தங்ஸ் கேட்கும் கேள்விகள்!
தொலைக்காட்சியில் எந்த நிகழ்ச்சியும் இல்லாமல், தொலைபேசியில் எந்த தோழியும் சிக்காமல் பொழுது போகலேன்னா, தங்ஸுக்கு என்னை கேள்வி கேட்பது ரொம்ப பிடிக்கும். அதுவும் எனக்கு பதில் தெரியாதுன்னு தெரிஞ்சும் கேட்கப்படும் கேள்விகள் அவருக்கு ரொம்ப இஷ்டம்!
*****
முதல் (1 of many) கேள்வி - - இந்த புடவை (அல்லது ஏதோ ஒரு ஆடை) எப்போ வாங்கினது சொல்லுங்க. பாப்போம்.?
கேக்கறது வாங்கிக் கொடுக்கறது, கொடுக்கறது வாங்கிப் போட்டுக்கறது மட்டுமே தெரிஞ்ச எனக்கு, எந்த ஆடைக்கும் அதன் ஆடைமூலம் (like ரிஷிமூலம்) நினைவிருக்காதுன்னு அவங்களுக்கு நல்லாவே தெரியும்.
பதில் தப்பாயிருந்தாலும் பரவாயில்லைன்னு - நாமதானே தி. நகர்லே வாங்கினோம் அல்லது சென்னை சில்க்ஸ்லே வாங்கினோம்னு சொல்லிட்டா - க்கும். நீங்க வாஆஆஆங்கிக் கொடுத்துட்டாலும்னு ஒரு புது ராகத்துலே இழுத்து பேசுவாங்க.
சரி சமாளிப்போம்னு - ஏம்மா, நீங்க புடவை ஒரு தடவையா வாங்கறீங்க? வாங்கிட்டு வந்ததை, 4 தடவை மாத்தறீங்க. ஒவ்வொரு தடவையும் எதை வாங்கறீங்க எதை மாத்தறீங்கன்னு நான் எவ்ளோ புடவையை ஞாபகம் வெச்சிக்கறது? - ன்னு கேட்டா, அவங்க - வாங்கின / வாங்காத / மாத்தின / மாத்தாத புடவைகள் எல்லாத்தையும் வரிசையா ஒண்ணு, ரெண்டுன்னு ஔவையார் மாதிரி வரிசைப்படுத்தி பாடி நம்மை இம்சைப்படுத்துவாங்க.
சரிசரி.. இதெல்லாம் நம்ம வீர வாழ்க்கையில் ஜகஜம்தானேன்னு நினைச்சிக்கிட்டு சூனாபானா மாதிரி போயிட்டே இருக்கவேண்டியதுதான்.
*****
அடுத்த (2 of many) கேள்வி - நம்ம கல்யாணத்தன்னிக்கு நான் என்ன வண்ண ஆடை போட்டிருந்தேன், சொல்லுங்க பாப்போம்?
அவ்வ்வ். இதுக்கு முதல் கேள்வியே பரவாயில்லைன்னு ஆயிடும்.
நல்ல கொளுத்துற வெயில் காலத்தில், ஒரு ச்சின்ன மண்டபத்துலே ஒரு ஐநூறு பேரை அடைச்சி வெச்சி, நடு நடுவே மின்சாரத்தை நிறுத்தி, வேர்க்க விறுவிறுக்க ஒருத்தியை(!) பக்கத்துலே நிக்க வெச்சி, கட்றா தாலியை - கொட்றா மேளத்தைன்னு சொல்லும்போது - உஃப்.. இருங்க மூச்சு வாங்குது - நான் ஆடை போட்டிருக்கிறேனான்னே பாக்க தோணாதபோது, பக்கத்தில் நிக்குறவ என்ன வண்ண ஆடை போட்டிருக்கான்னு எப்படி பாக்கறது சொல்லுங்க?
ஆனா, அதெல்லாம் சொன்னா அவங்க ஒத்துக்க மாட்டாங்க. அதனால் எனக்குத் தெரிஞ்ச நாலைஞ்சி வண்ணத்தை சொல்ல ஆரம்பிப்பேன். பச்சை? சிகப்பு? மஞ்சா? கண்டிப்பா இதுலே ஏதாவது ஒரு வண்ணம் சரியா இருக்கும்.
இப்படித்தான் பற்பல கேள்விகளுக்கு - choose the best answer - முறையில் வாழ்க்கை ஓடிட்டிருக்கு. CTBA கண்டுபிடிச்சவன் வாழ்க!!
*****
என்னங்க, இங்கே கொஞ்சம் வாங்க..
ஐயய்யோ! ஏதோ ஒரு கேள்வி கேக்கப்போறாங்க. நான் வெளியே ஓடிப் போகப் போறேன்.. என்னை ஆள விடுங்க. அடுத்த இடுகையில் சந்திப்போம்.
*****
17 comments:
வீட்டுக்கு வீடு வாசப்படி. உங்க வீட்டுல சின்ன வாசப்படி...
அன்பின் சின்னப்பையன்
சிடிபிஏ நல்ல முறை பதில் சொல்வதற்கு - கடைப்பிடிக்கலாம். ஆமா கட்றா தாலிய - சொன்னது யாரு - தங்க்ஸா
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
//நம்ம கல்யாணத்தன்னிக்கு நான் என்ன வண்ண ஆடை போட்டிருந்தேன், சொல்லுங்க பாப்போம்?//
இந்த லொள்ளே வேணாம்னுதான் கூரைப் புடவைன்னு (மெரூன் கலர்ல) ஒரு யூனிபார்ம் வச்சிடறாங்க, போலிருக்கு!
நீங்க பேசாம டீவியை on செய்திட்டு எஸ் ஆயிடுங்க. அவங்க வாய் புலந்திட்டு டீவியை பாத்துக்கிட்டு இருப்பாங்க. நீங்க எஸ் ஆனதை அவங்க கண்டுக்க மாட்டாங்க!
இந்தக்கேள்வி இதுவரை கேட்டதில்லையா?
“நான் வெயிட் குறைஞ்சிருக்கேனா?”
சரியான விடைன்னு ஒண்ணு இல்லவே இல்லாத கேள்வி இது. அது மட்டும் இல்லை - எந்த பதிலை சொல்லியும் தப்பிக்கவும் முடியாத கேள்வி!
ஹஹஹ...ஆகா பயமுறுத்துறாங்களே....செம காமெடி தலைவரே.... :))
:)))))
நல்ல காமெடி!
ஒரு முக்கியமான கேள்விய விட்டுடிங்க போல... ஏங்க உங்களுக்கு என்னை பிடிச்சிருக்கா? (கல்யாணம் ஆகி ௰ வருஷம் தாண்டி கேட்குற ஒரே கேள்வி இது தான்).
இண்னைக்குக் காலேலயே மனசுவிட்டுச் சிரிக்க வச்சீங்க சின்னப்பையன்.நன்றி.
:)))
இருக்குறீங்களா:)
ada ada ada!
கலக்கல்.
சீனியர்னா சீனியர்தான். ராம்சுரேஷின் கேள்வி யுனிவர்சல் போலயிருக்கு.! :-))
:-)
ராம்சுரேஷின் பின்னூட்டம் உண்மை!!
"அனுபவம் புதுமை அவளிடம் கண்டேன்" என்று கண்ணாலத்தண்டு பாடிப்புட்டு இன்னிக்கு புடவக்கலர் தெரியாம முழிக்கிரது நன்னாயிருக்கா ச்சின்னபையா!
ஏதோ படிச்சோம் சிரிச்சோம் என்ன்றிருக்காம இதையே வீட்டில சொல்லி எத்தினி ஜென்மம் அடிவாங்கப் போகுதோ தெரியவில்லை!
தெரியாத்தனமாக என் மனைவி முன்னால் இதை படித்துவிட்டேன், பலன் இன்று மட்டன் பிரியாணிக்கு பதிலாக புளிசாதம்... திருப்தியா இப்போ??? நல்லா இருங்க...
-வீணாபோனவன்.
Post a Comment