நன்றி.

வவ்வால் February 17, 2008 at 3:36 PM  

எலே சின்னப்பையா , பேருக்கு ஏத்தாப்போல சின்னப்பையன் தான் பா,

டாஸ்மாக் எப்படி செயல்படுதுனு ஒரு எளவும் தெரியலை, டாஸ்மாக் வியாபாரம் பெருக்க ஆலோசனை சொல்ல வந்துட்ட , முதல்ல ஒருக்கா கடைக்கு போய்ட்டு வந்து அப்பாலிக்க ஆலோசனைய அவுத்து வுடு என்னா புரிதா?

சின்னப் பையன் February 17, 2008 at 4:13 PM  

நான் ச்சின்னப்பையந்தான்னு புரிஞ்சிக்கிட்டதுக்கு நன்றி வவ்வால்....:-)

cheena (சீனா) February 17, 2008 at 5:24 PM  

இலவசக் காப்பீடு, முதியவர்களுக்கான தனி அறைகள் போன்ற வசதிகளையும் செய்யலாமே

Santhosh February 17, 2008 at 11:47 PM  

கலக்கல்ஸ் ஆப்(இது அந்த ஆப் இல்ல of இந்த ஆப்) கம்போடியா? நல்லா ஒக்காந்து யோசிக்கிறாங்கப்பா

சின்னப் பையன் February 18, 2008 at 9:04 AM  

சீனா மற்றும் சந்தோஷ் - கருத்திற்கு நன்றி...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP