Tuesday, May 4, 2010

உன்னியும், மீனும் பின்னே ஒரு ஜோக்கும்...


எச்சரிக்கை: இது ஒரு அக்மார்க் சொந்தக்கதை/விளம்பர இடுகை. லேபிளிலும் சொல்லிட்டேன். படிச்சப்புறம் - இடுகையில் கருத்து எதுவுமே இல்லையேன்னு சொல்லக்கூடாது, ஆமா.

*****

சென்ற ஞாயிறு மாலை www.ragact.org சார்பாக திரு.உன்னி கிருஷ்ணன் கர்நாடக இசைக் கச்சேரி எங்க மாநிலத்துலே நடந்தது.

4 மணி கச்சேரிக்கு என் கார் (சொந்த கார்!) போய் சேரும்போது மணி 3.58. அரங்க வாசல்லே சுமார் 50 பேர் நின்னுக்கிட்டிருந்தாங்க. நான் கச்சேரி கேக்க வர்றேன்னதுக்கே இவ்ளோ பேர் என்னை வரவேற்க வெளியே காத்திருக்காங்கன்னா, பாட வர்றேன்னா இந்த ஊரே திரண்டு வந்துடுமேன்னு கவலைப்பட்டேன்.

அங்கிருந்த நண்பர்கிட்டே கேட்டதுக்கு உள்ளே ஒலி/ஒளி சரிபார்க்கும் பணி நடைபெறுவதால்தான் அவங்கல்லாம் வெளியே நிக்குறாங்கன்னு சொன்னாரு. திரும்பி தங்ஸை பாத்தபோது, அவர் உமிழ்நீரை துப்பாமல் விழுங்கிக் கொண்டிருந்தது தெரிந்தது.

ஒரு வழியா எல்லாம் சரியாகி - உள்ளே போய் - உன்னி உடனடியாக ஆரம்பித்தார். அடுத்த இரண்டரை மணி நேரம் உன்னியின் இசைமழையில் நனைந்தோம்.

கர்நாடக இசை கேட்கும்போது எல்லோரும் ஏன் தலையை அப்படி இப்படி ஆட்டுறாங்கன்னு தங்ஸ் கேட்டாங்க. இசை மழையில் நனையறதால், அந்த தண்ணி தலையில் தேங்கி - அப்புறம் அதனால் ஜல்ப் பிடிச்சிக்கிச்சின்னா கஷ்டமில்லையா, அதனால்தான் தலையை அப்படி இப்படி ஆட்டி, அந்த (இசை) மழைத்தண்ணியை தள்ளி விட்டுடறாங்கன்னேன். நல்லவேளை, எனக்கு இந்தப்பக்கம் இன்னொருத்தர் உக்கார்ந்திருந்ததால், தங்ஸ் என்னை தள்ளி விடலை!.

தொண்டையில் கிச்கிச் இருந்தாலும் அதை சமாளித்து அட்டகாசமாய் பாடினார் உன்னி. தெலுங்கு, கன்னட மொழிகளில் கர்நாடக சங்கீத பாடல்களைப் பாடியவர் ரொம்ப நேரமாய் தமிழிசைப் பாடல்கள்
பாடவேயில்லை. சிந்துபைரவி சுஹாசினி கணக்கா நானும் எழுந்து கேக்கலாம்னு எழுந்து நிற்பதற்குள், அடடா.. தமிழ்ப் பாடல்கள் ஆரம்பமாயின. கடைசியில் அனைத்தும் தமிழ்ப் பாடல்கள். அத்தனையும் அருமை.

இந்த மாலைப் பொழுதை இனிமையானதாக மாற்றியதற்காக உன்னிக்கு நன்றி கூறி - அடுத்த நிகழ்ச்சிக்குள் கிச்கிச்-சிலிருந்து மீண்டு வர வாழ்த்திவிட்டு வீடு வந்து சேர்ந்தோம்.




*****

ரொம்ப நாளாய் ஏதாவது ஒரு 'குட்டி' வாங்கணும்னு சஹானா சொல்லிக் கொண்டிருந்தார். அந்த வேண்டுகோளுக்கு வெளிப்படையாக ஆதரவு தராமல், வெளியிலிருந்து ஆதரவு தந்துகொண்டிருந்தேன். கொஞ்ச நாள் கழிச்சிதான் தெரிஞ்சது அவங்க கேக்குறது ஏதாவது ஒரு விலங்குகுட்டியாம்.

என்ன குட்டி வாங்கலாம்னு அடுத்த சுற்று பேச்சுவார்த்தை துவங்கியது. ஒவ்வொரு நாளும் அவர் ஏதாவது ஒரு விலங்கு சொல்லி - அதை வாங்க முடியாதுன்னு நாங்க சொல்லி - பிறகு அழுகை, திட்டு, அழுகை, சமாதானம் - இப்படி தொலைக்காட்சி சீரியல் மாதிரி ஒரே சீன் பல நாட்கள் நடந்தேறியது.

டைனோசர் குட்டியிலிருந்து ஆரம்பித்து, குதிரை, பன்றி, பூனை, நாய், எலி, அணில், குருவி வரை நம்மூரில் சர்வ சாதாரணமாய் தெருவில் சுற்றிக்கொண்டிருக்கும் விலங்குகளை (டைனோசர், குதிரை தவிர்த்து!!) வளர்க்கவேண்டுமென்பது சஹானாவின் அவா.

அதுங்கல்லாம் சூசூகக்கா போகும்மா, வீடு நாறிடும். அதுவுமில்லாமே இந்தியன் கவுண்டமணி மாதிரி அதுங்ககிட்டேல்லாம் கடி/அடிபட என்னால் முடியாதுன்னு சொல்லிப் பாத்தாச்சு. ம்ஹூம்.

கடைசியில் ஒரு மனதாக மீன் வாங்குவதென்று முடிவாகி - தொட்டி, மீன்(2) மற்றும் சில அலங்காரப் பொருட்கள் அனைத்தும் வாங்கியாற்று.

அடுத்தது அந்த 2 மீன்களுக்கும் பேர் வெக்கணுமே. அங்கவை, சங்கவைன்னு பேர் வைக்கலாம்னு நினைச்சோம். இந்த மீனோ அமெரிக்க மீன், அதுக்கு எப்படி தமிழ் புரியும்னு நாந்தான் சொல்லி - ஸ்வீட்டி, ப்யூட்டி - அப்படின்னு ரெண்டுக்கும் பேரு வெச்சிருக்கோம். மீனு படத்துலே தெரியுதா?



****

டாக்டர் : இந்த ஜலதோஷம் உங்களுக்கு எப்பத்திலிருந்து இருக்கு?

அவர் : நேத்து ராத்திரி சுமார் 10 மணியிலிருந்து 12 மணி வரைக்குள் வந்திருக்கும்னு நினைக்கிறேன் டாக்டர். அந்த சமயத்தில் எனக்கு தெரியல. நானே காலையில் எழுந்து (டிஷ்யூ) பேப்பர் பாத்துதான் தெரிஞ்சிக்கிட்டேன்.

****

7 comments:

Sridhar Narayanan May 4, 2010 at 4:33 PM  

:))

நல்ல திறமையான பாடகரை ஏன் மேலோட்டமாய் ‘உன்னி’ எனச் சொல்கிறீர்கள்? நல்ல அழுத்தமாக ‘உண்ணி’ என்றேச் சொல்லுங்கள். Wikipediaவும் அப்படித்தான் சொல்கிறது.

Mahesh May 4, 2010 at 9:18 PM  

மழையும், மத்ஸ்யமும் பின்னே ஒரு ஜல்ப்பும்னு தலைப்பு வெச்சுருக்கலாமமோ??

@ஸ்ரீதர் நாராயணன் : மலையாளத்தில் "உன்னி"ன்னு சொல்றாங்க... சின்ன அல்லது குழந்தைன்னு அர்த்தம் சொல்லலாம்.

பனித்துளி சங்கர் May 5, 2010 at 3:42 AM  

ஆஹா நான் இப்பொழுதுதான் முதன் முதலில் அவரைப்பற்றி அறிந்துகொண்டேன் . பகிர்வுக்கு நன்றி !

Thamira May 9, 2010 at 1:06 PM  

உம்ம எழுத்துதான் இந்த லட்சணம்னா போட்டோ புடிக்கிற அழகு அதைவிடவும் கிழியுது.

மீன் தெரியாதது ஒருபக்கம். தேவதை மாதிரி பெண்ணைக்கூடவா கோணயான ஆங்கிளில் படம் பிடிக்கவேண்டும்.?

ஹுஸைனம்மா May 10, 2010 at 4:57 AM  

மீனும் தெரியல, மீனம்மாவும் தெரியல!!

பாலராஜன்கீதா May 14, 2010 at 12:09 PM  

மனம் நிறைந்த இனிய திருமண நன்னாள் வாழ்த்துகள்.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP