நண்பன் திருடிய தொலைபேசி - அரை பக்கக் கதை
எங்கே போச்சு இந்த போன்? இங்கேதானே வெச்சேன்?
இப்போ 5 நிமிஷத்துக்கு முன்னாடிகூட பேசிட்டிருந்தேனே?
சரிதான். சுரேஷ்தான் எடுத்திருக்கணும்.
நான் பேசும்போது பாத்துக்கிட்டே இருந்தான்.
இப்போ அவனையும் காணோம். போனையும் காணோம்.
என்னோட ஒரே நண்பன் அவன்.
அப்படி எடுத்திருந்தாலும் வந்து கொடுத்துடுவான்.
புது போன்.. நேத்துதான் அப்பா வாங்கிக் கொடுத்தார்.
வரட்டும் அவன். விளையாட இங்கேதானே வந்தாகணும்.
தடிப்பய... கேட்டா கொடுக்கமாட்டேன்னா சொல்லப் போறேன்.
பத்து நிமிஷமாச்சு. இன்னும் அவனை காணோமே?
சரி பக்கத்து வீடுதானே? நாமே போய் பாப்போம்.
இதென்ன...தரையெல்லாம் ஒரே வழுக்குது?
ஆ...என்ன என் வாய்லேருந்து இவ்ளோ ஜொள்ளா?
அதிலேதான் நான் வழுக்கி விழறேனா?
நல்லவேளை.. அம்மா வந்துட்டாங்க...
அச்சச்சோ...என்னடா செல்லம்...வழுக்கிடுச்சா?
ஒரு வயசு இப்பத்தான் முடிஞ்சுது...
அதுக்குள்ளே ஐயாவுக்கு ஓடணும்னு ஆசை வந்துடுச்சா?
மொதல்லே உட்காரு.. கொஞ்ச நாள் கழிச்சி ஓடலாம். சரியா?
சரி சரி. இனிமே வெளியே ஓடமுடியாது. கோலங்கள் ஆரம்பிச்சுடும்... பாக்கவேண்டியதுதான்.நீங்களும் போய் பாருங்க...
கோலங்கள் சூப்பராயிருக்கும்.
7 comments:
என்ன எழவைய்யா இது?
புரியலெயே
அனானி, சீனா:
யோசிக்காமெ விட்டுடுங்க...
சரியா வரலேன்னு நினைக்கிறேன்...
அடுத்த தடவை முயற்சி செய்றேன்.
For those, who read this article, but didnt understand, I am trying to explain the story. The brief part of it is:
When we start reading the story, we might think of the person (who is speaking), is an adult guy.
When we read this line "En vaayilerndhu ivvo Jolla", we might get a little confusion, regarding the age of the person (who is speaking in the story).
When we finished reading the story, then we can understand that the person (who is speaking in the story) is a one year baby and Suresh is a neighborhood small boy. And he is talking about a dummy play phone.
Hope this is understandable.
ஒரு செக்கன்டு எனக்கு மட்டும் தான் புரியலைனு தப்புக்கணக்கு போட்டுட்டேன்.
enakku ellam purinjudu!
...please where can I buy a unicorn?
Post a Comment