ஏதோ ஒரு நாட்டில், ஏதோ ஒரு மாநிலத்தில் ஒரு முதலமைச்சர்-கம்-கட்சித்தலைவரின் ஒரு நாள் அலுவல்
காலை
3.30 எழுந்து கொள்ளல்
4.00 உடற்பயிற்சி
5.00 அனைத்து கட்சியினரின் பத்திரிக்கைகளைப் படித்தல்
அவர்களது அறிக்கைகளுக்கு பதிலளித்தல்
சொந்தப் பத்திரிக்கைக்கு/கட்சியினருக்கு கடிதம் எழுதுதல்
7.00 சொந்த வேலை மற்றும் சிற்றுண்டி
8.00 அனைத்து கட்சியினரின் தொலைக்காட்சிகளில் செய்திகளைப் பார்த்தல்
10.00 சொந்த தொலைக்காட்சியினருடன் சந்திப்பு
தற்போதைய நிகழ்ச்சிகளில் மாறுதல் மற்றும் புதிய நிகழ்ச்சிகள் பற்றி விவாதித்தல்
12.00 மதிய உணவு
1.00 சிறிய ஓய்வு
2.00 சொந்த/கூட்டணி கட்சியினருடன் சந்திப்பு
3.00 தம் மகன், மகள், பேரன், பேத்தி, அண்ணன் பேரன், அக்காள் பேரன் ஆகியவர்களுக்கு அரசியல் பாடம் எடுத்தல் / குறிப்புகள் கொடுத்தல்
4.00 அனைத்துக் கட்சியினரின் மாலைப் பத்திரிக்கைகளைப் படித்தல்
5.00 தேனீர் மற்றும் சிறிது உடற்பயிற்சி
6.00 இலக்கிய, சினிமா அல்லது தொலைக்காட்சி சம்மந்தப்பட்ட கூட்டம் ஒன்றில் பங்கேற்பு
8.00 குடும்ப உறுப்பினர்களுடன் நேரம் செலவிடுதல்
குடும்பத் தகராறுகளை அலசுதல்/விவாதித்தல்
9.00 இரவு உணவு
10.00 கதை, கட்டுரை, (திரைப்படத்திற்கான) திரைக்கதை மற்றும் இலக்கியம் சம்மந்தப்பட்ட வேலைகள் செய்தல்
இரவு 12.00 உறங்கச் செல்லுதல்
3 comments:
சரியாகச் சொல்லி இருக்கிறீர்கள் - நன்று நன்று
:-) நெத்தியடி.
அன்புடன்,
மா சிவகுமார்
சின்னப் பையன் என்று எழுதினாலே chiன்னப் பையன் என்று தான் வாசிக்க வேண்டும். ச்சின்ன என்று புதுசு புதுசா எல்லாம் எழுதி வகை வகையா தமிழைக் கொல்ல வேண்டாம். தயவுசெய்து..
Post a Comment