Sunday, December 12, 2010

உப்புமாவுக்கு ஒரு அருமையான ரெசிப்பி!

எங்க வீட்டுப் பக்கத்து வீட்டில் ஒரு குட்டிப்பையன் (தென் அமெரிக்கன்) இருக்கான். 4 வயசுதான் இருக்கும். நல்லா துறுதுறுன்னு இருப்பான். இன்னும் குட்டியா இருந்தபோது என்னைப் பார்த்து சிரிச்சிக்கிட்டிருந்த அவன், கொஞ்ச நாளா எங்கே பார்த்தாலும் ஓடி வந்து அடிக்க ஆரம்பிச்சிடறான். அடின்னா எங்க/உங்க வீட்டு அடியில்லே. வடிவேலு வாங்குற மாதிரிதான்.

நானும் ஓரிரு முறையில் சரியாகிவிடும்னு பாத்தால், ம்ஹூம். அப்புறம் நான் அவனைப் பார்த்தாலே ஓட ஆரம்பிச்சேன். அவங்க பாட்டிதான் எப்பவும் மன்னிப்பு கேப்பாங்க. நானும் - சரி விடுங்க. ச்சின்னப் பையந்தானே ( நானில்லை. அவன்) பரவாயில்லைன்னு போயிடுவேன்.

எவ்ளோ நாள்தான் வலிக்காத மாதிரியே நடிக்கறது - ஒரு தடவை தங்ஸ்கிட்டே சொன்னேன். இப்படி பையன் போட்டு சாத்தறான்னு. அவ்வ். சொல்லாமலேயே இருந்திருக்கலாம். அப்படி இருந்தது அவங்க கேட்ட கேள்விகள்.

அந்த பையன் எதிரே ஏதாவது தப்புத்தண்டா பண்ணினீங்களா?

ஆஹா. ஒரு வேளை அதுவாயிருக்குமோன்னு சந்தேகம் வந்தாலும்.. ச்சீச்சீ. நான் போய் அவன் எதிரே. இல்லேம்மா - என்றேன்.

அவனோட பொருள் எதையாவது எடுத்துக்கிட்டீங்களா?
அவங்கம்மா கிட்டே பேசினீங்களா?

’மை நேம் இஸ் கான்’ விமான நிலைய சோதனை மாதிரி கேள்விகளால் துளைச்சி எடுத்துட்டாங்க. இதுக்கு அந்த பையன் அடிக்கறதே தேவலைன்னு ஆயிடுச்சு.

இப்படியாக டாம்கிட்டே மாட்டின ஜெர்ரி மாதிரி நான் தப்பிச்சி ஓடிட்டிருந்தபோது ஒரு நாள் - மின்தூக்கியில் அவன்கிட்டே வசமா மாட்டிக்கிட்டேன். அவன் என்னை அடிக்க, பாட்டி அவனை அடிக்க - அவன் அழ - (அட, நான் அழலீங்க!) அந்த குட்டி மின்தூக்கியில் ஒரே அடிதடி-ரணகளம்தான்.

பாட்டிக்கும் பேரனுக்கும் நடுவே புகுந்த நான் - விட்டுடுங்க. பாவம் பையன்னு சொன்னா - பாட்டி சொன்னதுதான் சோகம்.

அந்தப் பையனுக்கு ஏதோ மருத்துவ பிரச்சினை. தினமும் நிறைய மருந்து மாத்திரைகள் சாப்பிடறானாம். அதனால் கொஞ்சம் ‘அப்படி இப்படி’ ஆயிட்டான். தினமும் நல்லா அடி வாங்கறான். வயசானா சரியாயிடும்னு மருத்துவர்கள் சொல்றாங்கன்னாங்க.

வாழ்க்கையே வெறுத்துப் போச்சு.

முன்னெல்லாம் அவன் அடிக்காக பயந்து ஓடிட்டிருந்த நான், இப்போ அவனையே பார்க்க தைரியமில்லாமல் ஓடி ஒளியறேன்.

*****

ஒரு தகுதிச் சான்றளிப்புக்காக படிக்க வேண்டியிருந்ததால், ரெண்டு வாரமா மென்பொருள் தரம் தொடர் வரவில்லை. அதுக்குள்ளே பல்லாயிரக்கணக்கான (சரி சரி!) மின்னஞ்சல்கள். இனிமே வாரம் ஒரு பகுதி சரியா வந்துடும்னு எல்லாருக்கும் தனித்தனியே சொல்றதுக்குள்ளே மௌஸ் (நாக்கு) தள்ளிடுச்சு.

*****

காலையில் சிற்றுண்டிக்கு சப்பாத்தி வைக்கும்போது - அட, காலையில் சப்பாத்தியா.. ஒரு இட்லி, தோசை இருந்தா நல்லாயிருக்குமேன்னு சொல்லுவோம். அப்புறம் கொடுக்கறத வாங்கி சாப்பிட்டு, மதியம் டப்பாவை திறந்தா - காலையில் வேணான்னு சொன்ன அதே சப்பாத்தி வந்திருக்கும். சரி. வீட்டுக்கு போய் சமாளிச்சிக்குவோம்னு அதை சாப்பிடாமேயே எடுத்து வந்திட்டா - திட்டு விழுந்து - மறுபடி சூடு பண்ணி நமக்கே கொடுத்திடுவாங்க. எப்படி இருந்தாலும் அந்த சப்பாத்தியிலிருந்து தப்பிக்க முடியாது.

அதே மாதிரிதான் இந்த ட்விட்டர் ட்விட்டுகளும். ஒழுங்கா அங்கேயே வந்து படிச்சிருந்தீங்கன்னா, நான் மறுபடி இங்கே போடத் தேவையிருந்திருக்காது. என்ன பண்றது, நீங்க அங்கே வரலை, அதனால் அதை மறுபடி இங்கே போடறேன். இங்கேயாவது படிங்க!!.

**

வெயில் காலத்தில் குளிர் காலமே பெட்டர்னு தோணுது. அதே குளிர் காலம் வந்துட்டா, குளிர் காலமே பெஸ்ட்ன்னு தோணுது.

1000 வசதிகள் இருந்தாலும், பக்கத்து வீட்டில் இருக்கும் அந்த 1001 வது வசதி இல்லையேன்னு நினைப்பதுதான் மனித இயல்பு!

டாக்டர் விஜய் அம்மா கட்சியில் சேர்ந்துட்டாருன்னா, அவரோட ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் அம்மா கேரளா போய் சிலைக்கு மாலை போடுவாங்களா?

குளிர் + சூடான தேநீர் + மிக்ஸ்சர் + படிக்கற மூட் இல்லே = கவிதை எழுதிடலாமான்னு தோணுது

உளியின் ஓசை & பெண் சிங்கம் ரெண்டும் இல்லாததால் Netflix எடுக்காமே இருக்கேன்.

குளிருக்கு மங்கி தொப்பி அணிந்தேன். உங்களுக்கு பொருத்தமா இருக்குன்றாங்க வீட்டுலே. எந்த அர்த்தத்துலே சொல்றாங்கன்னே தெரியல

எங்க ஊர்லே, முன்னர் காவல் நிலையம் இருந்த இடத்தில் வங்கி வருது. பணம் போடப் போனா டீ வாங்கிட்டு வரச் சொல்வாங்களோ!

இப்போதைக்கு தமிழில் எனக்குப் பிடித்த இரு வார்த்தைகள் - லீக் மற்றும் (டேப்) ரிலீஸ்

Amount given per Vote should be directly proportional to the number of Tapes released. #JaiHo

வீட்லே இருக்கும்போது மழை பெஞ்சா ஆபீஸுக்கு போகவேணாம். ஜாலி. ஆபீஸில் இருக்கும்போது மழை பெஞ்சா வீட்டுக்கு போகவேணாம். ஜாலியோ ஜாலி!

காருக்குள் சாவி வெச்சி வண்டியை பூட்டிட்டேன். நல்லவேளை நானும் உள்ளேயே இருந்ததால், தொறந்துக்கிட்டு வெளியே வந்துட்டேன்.

*****

இதோ உப்புமாக்கான ரெசிப்பி. பிற்காலத்தில் செய்வதற்காக சஹானா இப்பவே எழுதி அதை அவங்க கோப்பில் சேமித்து வெச்சிட்டாங்க. நீங்களும் இதை பயன்படுத்தி, உப்புமா எப்படி வந்திருக்குன்னு சொல்லுங்க.



*****

11 comments:

Ananth,  December 12, 2010 at 11:46 PM  

nice.

Ananth Kaliannan,
Chicago

துளசி கோபால் December 13, 2010 at 12:04 AM  

பாட்டி பையனை அடிக்கறாங்களா?
அச்சச்சோ..... பார்த்துக்குங்க.பாட்டியை உள்ளெ தள்ளிடப் போறாங்க:(

அமுதா கிருஷ்ணா December 13, 2010 at 12:49 AM  

உப்புமா சோ ஸ்வீட்...

Vidhya Chandrasekaran December 13, 2010 at 2:57 AM  

ஜெய் ஹோ ட்வீட் - ஐன்ஸ்டீன் நீங்க:)

tamil blogs December 13, 2010 at 3:22 AM  

உங்கள் தளத்தை இங்கு இணையுங்கள் த
மிழ் வலைப்பூக்கள்

http://tamilblogs.corank.com/

Anonymous,  December 13, 2010 at 7:09 AM  

I like the "dot" in the recipe. Punctuation :-) - Sugu

அறிவிலி December 13, 2010 at 8:47 AM  

குழந்தை அடுப்பு பத்த வைக்கறது பாதுகாப்பில்லைதான்.கொஞ்ச நாள் கழிச்சு மறக்காம ஒரு வரி சேக்க சொல்லிருங்க...

தெய்வசுகந்தி December 13, 2010 at 10:51 PM  

நல்ல உப்புமா ரெசிபி!!

RVS December 18, 2010 at 10:24 AM  

பிரமாதமான ரெசிபி. பார்த்ததே சாப்டா மாதிரி இருக்குங்க.. ட்வீட்கள் அருமை. ரசித்தேன். ;-)

Thamira December 21, 2010 at 7:12 AM  

முதல் பகுதியின் முடிவில் இப்படியொரு சோகம் எதிர்பார்க்கவில்லை.

ட்வீட்ஸ் ரசனை.

முதல் ட்வீட்.. உங்களாலதான் எழுதமுடியும், படிக்கிறவனையும் லூசாக்குற மாதிரி.

  © Blogger templates The Professional Template by Ourblogtemplates.com 2008

Back to TOP