நான் என்ன லூசா???
குளிக்கும்போது திரைக்குப் பின்னாலிருந்து எவனாவது கத்தியுடன் குத்த வருவானென்று அடிக்கடி திரையை விலக்கி பார்க்கிறேன். ஆனால், அங்கு ஒருவனுமில்லை.
திரையரங்கில், என் முறை வரும்போது, டிக்கெட் தீர்ந்துவிடப் போகிறது என்று எண்ணுகிறேன். ஆனால் எனக்குத்தான் கடைசி டிக்கெட் கொடுக்கிறான்.
காரில் ஏறும்போது பின்னாலிருந்து எவனாவது நைலான் கயிறுடன் கழுத்தை நெரிக்கப் போகிறான் என்று பின்னால் திரும்பி பார்க்கிறேன். ஆனால் அங்கு யாருமில்லை.
ஒரு தடவையாவது ராங் நம்பர் போட்டு கொஞ்ச நேரம் பேச வேண்டும் என்று நினைக்கிறேன். ஆனால் என் தொலைபேசி எப்போதும் சரியாகவே தொடர்பு ஏற்படுத்தி விடுகிறது.
எப்போதாவது வீட்டில் இரவில் தனியாக இருக்க நேர்ந்தால், மின்சாரம் போய்விடும் என்று பயப்படுவேன். ஆனால் ஒரு முறை கூட அப்படி நடந்ததேயில்லை.
ஒரு நாளாவது அழுகையில்லாத ஒரு தொடர் பார்க்கவேண்டும் என்று தொலைக்காட்சி முன் அமர்கிறேன். அது மட்டும் முடியவேயில்லை.
பேருந்தில் நடத்துனர் எப்போதும் சில்லறை கேட்கிறாறே என்று ஒரு நாள் 5 ரூபாய்க்கு - 20 நாலணா கொடுத்தேன். அப்போதும் என்னை திட்டுகிறார்.
பத்து நாட்கள் கழித்து என் இன்பாக்ஸ் நிறைந்திருக்கும் என்று கணிணி முன் அமர்கிறேன். எண்ணி ஒரு மெயில் கூட வரவில்லை.
ஆணி பிடுங்கச் சொன்னார்கள் என்று ஒரு பெரிய சுத்தியலுடன் அலுவலகம் சென்றேன். கொலை முயற்சி என்று வேலையை விட்டு தூக்கி விட்டார்கள்.
என்ன செய்வது என்றே புரியவில்லை...யாராவது உதவி செய்ய முடியுமா?
3 comments:
எதிர்பார்ப்புகள் பொய்க்கலாம் - அதற்காக லூசு என்றெல்லாம் சொல்ல முடியாது
ஐயோ! பாவம் ச்சின்னப்பையா!
கற்பனையை தவிர்த்து எது நடந்தாலும் ஓகே என்று போய்ப்பாருங்கள்.
பிரச்சனையே இருக்காது.
தெளிய வைத்ததற்கு நன்றி சீனா மற்றும் நானானி....:-)
Post a Comment