Saturday, May 15, 2010

எனக்கு மட்டும் ஏன் இப்படி?



முன்பதிவு, பல்பொருள் அங்காடி இப்படி எங்கே போய் வரிசையில் நின்றாலும், என் வரிசை மட்டும் பிரச்சினையே இல்லாமல் கடகடவென்று முன்னேறி சென்றுவிடுகிறது.

வெகு அவசரமாக போய்க்கொண்டிருக்கும்போது (வீட்டுக்குத்தான்!), வழியில் உள்ள அனைத்து போக்குவரத்து சிக்னல்களிலும் ‘பச்சை’யே எரிந்து கொண்டிருக்கிறது. கொஞ்ச நேரமாவது வழியில் நின்னு, இயற்கையை ரசிச்சிக்கிட்டே போகலாம்னா முடியமாட்டேங்குது.

அலுவலகத்தில் ஏதாவது தவறு செய்துவிட்டு, தலைவர் திட்டுவாரோன்னு கவலைப்படும்போது - அன்றைய தினம் மற்றொருவர் என்னை விட பெரிய தவறு செய்து மாட்டிக் கொள்கிறார். நான் தப்பித்துக்.

அலுவலகத்தில்/வீட்டில் எந்த தளத்தில் ஏறினாலும், காத்திருக்கத் தேவையேயில்லாமல் அதே தளத்தில் எனக்காக மின்தூக்கி காத்திருக்கிறது.

தமிழ்மணம் தொங்கிப் போனாலும், நான் புதுசா போட்ட இடுகை முகப்புப் பக்கத்தில் வந்தபிறகே அது தொங்குகிறது.

திரைப்படம் ஏதாவது பாக்கப்போனால், எனக்கு சீட்டு கொடுத்த பிறகே, ‘ஹவுஸ்ஃபுல்’ மாட்டுகிறார்கள்.

வண்டியில் பெட்ரோல் தீர்ந்து போகும் சமயம், சரியாக எதிரே ஒரு பெட்ரோல் பங்க் வருகிறது.

வீட்டுவேலை காரணமாக அலுவலகத்திற்கு தாமதமாக வந்தால், அன்று என்னைவிட அனைவரும் தாமதமாக வருகின்றனர். அதே வீட்டுவேலை காரணமாக சீக்கிரம் வீட்டிற்குப் போகவேண்டும் என்று நினைத்தால், என்னைவிட சீக்கிரமாகவே அனைவரும் போய்விடுகின்றனர்.

பேட்டரி தீர்ந்துவிடுகிற மாதிரி இருந்தாலும், வரும் அழைப்பை முழுவதும் பேசி முடித்தபிறகே தொலைபேசி சாகிறது.

கடன்/கைமாத்து வாங்கறவங்கல்லாம் குறிப்பிட்ட தேதிக்கு முன்னரே பணத்தை சரியா கொடுத்துடறாங்க.

*****

இப்படி எதிலுமே பிரச்சினை இல்லாமே வாழ்க்கை சுமுகமா போயிட்டிருந்தா நான் என்னதான் பண்றது சொல்லுங்க.

இப்போ மேலே சொன்ன பத்து பாயிண்டிலும் பத்து பிரச்சினை இருந்திருந்தா, பத்து இடுகைகள் போட்டு ஹிட்ஸை தூக்கியிருப்பேன்.

ம்ஹூம். பிரச்சினை வர்றதுக்கும் ஏதாவது கொடுப்பினை இருக்கணுங்க. என்ன சொல்றீங்க?

*****

8 comments:

www.thalaivan.com May 15, 2010 at 7:40 PM  

வணக்கம்
நண்பர்களே

உங்கள் திறமைகளை உலகுக்கு அறியச் செய்யும் ஒரு அரிய தளமாக எம் தலைவன் தளம் உங்களுக்கு அமையும்.

உங்கள் தளத்தில் நீங்கள் பிரசுரிக்கும் சிறந்த ஆக்கங்களை எமது தளத்தில் இடுகை செய்வதன் மூலம் உங்கள் ஆக்கங்களை அதிகமான பார்வையாளர்கள் பார்ப்பதற்கு வாய்ப்பளிப்பதுடன் உங்கள் தளத்திற்கு அதிக வருகையாளர்களையும் பெற்றுத் தரும்.
நன்றி
தலைவன் குழுமம்

www.thalaivan.com


You can add the vote button on you blog:

http://thalaivan.com/button.html

THANKS

Regards,
Thalaivan Team FRANCE
thalaivaninfo@gmail.com

அறிவிலி May 16, 2010 at 12:45 AM  

தோ... பாருங்க.. கமெண்டே போடாம பதினஞ்சு பேரு ஓட்டு போட்ருக்காங்க.இது போதாதா அடுத்த பதிவுக்கு???

அமுதா கிருஷ்ணா May 16, 2010 at 4:51 AM  

ச்ச்சின்னப்பையன்னா இப்படி தான் ஆகும்...

Thamira May 16, 2010 at 12:35 PM  

எனக்கென்னவோ நீங்க ரிவர்ஸில ஃபீல் பண்ற மாதிரியே தோண்றது. :-))

ஜெய்லானி May 16, 2010 at 2:43 PM  

:-)))

ஓட்டு பெட்டியே கானல...

Mahesh May 19, 2010 at 9:23 AM  

அடக்கஷ்டமே... இதையே ஒரு பிரச்னையா போச்சே.... சே.... என்ன கஷ்டம் உங்களுக்கு :(

ஜெய்லானி May 22, 2010 at 4:56 PM  

###########################################
உங்களுக்கு விருது கொடுத்துள்ளேன் வந்து பெற்றுக் கொள்ளவும் நன்றி

http://kjailani.blogspot.com/2010/05/blog-post_23.html
அன்புடன் >ஜெய்லானி <
#############################################

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP