கிபி2030 - தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தேர்விலிருந்து சில கேள்விகள்
நடந்து முடிந்த தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையம் நடத்திய தேர்வில் - ஒரு சர்ச்சைக்குரிய கேள்வி கேட்கப்பட்டது.
அதே போல், கிபி 2030ல் இந்த தேர்வில் கேட்கப்படப் போகும் சில சர்ச்சைக்குரிய கேள்விகள் தற்போது வெளிவந்துள்ளது. அவற்றுக்கு இப்போதே பதில்களை குறித்து வைத்துக்கொண்டு தேர்வில் வெற்றி பெற வாழ்த்துகிறேன்.
1. திமுக தலைவர் கருணாநிதியின் குடும்பத்தினர் எவ்வளவு பேர் நாடாளுமன்ற அல்லது சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்?
அ. 10
ஆ. 12
இ. 14
ஈ. 16
2. கடந்த அதிமுக ஆட்சியில், போக்குவரத்துக்குத் தடையாக உள்ளதென்று முதலமைச்சராக இருந்த செல்வி ஜெயலலிதா எதை அப்புறப்படுத்தினார்?
அ. சென்னை சென்ட்ரல்
ஆ. அண்ணா மேம்பாலம்
இ. கலங்கரை விளக்கம்
ஈ. கலைஞர் சிலை
3. கடந்த 35 வருடங்களில் பாமக எவ்வளவு ஆண்டுகள் ஆளுங்கட்சிக் கூட்டணியில் இல்லை?அ. 0 மாதங்கள்
ஆ. 3 மாதங்கள்
இ. 6 மாதங்கள்
ஈ. 1 வருடம்
4. கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் யாருடன் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது?
அ. தயாநிதி அழகிரி திராவிட முன்னேற்ற கழகம்
ஆ. உதயநிதி திராவிட மக்கள் முன்னேற்ற கழகம்
இ. அகில இந்திய யாத்ரா திராவிட முன்னேற்ற கழகம்
ஈ. குறளரசன் மறுமலர்ச்சி முன்னேற்ற கழகம்
5. கடந்த வருடம் ஒரே ஒரு நாள் அமைதியாக நடந்த தமிழக சட்டசபையில் என்ன விவாதிக்கப்பட்டது?
அ. ரஜினியின் புதிய படம்
ஆ. புத்தம் புதிய திரைப்படம் 'கருணாநிதி' யின் வசனங்கள்
இ. நதி நீர் இணைப்பு
ஈ. எதுவும் விவாதிக்கவில்லை
6. தமிழகத்தில் திரைப்பட நடிக/நடிகையரால் துவக்கப்பட்டு இருக்கும் கட்சிகள் எவ்வளவு?
அ. 25
ஆ. 30
இ. 35
ஈ. 40
7. தாங்கள்தான் உண்மையான எம்.ஜி.ஆரின் வாரிசு என்று எவ்வளவு அரசியல்வாதிகள் கூறுகின்றனர்?
அ. 10
ஆ.15
இ. 20
ஈ. 25
10 comments:
நல்ல ஜோக்.. பகடி... அங்கதம் :)
ஏற்கனவே கேட்கப்பட்ட சர்ச்சைக்குரிய கேள்வி என்னது
நன்றிங்க சிறில் அலெக்ஸ். இங்கே பாருங்க:
http://thatstamil.oneindia.in/news/2008/01/30/tn-tnpsc-question-paper-refers-thilagar-as-terrori.html
நல்ல காமெடி ச்சின்னப் பையன். எதுக்குமே எனக்கு ஆன்ஸர் தெரியலை. தெரியறா மாதிரியா வச்சிருக்காங்க?
இன்னும் ஒரு 2 கேள்வி என் பங்குக்கு:
8. கடந்த மூன்று மாதங்களில் புதிதாக எத்தனை சானல்கள் தொடங்கப்பட்டன?
அ. 3
ஆ.7
இ. 8
ஈ. 12
9. பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடுக்கு எந்த ஆண்டு நிறைவேறும்?
அ. 2040
ஆ.2070
இ. 2090
ஈ. ஆகாது.
:-))))))))))))))
பினாத்தல் சுரேஷ் மற்றும் துளசி மேடம் - வருகைக்கும் கருத்திற்கும் நன்றி...:-)
9. பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடுக்கு எந்த ஆண்டு நிறைவேறும்?
suuuuuuuuuuuuuuuuupppppppppppppper
மைனாரிட்டி அரசில் காங்கிரஸின் பங்கு என்ன?
அ. இதயத்தில் இடம்.
ஆ. கூட்டணி தர்மத்தை காப்பாற்றும் பொறுப்பு.
இ. வாரியத் தலைவர்.
ஈ. பங்கா? அப்டீன்னா?
நன்றாக இருந்தது. வாழ்த்துக்கள்.
அனானி, காங்கிரஸ்காரன், மாஹிர் -> நன்றி... மீண்டும் வருக...
:-))
Post a Comment