மணிரத்னம் உயர்நிலைப் பள்ளி
ஆசிரியர் வரும்போது அறை மிகவும் இருட்டாக இருக்கிறது.
ஏன்?...என்ன ஆச்சு....?
ப்யூஸ் போயிடுச்சு....
வாங்கறோம்...பல்ப் வாங்கறோம்...
மங்கலா எரியற பல்ப் வாங்கறோம்..
சார்...ஒரு பல்ப்...10 ரூபாய் ஆகும்...
பரவாயில்லை...சுரேஷ்... பரவாயில்லை...
வாங்குறோம்.... 5 வாங்குறோம்...
50 ரூபாய் ஆனாலும் பரவாயில்லை...
நமக்காக மட்டுமே அது எரியும்...
சார்...நான் போய் வாங்கி வரேன்.
சுரேஷ்... உனக்கு ரோட் க்ராஸ் பண்ணி போக பயமாயில்லையா?
இல்லை சார்... நான் ஒரு இந்தியன். இந்தியாவிலே எந்த மூலைக்கு போகவும் எனக்கு பயமில்லை.
(அப்போது ஆசிரியரின் தொலைபேசி அடிக்கிறது... அவரது ரிங்டோன்..."தாயே உன் பெயர் சொல்லும்போதே, இதயத்தில் மின்னலை பாயுதே...ஆஆஆ")
(ஆசிரியர் attendance எடுத்துக் கொண்டிருக்கிறார்)
சூர்யா...சூர்யா...
உள்ளேன் ஐயா...
(ஆனால் அப்போதுதான் சூர்யா வகுப்புக்குள் வருகிறார்)..
யார் சொன்னது?... உள்ளேன் ஐயான்னு யார் சொன்னது... நீ பாத்தியா... நீ பாத்தியா...
நான் பாத்தேன்.. சார்... நான் பாத்தேன்...
யாரு?
தேவா...
தேவா...ஏன்? தேவா...ஏன்?
நண்பன் சார்... நண்பன்..
நண்பன்னா?
நண்பன்னா உயிரை கூட கொடுப்பேன்...
மொதல்லே கை...கையை கொடு...
ஏன் சார்... ஏன்.
கொடு..
ஆஆஆஆ.....
அசோகர்...ஏன் மரத்தை நட்டார்?
தெரியல...
ம்?
எனக்குத் தெரியல...
ஏன் தெரியல...
நான் படிக்கல...
ஏன் படிக்கல...சொல்லு... ஏன் படிக்கல....
படிக்கணும்னு புத்திக்கு தெரியுது... ஆனா மனசு கேக்கலியே...
கையெ நீட்டு....
ஆஆஆஆ......
என்கிட்டே ட்யூஷன் படிக்கிறாயா?
வேண்டாம்... எனக்கு வேண்டாம்..
சொல்றதை கேளு...நீ ஒண்ணுமே படிக்கலே...பெயிலாயிடுவேன்னு நினைக்கலே...ஆனா இதெல்லாம் நடந்திருமோன்னு பயமா இருக்கு... யோசிச்சு சொல்லு...
சரி சார்... சொல்றேன்... நாளைக்கு சொல்றேன்...
(அப்போது பள்ளி முடிவடைந்ததற்கான மணி அடிக்கிறது.மாணவர்கள் எல்லோரும் மெதுவாக (slow motion) பள்ளியை விட்டு வெளியேறுகிறார்கள்).
3 comments:
super... kalakareenga...
மழை சீன் இல்லையா?
இரண்டு மாணவர்களுக்கு இடையே ஒரு சின்ன சண்டை, மோதல்.
ஒரு ஐட்டம் சாங் வேண்டும். மாணவிகள் டேபிள் மேலே நின்று டான்ஸாட, முறைத்து பார்க்கும் ஆசிரியர், மெதுவாக சிரித்தவாறே அவரும் ஒரு ஸ்டெப் போட... :-))
இது !! டமாஸ் மாதிரி - நல்லாவே இருக்கு
Post a Comment