நானும் ஒரு தேசிதான்.
நான் பார்த்தவரை அமெரிக்காவில், தேசிகளைப் பார்த்து ஒரு அமெரிக்கரோ, மக்கு'வோ (மெக்சிகன்ஸ் - எங்க ஊர்லே அதிகம்), கூட ஹாய் சொல்லிடுவாங்க. ஆனா ஒரு தேசி இன்னொரு அறிமுகமாகாத தேசியை பார்த்தவுடன் ஹாய் சொல்லவே மாட்டாங்க. டக்குன்னு தலையை திருப்பி வேறெங்கோ பார்த்துக்கிட்டே போயிடுவாங்க. அப்படியும் ஒரு தேசி நம்மைத் தேடி வந்து ஹலோ சொல்றான்னா, அதுக்கு ஒரே ஒரு அர்த்தம்தான் இருக்க முடியும். அது என்ன? கீழே படிங்க.
கடனட்டையை காரிலேயே வைத்துவிட்டு, வால்மார்ட்டில் ச்சும்மா சுற்றிக் கொண்டிருந்த நேரம். எதிரில் ஒரு தேசி. என் கட்டிடத்தில்தான் வேலை பார்க்கிறார். ஆனாலும் ஒரு தடவைகூட பேசியதில்லை. அதனால், நேற்றும் நான் பார்த்தும் பார்க்காத மாதிரி அவரைக் கடந்து சென்றேன்.
திடீரென்று, ஹலோ என்று கை நீட்டினார். சரின்னு நானும். என்ன பேர், ஊர், குடும்பம், குழந்தைகள் அப்படின்னு எல்லாம் பேசி முடித்தபிறகு, முக்கியமான விஷயத்துக்கு வந்தார். நான் ஒய்வு நேரத்தில் ஒரு தொழில் செய்கிறேன். என்கிட்டே நிறைய பேர் வேலை செய்றாங்க என்றார். அப்பத்தான் எனக்கு மண்டையில் பல்பு எரிஞ்சுது. உங்களுக்கு தொழில் செய்ய ஆர்வமிருக்கா என்று கேட்டார்.
நானும், என்ன தொழில் என்று கேட்க, ஒரு மினி அமேசான் நடத்துறேன். நிறைய பணம் கிடைக்குது. உங்களுக்கும் நல்லதுதான் என்றார். என்னை விட்டுடுங்க. நான் வரலே இந்த விளையாட்டுக்கு என்றவுடன், டக்கென்று கேட்டார் - "அப்ப எந்த தொழில்னு ஏன் கேட்டீங்க?"
சமீபகாலமா சிலபல நண்பர்களால்(!) அடைந்த மனஉளைச்சலால் நான் மீனாக மாறிவிட்டேன். இதை என் குழுவினரும், குடும்பத்தினருமே கண்டு சொல்லியிருக்கின்றனர். மீன்? அதாவது, I have become very meanன்னு சொன்னேன். :-)
ஏங்க, நானா வந்து தொழில் பற்றிய பேச்சை எடுத்தேன்? நீங்க சொன்னதால், பேச்சை வளர்ப்பதற்கு என்ன தொழில்னு கேட்டேன்னு சொன்னேன்.
அவரும் விடாமல் - சரி, இந்த தொழிலை ஏன் உங்களால் செய்ய முடியாது? என்றார்.
எனக்கு நேரமே கிடையாது.
இப்படித்தான் எல்லாருமே சொல்றாங்க. அப்படி என்னதான் செய்யறீங்க ஓய்வு நேரத்தில்?
இந்த இடத்தில் நான் சுறாமீனாகிவிட்டேன்.
யோவ், அடுத்தவன் நேரமில்லேன்னு சொன்னா, அவனைப் போய் கேளு. என்கிட்டே வராதே. நான் ஓய்வு நேரத்தில் என்ன செய்யறேன்னு உனக்கு சொல்லத் தேவையில்லை - என்றேன்.
சரி சரி. இப்போ நேரம் சரியில்லை. நான் உங்களை ஆபீஸ்லே சந்திச்சி பேசறேன் - என்றவாறு ஓடிவிட்டார் அந்த தொழிலதிபர்.
இப்போ நிஜமாவே யார் என்னைப் பார்த்து சிரிச்சாலும், எனக்கு சந்தேகமாவே இருக்கு. என்னையும் தொழிலதிபர் ஆக்காமே விடமாட்டாங்களோன்னு. அதனால் நானும் எந்த தேசியைப் பார்த்தாலும், டக்குன்னு வெக்கப்பட்டு தரையை பார்க்க ஆரம்பிச்சிடறேன்.
சரிதானே?
***
8 comments:
இப்படி யாரும் கேட்கலைன்னா நம்மகிட்ட ஏதோ குறையிருக்குன்னு அர்த்தம்.
சரி, வாரயிறுதியில என்ன பண்றீங்க? தொழில் செஞ்சு சீக்கிரம் பெரிய ஆள் ஆக ஆசையிருக்கா? ஒரு மணிநேரம் இருந்தாப் போதும். அழைக்கலாமா?
சத்யா, இளாவை நம்பாதீஙக, ஒரு முறை மளிகைக் கடையில் ஒருத்தன் இப்படி பேச்சுக் கொடுத்த போது இந்த ஆள் என்னை மாட்டி விட்டுட்டு நகர்ந்து போயிட்டார்.
புதுசா ஒரு தேசியை குடியிருப்பில் சந்த்தித்தால் நானாகப் போயி பேசுவது என் வழக்கம், இந்தக் கொசுக்களால் என்னையும் அப்படி நெனச்சிடுவாங்களோன்னு இப்பல்லாம் தயக்கமா இருக்கு
என்றும் அன்புடன்
பாஸ்டன் ஸ்ரீராம்
//இப்படி பேச்சுக் கொடுத்த போது இந்த ஆள் என்னை மாட்டி விட்டுட்டு நகர்ந்து போயிட்டார்//
மொசப்புடுக்கிற நாய் மூஞ்சியப் பார்த்தா தெரியாதா? ”அவுங்களுக்கு”ன்னு தனியா ஒரு சிரிப்பு இருக்கும். அப்படியே நம்ம சத்யராஜ்குமார் எழுதின கதையையும் படிங்க. Same Mattai But in Old Kuttai 2004 மோப்பக் குழையும்
ஆமாம், இந்த வியாதி தேசிகளுக்கு மட்டும் ஏன்? இப்பல்லாம் வால்மார்ட் போனாலே யாரையும் 'கண்ணோடு கண்' பார்க்காமல் ஓட வேண்டியிருக்கிறது!
வாங்க இளா, ஸ்ரீராம் -> இதுக்குத்தான் ஆணியே புடுங்க வேணாம்னு நான் ஒதுங்கி போயிடுவேன். :-)))
//
இந்த இடத்தில் நான் சுறாமீனாகிவிட்டேன்.
//
:)
இது ஒரு உலகளாவிய பிரச்னை...
தொடர்புடைய என் பதிவு http://kirukkugiren.blogspot.com/2009/04/blog-post_07.html
Mini Amazon = Amway?
Either myway or amway. LOL
I've seen this marketing stooping to indecent levels.
Post a Comment