Friday, August 29, 2008

நிஜமாகவே விடை பெறுகிறேன்...!!!

இவ்ளோ நாளா என்னோட உளறல்களை பொறுத்துக்கிட்டு வாழ்த்தி, ஊக்குவித்து, திட்டி பின்னூட்டமிட்ட அனைத்துப் பதிவர்களுக்கும் நன்றி...

கொஞ்ச நாள் இந்த பூச்சாண்டிக்கு ஓய்வு கொடுக்கலாம்னு நினைக்கிறேன்.
அதனால், பை பை!!!

எல்லோரும் கொஞ்ச நாள் ஜாலியா இருங்கப்பான்னு சொல்லலாம்னு நினைச்சேன் - ஆனா... ஆனா...

அடுத்த மாசம்... வேறொரு இடத்திலேந்து உங்கள் இதே ச்சின்னப் பையன் மீண்டும் வரும்வரை..... நன்றி... வணக்கம்...!!!

Read more...

Wednesday, August 27, 2008

சின்னமணிக்கு பிறந்த நாள்!!!




அவங்களோட ஒரே ஒரு லேட்டஸ்ட் put and give-ஐ சொல்றேன். கேட்டுக்குங்க...
சின்னமணி இப்போ நீச்சல் கத்துக்கிட்டுருக்காங்க. குளத்தில் இருக்கும்போதும் அந்த பயிற்சியாளரிடம் வளவளன்னு பேசிட்டிருப்பாங்க. அந்த மாதிரி பேசாமே நீச்சல் அடின்னு தங்கமணி அவரிடம் சொல்ல - அடுத்த நாள் வகுப்புக்கு போனவுடனேயே பயிற்சியாளரிடம் - My Mommy told not to talk to you - அப்படின்னுட்டாங்க. அங்கிருந்தே அந்த பயிற்சியாளர் எங்களைப் பார்க்க - நாங்க வெக்கப்பட்டுக்கிட்டு வேறேங்கோ பார்த்துக்கொண்டிருந்தோம்.!!!!

இவ்ளோ சொல்லிட்டு சின்னமணி பேர் சொல்லலேன்னா எப்படி... அவங்க பேர் சஹானா...

Read more...

Tuesday, August 26, 2008

மணிரத்னம் - மென்பொருள் நிபுணரானால்!!!

கணிணித்திரையை கொஞ்சம் வெளிச்சமா வெச்சிக்கோங்க.. கண்ணு 'டொக்'காயிடப் போகுது.
-----
எதுக்கு அருமையான மென்பொருள் பண்ணிட்டு, லாகின் திரையிலே 'இந்த மென்பொருளில் வரும் அனைத்து திரையும் கற்பனையே' அப்படின்னு போட்டிருக்கீங்க?
-----
100 வரிகள்லே எழுதவேண்டிய கோடிங்கை, எதுக்கு சின்னசின்னதா எழுதி 1000 வரி வரைக்கும் இழுத்திருக்கீங்க?
-----
எதுக்கு அடிக்கடி கூகிள்லே 'பழைய அமெரிக்க மென்பொருள்' அல்லது 'பழைய உலக மென்பொருள்' அப்படின்னு தேடிக்கிட்டிருக்கீங்க?
-----
உங்க மென்பொருள் வேலையே செய்யாமே சுத்தமா படுத்துடுச்சுன்னா, உக்காந்து அந்த பிரச்சினையை தீர்க்கப் பாருங்க. அதை விட்டுட்டு கணிணி பக்கத்துலே போய் 'ஏந்திரு (எழுந்திரு) மென்பொருள் ஏந்திரு'ன்னா, பிரச்சினை எப்படி சால்வாகும்?
-----
நீங்க எதுக்கு அந்த மீட்டிங்குக்குப் போனீங்க? க்ளையண்ட் நீங்க மேனேஜரா,இல்லையான்னதுக்கு 'தெரியலியேப்பா'ன்னு வேறே சொல்லியிருக்கீங்க...
-----
உங்க மென்பொருளோட பயன்பாட்டைப் பாத்துதான் எல்லோரும் எழுந்து நின்னு கைதட்டணும். நடு நடுவே தேசிய கீதத்தைப் ஒலிபரப்பி எல்லோரையும் எழுப்பி நிக்க வெக்காதீங்க...

-----
மீட்டிங்லேயும் சரி.. உங்க அறையிலேயும் சரி... எப்பவும் விளக்கை அணைச்சியே வெச்சிருக்கீங்க. போற வர்றவங்கல்லாம் அடிக்கடி எதிலேயாவது இடிச்சிக்கறாங்க... எதுக்கு இப்படி இருக்கீங்க?

-----
நீங்க செய்யற எந்த மென்பொருள பாத்தாலும் - அதை முன்னாடியே வேறே எங்கேயோ பாத்தா மாதிரியே இருக்கே? ஏன் அப்படி?

Read more...

Monday, August 25, 2008

இப்படிக்கு...

















Read more...

Saturday, August 23, 2008

ஒரே ஒரு பஞ்ச் டயலாக் சொல்லிக்கறேன்!!!

முதலில், காஞ்சனா ராதாகிருஷ்ணன் அவர்களுடைய இந்த பதிவையும், பின்னூட்டங்களையும் பார்க்கவும். அதற்கான பதில்தான் இந்த பதிவு.
எனக்கு ஆதரவாக அங்கே எழுந்த குரல்களுக்கு நன்றி... ஒரே ஒரு பஞ்ச் டயலாக் சொல்லலாம்னு நினைச்சேன். அதுக்காகத்தான் இந்த பதிவு.




இதை படிக்கும் எல்லாரும் ஒரு நிமிடம் உங்க கையை மௌஸ்லேர்ந்து எடுத்துட்டு - என்னை மாதிரியே - உயர்த்தி பிடிங்கப்பா.
கா.ரா. ஐயா... எனக்கு பின்னாடி 5.95 கோடி மக்கள் இருக்காங்க.
இது காசோ / செக்கோ / மணி ஆர்டரோ / டிடியோ எதுவுமே கொடுத்து சேர்ந்த கூட்டமில்லை.
இது அன்பாலே சேர்ந்த கூட்டம்.
ஓகேவா?
பின்: பதிவு அவ்வளவுதான். எல்லாரும் கையை இறக்கிடுங்கப்பா. அவ்வ்வ்வ்...

Read more...

Friday, August 22, 2008

பொழுது போகலேன்னா என்ன செய்யலாம்?

நேற்று மகளுக்கு தமிழ் கற்றுக்கொடுத்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று தோன்றியது இந்த பதிவுக்கான ஐடியா.
இங்கே இணைத்திருக்கும் படத்தில் (தமிழ் எழுத்துக்கள் அட்டவணை) ஆங்காங்கே பல வார்த்தைகள் தென்பட்டன. அவற்றை கட்டம் போட்டுக் காட்டியிருக்கிறேன்.
இவற்றில்:
-- அழகான தமிழ் வார்த்தைகள்
-- ஆங்கில வார்த்தைகள்
--இந்தி வார்த்தைகள்
--குழந்தைகளிடம் பேசும் வார்த்தைகள்
--மற்றும் நாம் சாதாரணமாக பேசும் வார்த்தைகள்
என எனக்குத் தெரிந்த வார்த்தைகள் பலவற்றை கட்டம் போட்டுக் காட்டியிருக்கிறேன்.
தலைப்பில் சொன்னாமாதிரி - என்னைப் போலவே - இருக்கறவங்க, மேலும் முயற்சித்து பல பெரிய வார்த்தைகளைக் கண்டுபிடிக்கலாம்.


Read more...

Thursday, August 21, 2008

வலைப்பதிவர் சந்திப்புக்கு சற்றுமுன்...






ஹலோ...

வாங்க வாங்க... எப்படி இருக்கீங்க.
நானும் சூப்பரா இருக்கேன். இன்னும் அவங்கல்லாம் வரலியா?

இல்லீங்க. நானும் அவங்களுக்காகத்தான் காத்திருக்கேன்.

எத்தனை மணிக்கு வரேன்னு சொல்லியிருந்தாங்க.

வழக்கமா 6 மணிக்கு வந்துடுவாங்க.

இன்னிக்காவது போண்டா குடுப்பாங்களா?

எனக்கு கடலைதான் பிடிக்கும்.

இவங்க எதைப்பத்தி பேசுவாங்க?

அட. எதைப்பத்தி பேசினா என்னங்க. நாம சும்மா கேக்கத்தானே போறோம்.

ஏன், நீங்க நடுவிலே பேசவே மாட்டீங்களா?

பேசினா அடிச்சிபுடுவாங்க.

ஐயோ. அடிச்சிடுவாங்களா?

பின்னே, சமயத்திலே போலிஸ் கையிலே கூட பிடிச்சி குடுத்துடுவாங்க.

அட. நீங்க வேறே பயமுறுத்திக்கிட்டு... ஆமா உங்க பேரு சொல்லவேயில்லையே?

பேரெல்லாம் எதுக்குங்க இப்ப?

ஓ. நீங்க அனானியா, அப்ப இருங்க. உங்க மூஞ்சி தெரியாமே ஒரு புகைப்படம் எடுத்துக்கறேன்.

ஏய். ஏன் இப்ப புகைப்படம்லாம் எடுக்கறீங்க. நீங்க என்ன பத்திரிக்கைக்காரவுங்களா?

ஏங்க. நானும் உங்கள மாதிரி பதிவு போடறவந்தான்.

பதிவா? அப்படின்னா?

அட.. அனானி பேர் தெரியக்கூடாதுன்னா பரவாயில்லே. அதுக்காக, பதிவுன்னா என்னன்னே தெரியலேன்னு சொன்னீங்கன்னா நான் எப்படி நம்பறது?

யோவ், நான் இங்கே காலேஜ் பொண்ணுங்க வருவாங்க, அவங்கள பாக்கலாம்னு உக்காந்திருக்கேன். இங்க வந்து...

என்னது? காலேஜ் பொண்ணுங்களா? அப்போ நீங்க தமிழ் வலைப்பதிவர் இல்லையா?

அதான் இல்லேன்னு தெளிவா சொன்னேன்லே?

அடச்சே - நம்ம நண்பர் தன்னைத்தானெ நொந்துகொண்டு, சற்றுத்தள்ளி அமர்ந்திருப்பவரை பார்த்து - ஹலோ....

பின்: மேலே படத்தில் இருக்கும் ஜிங்காரோவுக்கும் படத்தை அளித்த டிபிசிடிக்கும் நன்றி.. நன்றி.. நன்றி...
இன்னொரு பின்: இன்னிக்கு alignment ரொம்பவே பிரச்சினையாயிருக்கு. திடீர்னு தமிழ்லே அடிச்சதெல்லாம், ஆங்கிலத்துக்கு மாறிடுது. அதனாலே, alignment ப்ராப்ளத்தை கொஞ்சம் பொறுத்துக்கோங்க....

Read more...

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP