அமெரிக்காவில் ஒரு மாதமாக கரண்ட் கட்
காட்சி 1:
டங்...
அம்மாஆஆஆ...
என்னங்க...இடிச்சிண்டீங்களா..பார்த்து போகக்கூடாதா?
இருட்டுல எப்படிம்மா பார்த்து போறது.
ரெண்டு வருஷமா நாற்காலி அங்கேதானே இருக்குது. எப்படி தெரியாம போகும்? மெதுவா தடவிக்கிட்டே போங்க... ஒரு மாசமா இருட்டுலே நடக்குறீங்க.. அப்போவும் உங்களுக்கு எதெது எங்கெங்கே இருக்குன்னு தெரிய மாட்டேங்குது. என்னமோ போங்க...
காட்சி 2:
டக்..டக்..
கதவைத் திறந்தவுடன் வழக்கம்போல ஒரே இருட்டு.
முகத்தில் டார்ச் (தமிழில்?) அடிக்கிறது.
உள்ளே மெதுவா வாங்க... புலி தூங்கிகிட்டுருக்கு. உங்க பையை இங்கே வைக்காதீங்க... அந்தப் பக்கம் யானை உக்காந்திருக்கு. சத்தம் போடாமெ போய் உக்காருங்க...
விளக்கம்:
தொடர்ச்சியா பார்த்துக்கிட்டு வர்ற கார்ட்டூன் நிகழ்ச்சிகளில் யாராவது காட்டில் / இருட்டில் - ஏதாவது ஒரு மிருகத்தைக் காப்பாற்றிக் கொண்டே இருக்கிறார்கள். அதைப் பார்த்து, அதைப் போலவே செய்யவேண்டுமென்ற எங்கள் பாப்பாவின் ஆவல், எங்கள் வீட்டை இருட்டாக்கி இருக்கிறது.
இது நானும் பாப்பாவும்:
என்னம்மா இது, எப்பொவுமே வீட்டை இருட்டா வச்சிருக்கே?
அப்போதானே, நான் டார்ச் அடிச்சி மிருகங்களைத் தேட முடியும்.
மிருகங்களை காலையில தேட முடியாதா?
மிருகங்கள் ஆபத்திலிருக்கும்போது, என்னாலே கார்த்தாலெ வரைக்கும் காத்திருக்க முடியாது. ஏம்மா, மிருகங்களுக்கு காலை வேளையிலே ஆபத்தே வராதா?
வரும்பா. ஆனால் என்னாலே காப்பாத்த முடியாது.
ஏன் காப்பாத்த முடியாது?
காலையிலே என் டார்ச் வெளிச்சமே தெரியாதே?
நீ நேராகவே பார்த்து காப்பாத்தலாமே?
டோரா / டியகோ (Dora/Diego) அவங்கல்லாம் இருட்டிலேதானே மிருகங்களைக் காப்பாத்துறாங்க. அது மாதிரிதான் நானும் செய்வேன்.
முடிவு:
(கவுண்டமணி பாணியில் படிக்கவும்)ஆனா ஒண்ணுடா... என் ஜென்மத்திலே (குறைந்த பட்சம் இரண்டு-மூன்று மாதங்களாவது) கரண்ட் பில் கட்டினதேயில்லேடா....
2 comments:
Nalla than katha sollurigga... Nalla irruku... continu pannigga...
Torch மின்சூள் இப்படிதான் நான் படிச்சேன்
Post a Comment